செய்திகள் :

"கேவலம்... இதைவிட மோசமாக சொல்ல வார்த்தையில்லை!" - படுதோல்வி குறித்து ஷ்ரேயாஸ் காட்டம்

post image

இங்கிலாந்துக்கு எதிரான டி20 போட்டியில் இந்திய அணி 125 ரன்கள் வித்தியாசத்தில் மிக மோசமான தோல்வியை சந்தித்தது. இது டி20 வரலாற்றில் ரன்கள் அடிப்படையில் இந்தியா சந்திக்கும் மிகப்பெரிய தோல்வியாகும்.

இங்கிலாந்து அணிக்கு எதிராக இந்திய அணி சந்தித்த படுதோல்வியைத் தொடர்ந்து, கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் தனது அதிருப்தியையும், ஏமாற்றத்தையும் வெளிப்படையாக பதிவு செய்துள்ளார்.

அணியின் ஆட்டம் 'கேவலமாக' இருந்ததாகவும், இவ்வளவு பெரிய வித்தியாசத்தில் தோற்றதை ஏற்றுக்கொள்ளவே முடியாது என்றும் அவர் காட்டமாகத் தெரிவித்துள்ளார்.

கேவலமான ஆட்டம்!

போட்டிக்குப் பிறகான நேர்காணலில் பேசிய ஷ்ரேயாஸ் ஐயர், தோல்வியின் வலியை மறைக்க முடியாமல் தவித்தார். "உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால், 'கேவலம்' என்பதை விட மோசமான ஒரு வார்த்தையை என்னால் பயன்படுத்த முடியவில்லை. இவ்வளவு பெரிய ரன் வித்தியாசத்தில் தோற்பது நிச்சயமாக ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று. முதலில், இந்தத் தோல்வியை நாங்கள் முழுமையாக ஒப்புக்கொண்டு, எங்கே தவறு செய்தோம் என்பதை ஆராய மீண்டும் திட்டமிடும் இடத்திற்கே (drawing board) செல்ல வேண்டும்," என்று வேதனையுடன் குறிப்பிட்டார்.

பேட்டிங்கில் படுமோசம்!

தோல்விக்கான முக்கிய காரணமாக பேட்டிங் சரிவையே ஷ்ரேயாஸ் சுட்டிக்காட்டினார். "200 ரன்கள் இலக்கை துரத்தும்போது, உங்கள் இன்னிங்ஸை எப்படி கட்டமைக்கப் போகிறீர்கள் என்பதற்கு ஒரு தெளிவான திட்டம் வேண்டும். ஆனால், நாங்கள் பவர் பிளேவிலேயே நான்கு (ஐந்து) விக்கெட்டுகளை இழந்துவிட்டோம். அதுவே எதிரணிக்கு சாதகமான சூழலை உருவாக்கிவிட்டது.

ஆட்டத்தின் மொமென்டத்தை நாங்கள் அங்கேயே இழந்துவிட்டோம் என்று நான் உறுதியாகக் கருதுகிறேன்," என்றார். பேட்டிங்கில் திட்டங்களைச் செயல்படுத்துவதில் அணி பின்தங்கியதை அவர் ஒப்புக்கொண்டார்.

பந்துவீச்சிலும் கோட்டை விட்டோம்!

பேட்டிங் மட்டுமல்ல, பந்துவீச்சிலும் அணி சொதப்பியதாக ஷ்ரேயாஸ் குறிப்பிட்டார். "இந்த ஆடுகளம் 200 ரன்கள் எடுக்கும் அளவுக்கு எளிதானது என்று நான் நினைக்கவில்லை. இங்கு பந்துவீச்சாளர்களுக்கு, குறிப்பாக 'ஹார்ட் லென்த்' பந்துகள் நன்றாக உதவியது. ஆனால், நாங்கள் அந்த யுக்தியைப் போதுமான அளவு செயல்படுத்தவில்லை. திட்டங்களை வகுப்பது எளிது, ஆனால் களத்தில் அதைச் சரியாகச் செய்வதுதான் முக்கியம். அந்த விஷயத்தில் நாங்கள் மோசமாகச் செயல்பட்டோம்," என்று அவர் கூறினார்.

ஒவ்வொரு வீரரும் பொறுப்பேற்க வேண்டும்!

