செய்திகள் :

'அக்கா ஸ்தானத்தில் தான் அந்த மாணவியிடம் அமைச்சர் கீர்த்தனா பேசியிருக்கிறார்' - அமைச்சர் ராஜ்மோகன்

post image

அமைச்சர் கீர்த்தனா விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளி ஒன்றில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, பள்ளி மாணவிகளுடன் பேசிய அமைச்சர் கீர்த்தனா, ஆங்கிலத்தில் கேள்வி எழுப்ப, பள்ளி மாணவி பதில் அளிக்க தயங்கியதால், ஆசிரியரிடம் ஆங்கில வகுப்புகளை மேம்படுத்த அறிவுறுத்தினார்.

இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகனிடம் இந்த சம்பவம் தொடர்பாக கேள்வி கேட்கப்பட்டது.

அமைச்சர் கீர்த்தனா
அமைச்சர் கீர்த்தனா

அதற்கு பதிலளித்த அவர், "ஆய்வு பணி என்பது காலம் காலமாக நடைபெறுவது தான். ஒவ்வொரு அமைச்சரும், சட்டமன்ற உறுப்பினரும், அவர்கள் சம்பந்தப்பட்ட துறைக்கும், பகுதிகளுக்கும் சென்று ஆய்வு செய்வது என்பது மரபுதான். நான் இது தொடர்பாக விசாரித்தபோது கூட சொன்னார்கள்... சம்பந்தப்பட்ட அமைச்சர் இது தொடர்பான காணொளியை எடுக்கவில்லை.

அவர்களே தமிழ் வழி கல்வியில் படித்த சகோதரி தான். இன்று ஆங்கிலத்தில் நன்றாகப் பேசக்கூடிய தனித்திறமையை வளர்த்துக்கொண்டவர் தான். அரசியல் ஆளுமை உடையவர். அங்கிருந்த மற்றவர்கள் எடுத்த காணொளி தான் சர்ச்சையாக மாறியிருக்கிறது.

அமைச்சர் ராஜ்மோகன்
அமைச்சர் ராஜ்மோகன்

மற்றபடி ஆய்வு என்பது மரபு தான். அதனை நீங்கள் தவறாக எடுத்துக்கொள்ளக் கூடாது. ஒரு அக்கா ஸ்தானத்தில் தான் அந்த மாணவியிடம் அமைச்சர் பேசியிருக்கிறார். அதனைத் தவறாக எடுத்துக்கொள்ள வேண்டாம்" என்று பதிலளித்திருக்கிறார்.

'எப்படியாவது அமைச்சர் ஆகிடணும்...' - போஸ்டர் ஒட்டி தொல்லை செய்யும் தவெக எம்.எல்.ஏ; பின்னணி என்ன?

சோழிங்கநல்லூர் தவெக எம்.எல்.ஏ ஈ.சி.ஆர் சரவணன் தொகுதி முழுவதும் போக்குவரத்து நெரிசல் மிக்க இடங்களில் போஸ்டர்களும் பேனரும் வைத்து மக்களுக்கு இடையூறு கொடுப்பதாகப் புகார் எழுந்திருக்கிறது. இதுதொடர்பாக சமூ... மேலும் பார்க்க

நரம்பு தளர்ச்சியால் பாதிக்கப்பட்ட அண்ணன், தங்கை; உதவிக்கரம் நீட்டிய தவெக எம்.எல்.ஏ!

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள கல்லார் பழங்குடியின கிராமத்தைச் சேர்ந்தவர் சித்ரா. கணவரை இழந்த இவர், கூலித் தொழிலாளியாகப் பணியாற்றி வருகிறார்.இவரது மகன் நகுல், மகள் நவ்யா ஆகியோர் அடுத்தடுத்து... மேலும் பார்க்க

வயநாடு: "அந்த உத்தரவு மீறப்பட்டதே நிலச்சரிக்குக் காரணம்'' - கேரள முதல்வர் விளக்கம் | Live Updates

வயநாடு நிலச்சரிவிற்குக் காரணம் என்ன? - சதீஷன் பதில்கேரளாவில் வயநாடு, கோழிக்கோடு மாவட்டங்களை இணைக்கும் வகையில் சுரங்கப்பாதை அமைக்கும் பணி நடந்து வருகிறது.அந்தப் பகுதியான கல்லாடியில் கேரளாவில் பெய்து வர... மேலும் பார்க்க

ஹார்முஸில் கப்பல்களைத் தாக்கிய ஈரான்; அமெரிக்கா பதிலடி தாக்குதல்; ஈரானின் விளக்கம் என்ன?

அமெரிக்கா - ஈரான் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மீறி, ஹார்முஸ் நீர்ச்சந்தியைக் கடக்க முயன்ற மூன்று வணிகக் கப்பல்கள் மீது ஈரான் நேற்று (ஜூலை 8, 2026) தாக்குதல் நடத்தியது. இதனால், உலக நாடுகள் ஈரான் எண்ணெய்ய... மேலும் பார்க்க

"அதிமுக-விலுள்ள 60 சதவிகிதம் பேர் தவெக-விற்கு வந்துவிட்டார்கள்'' - சொல்கிறார் புகழேந்தி

"முன்னாள் அமைச்சர் வேலுமணி தலைமையில் இன்னும் பல அதிமுக-வினர் தவெக-வில் இணைய வருவார்கள் என நம்புகிறேன்" என்று அதிமுக ஒருங்கிணைப்புக் குழுவிலிருந்து விலகி தவெக-வில் இணைந்த வ.புகழேந்தி தெரிவித்துள்ளார்.ப... மேலும் பார்க்க