செய்திகள் :

கை, கால்களில் மறைத்து 29 கிலோ தங்கத்தை கடத்தி வந்த 26 கென்ய பெண்கள் - மும்பை விமான நிலையத்தில் கைது

post image

தங்கத்தின் விலை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இதனால் வெளிநாடுகளில் இருந்து தங்கம் அதிக அளவில் சட்ட விரோதமாக கடத்தி வரப்படுகிறது. மும்பை விமான நிலையம் தங்கம் கடத்தி வருவதற்கு முக்கியமான ஒரு வழித்தடமாக இருக்கிறது.

மும்பை விமான நிலையத்தில் நேற்று திடீரென கென்யாவை சேர்ந்த வயதான பெண்கள் 26 பேர் வந்து இறங்கினர். அவர்கள் தங்கம் கடத்தி வருவதாக புலனாய்வுத்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்து இருந்தது. இதனால் விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது. கிடைத்த தகவலின் அடிப்படையில் அதிகாரிகள் விமான நிலையத்தில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

கென்ய பெண்கள் 26 பேரும் விமானத்தில் இருந்து இறங்கியதும் கிரீன் சேனல் எனப்படும் வழியாக வெளியில் வந்தனர். அவர்கள் லக்கேஜ் எடுக்கும் இடத்திற்கு வந்தபோது அவர்களிடம் அதிகாரிகள் விசாரித்தனர். அதில் ஒரு பெண் போலி பாஸ்போர்ட் வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டு கைது செய்யப்பட்டார்.

மற்ற 25 பேரும் தாங்கள் தடைசெய்யப்பட்ட பொருட்கள் எதையும் கொண்டு வரவில்லை என்று தெரிவித்தனர். இருப்பினும், இரண்டு பயணிகளைச் சோதனையிட்டபோது, ​​அவர்களின் காலணிகளுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த தங்கக் கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டது.

இது ஒரு விரிவான சோதனைக்கு வழிவகுத்தது. அனைவரையும் சோதனை செய்ய ஆரம்பித்தவுடன் அவர்களில் சிலர் தங்களிடம் இருந்த தங்கத்தை எடுத்து வீசத்தொடங்கினர். அதிகாரிகள் அவற்றை பறிமுதல் செய்தனர். பைகளில் உருக்கிய தங்க கட்டிகள் இருந்தது.

எனினும் யாரும் அதற்கு உரிமை கோரவில்லை. அதோடு அவர்கள் யாரும் சரியாக விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை. இதையடுத்து மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் வரவழைக்கப்பட்டனர்.

26 பேரிடம் மொழிபெயர்ப்பாளர் உதவியுடன் விசாரிக்கப்பட்டனர். அவர்களிடமிருந்து மொத்தம் 29 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. அவற்றின் மதிப்பு ரூ.38 கோடியாகும். அவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்கள் சார்பாக ஆஜரான வழக்கறிஞர், கைது செய்யப்பட்டவர்களில் சிலரிடம் வெறும் 40 கிராம் தங்கம் மட்டுமே இருந்தது என்று குறிப்பிட்டார். ஆனாலும் அவர்களிடம் விரிவான விசாரணை நடத்த கோர்ட் அவர்களை போலீஸ் காவலில் வைக்க உத்தரவிட்டது.

ஸ்லோ பாய்சன் கொடுத்து மனைவி கொலை; UPI செயலியில் காதலியுடன் மெசேஜ்- நாடகமாடிய டாக்டர் சிக்கியதெப்படி?

பெங்களூருவில் கடந்த ஏப்ரல் மாதம் கிருத்திகா ரெட்டி என்பவர் தனது வீட்டில் மயங்கி விழுந்தார். அவரை அவரின் கணவர் டாக்டர் மகேந்திர ரெட்டி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். ஆனால் சிகிச்சை பலனலிக்காமல் கி... மேலும் பார்க்க

IT கம்பெனியில் பாலியல் வன்கொடுமை: பெண் ஊழியர்களுக்குத் தொல்லை கொடுத்த 6 பேர் சிக்கியது எப்படி?

மகாராஷ்டிரா மாநிலம் நாசிக்கில் செயல்பட்டு வரும் ஐ.டி. கம்பெனியில் 300க்கும் மேற்பட்டவர்கள் பணியாற்றி வருகின்றனர். இங்கு பணிபுரியும் பெண் ஊழியர்களுக்குக் கடந்த நான்கு ஆண்டுகளாக அணித் தலைவர்களாக இருக்கு... மேலும் பார்க்க

ஆன்லைன் பங்கு வர்த்தக மோசடி: 72 வயது டாக்டர் 10% லாபத்திற்கு ஆசைப்பட்டு ரூ.12 கோடியை இழந்தது எப்படி?

நாடு முழுவதும் ஆன்லைன் மோசடிகள் தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கிறது. இந்த மோசடிக்குப் பெரும்பாலும் முதியவர்களும், பெண்களும்தான் இலக்காகின்றனர். டிஜிட்டல் கைது மற்றும் ஆன்லைன் பங்கு வர்த்தகம் இதில் அதிக... மேலும் பார்க்க

திருத்தணி: ஓடும் பேருந்தில் பள்ளி மாணவிக்குப் பாலியல் தொல்லை - அரசு பேருந்து கண்டக்டர் கைது!

திருத்தணியிலிருந்து சோளிங்கருக்கு இயக்கப்பட்ட அரசுப் பேருந்தில் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர், பயணித்திருக்கிறார். பேருந்தில் அதிக கூட்டம் இருந்திருக்கிறது. இந்தச் சூழலில் டிக்கெட் கொடுப்பது ... மேலும் பார்க்க

பாக்கெட் மாவு தோசையால் 2 குழந்தைகள் உயிரிழப்பா? - தீவிர சிகிச்சையில் பெற்றோர்... என்ன நடந்தது?

குஜராத் மாநிலத்தின் அகமதாபாத்தில் கடையில் தோசை மாவு வாங்கி சமைத்து சாப்பிட்ட குழந்தைகள் இருவர் உயிரிழந்த சம்பவம், சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.கடந்த ஏப்ரல் 1-ம் தேதி, அகமதாபாத்தைச் சேர்ந்த விமல் குமா... மேலும் பார்க்க

சாத்தான்குளம் விவகாரம்: ``ஆயுள் தண்டனையை விட மரண தண்டனையே..." - நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

சாத்தான்குளம் ஜெயராஜ்-பென்னிக்ஸ் கொலை வழக்கில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் உட்பட கைதான 9 பேரும் குற்றவாளிகள் என்று கடந்த மாதம் 23-ம் தேதி நீதிபதி முத்து குமரன் தீர்ப்பளித்தார். தொடர்ந்து குற்றவாளிகளுக... மேலும் பார்க்க