அணியின் எதிர்காலம் குறித்துப் பேசிய அவர், "நாங்கள் மிக மோசமான கிரிக்கெட்டை ஆடியுள்ளோம் என்பது உண்மை. ஆனால், இதிலிருந்து கற்றுக்கொள்ள நிறைய பாடங்கள் உள்ளன. ஒவ்வொரு வீரரும் அணிக்கு எப்படி தாக்கத்தை ஏற்படுத்துவது, எப்படி மொமென்டத்தை உருவாக்குவது என்று சிந்திக்கத் தொடங்க வேண்டும். போட்டிகளை வெல்வதற்கான பொறுப்பை ஒவ்வொரு தனிப்பட்ட வீரரும் உணர வேண்டும். இந்தத் தோல்வியைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருக்காமல், அடுத்த போட்டியில் வலுவாக மீண்டு வருவதற்கான சிறந்த வாய்ப்பு இது," என்று நம்பிக்கையுடன் முடித்தார்.

`இது சரித்திரத் தருணம்!' - லார்ட்ஸில் பேட்டிங், பவுலிங் என சகலத்திலும் மிரட்டிய ஹர்மன்பிரீத் படை!

லண்டனின் புகழ்பெற்ற லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த ஒரே ஒரு டெஸ்ட் போட்டியில், இங்கிலாந்து அணியை 270 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி சரித்திர வெற்றி படைத்திருக்கிறது ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய மக... மேலும் பார்க்க

CSK: 18 ஆண்டுகாலப் பயணம்; 5 முறை கோப்பை வென்ற பயிற்சியாளர் - சிஎஸ்கேவில் இருந்து விலகிய ஃப்ளெமிங்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளர் பொறுப்பிலிருந்து ஸ்டீபன் ஃப்ளெமிங் விலகுவதாக சிஎஸ்கே நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.நியூசிலாந்து அணியின் முன்னாள் கேப்டனான இவர், 200... மேலும் பார்க்க

'டிரான்சிஷன் ஃபேஸில் இருக்கிறோம்!' - தொடர் படுதோல்விக்கு கேப்டன் ஷ்ரேயாஸ் விளக்கம்

இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரை இந்திய அணி படுதோல்வியுடன் இழந்துள்ளது. மூன்றாவது போட்டியில் 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோற்ற நிலையில், அணியின் தொடர் சொதப்பல்களுக்குக் காரணம் என்ன என்பது குறித்த... மேலும் பார்க்க

போர்க்களத்திலிருந்து சர்வதேச கிரிக்கெட் வரை.! - உயிரிழந்த ஆப்கான் வீரர் ஷபூர் ஜத்ரானின் பயணம்

போர் பதற்றத்துக்கும் துப்பாக்கிச் சூட்டுக்கும் மத்தியில் வாழும் ஆப்கானிஸ்தானில் இருந்து உலக கிரிக்கெட்டில் அந்த நாட்டின் அடையாளத்தைப் பதித்த சிறந்த வீரர்களில் ஒருவர்தான் ஷபூர் ஜத்ரான். அரிய வகை நோயால்... மேலும் பார்க்க

கிரிக்கெட்: 'ஆஸ்திரேலியா' என்னும் அசுர சக்தி; இங்கிலாந்தை வீழ்த்தி 7-வது முறையாக சாம்பியன் பட்டம்!

கிரிக்கெட் உலகில் உலகக்கோப்பைகளைத் தன்வசப்படுத்தி, கோப்பைகளின் மீது தங்களது பெயர்களை நிரந்தரமாகப் பொறித்துக் கொள்வதில் ஆஸ்திரேலிய அணிக்கு நிகர் ஆஸ்திரேலியா மட்டுமே! அது ஆடவர் அணியாக இருந்தாலும் சரி, ம... மேலும் பார்க்க

IPL Trade : லேட் என்ட்ரி கொடுத்த சென்னை... பாண்ட்யா டிரேடிங்கில் திடீர் திருப்பம்?! | CSK

2026 ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியின் படுதோல்விக்குப் பிறகு, அந்த அணியின் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா அணியிலிருந்து வெளியேற முடிவு செய்துள்ளார் என்கிற தகவல் கடந்த சில நாள்களாகவே பேசப்பட்டு வருகிற... மேலும் பார்க்க