செய்திகள் :

'கொசுவை திமுகக்காரனா லாரியில கடத்திட்டு வரான்?' - திமுக கவுன்சிலர் கலகல

post image

சென்னை மாநகராட்சியின் மாமன்ற கூட்டம் இன்று ரிப்பன் மாளிகையில் நடந்திருந்தது. இதில் பேசிய 181 வது வார்டு திமுக கவுன்சிலர் விஸ்வநாதன் 'எதற்கெடுத்தாலும் திமுக மீது பழி போடுகிறார்கள்!' என நகைச்சுவையாக பேசியிருந்தார்.

விஸ்வநாதன்
விஸ்வநாதன்

நேரமில்லா நேரத்தில் பேசிய அவர், 'என்னுடைய வார்டில் மக்களுக்கு குடிநீரே முறையாக விநியோகிக்கப்படுவதில்லை. தேர்தலுக்கு முன்பெல்லாம் இப்படியில்லை. தேர்தலுக்கு பிறகுதான் பிரச்னை என மக்கள் கூறுகின்றனர். இத்தனைக்கும் நெம்மேலியில் அமைந்துள்ள கடல்நீரை குடிநீராக்கும் சுத்திகரிப்பு நிலையத்தை முதல்வர் சமீபத்தில்தான் ஆய்வு செய்தார். அப்படியிருந்தும் நிலைமை இப்படியிருக்கிறது. எங்கு பார்த்தாலும் கொசுக்கடியாக வேறு இருக்கிறது.

முன்பெல்லாம் வெளியில்தான் கொசுத்தொல்லை இருக்கும். இப்போது சமையலறையிலும் கழிவறையிலும் கூட கொசுத்தொல்லை தாங்க முடியவில்லை. தேர்தலுக்கு பிறகுதான் இப்படி என மக்கள் கூறுகின்றனர். ஆனால், இவர்கள் இதற்கும் நம்மைதான் குறை கூறுவார்கள். கொசுக்களை என்ன திமுகக்காரனா லாரியில் கடத்தி வந்து ஏரியாவுக்குள் விட்டு மக்களை கடிக்க விடுகிறான்? நம்பவில்லையென்றால் நீங்களே வாருங்கள் நானே என்னுடைய வார்டுக்கு அழைத்து சென்று கொசு தொல்லையை காட்டுகிறேன்' என்றார்.

மகேஸ் குமார்
மகேஸ் குமார்

உடனே துணை மேயர் மகேஸ் குமார், 'ஒஹொ...இட்டுன்னு இட்டுனு வர்றேன்னு சொல்றீங்களா...' என கேட்க மாமன்றம் முழுக்க சிரிப்பலை. தொடர்ந்து பேசிய மகேஸ் குமார், 'நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையை முதல்வர்தான் கையில் வைத்திருக்கிறார். என்னுடைய வார்டிலும் கூட குடிநீர் பிரச்னை இருக்கிறது. முதல்வர்தான் தன்னுடைய துறை சார்ந்த விஷயத்தை கவனித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றார்.

எஸ்.பி.வேலுமணி ஆதரவாளர்கள் பதவி பறிப்பு – கோவை அதிமுக-வில் முற்றும் மோதல்?

தமிழ்நாடு சட்டப்பேரவையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பின்போது, த.வெ.க அரசிற்கு ஆதரவு அளித்த முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உள்ளிட்டோரின் கட்சி பதவிகளை அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பற... மேலும் பார்க்க

"விஜய் என்னிடம் தொலைபேசி வாயிலாக பேசினார்"- காவிரி நீர் விவகாரம் தொடர்பாக டி.கே.சிவக்குமார்

காவிரி குறுக்கே மேகதாது அணை கட்டுவது தொடர்பான விவகாரமும், காவிரியில் தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய நீரை திறப்பது தொடர்பான விவகாரமும் பேசுபொருளாகி இருக்கிறது.இந்நிலையில் டெல்லியில் இன்று (ஜூலை.29) கர்ந... மேலும் பார்க்க

'வந்தே மாதரம்' பாடலை அவமதித்தால் 3 ஆண்டுகள் சிறை தண்டனை; மாநிலங்களவையில் நிறைவேறிய மசோதா!

'வந்தே மாதரம்' பாடலை அவமதித்தால் மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை வழங்க வழிவகை செய்யும் மசோதா மாநிலங்களவையில் இன்று (ஜூலை.29) நிறைவேற்றப்பட்டிருக்கிறது. 'வந்தே மாதரம்' பாடலை அவமதித்தால் மூன்று ஆண்டுகள் சிற... மேலும் பார்க்க

'லஞ்சம் கொடுப்பதும் வாங்குவதும் குற்றம்'- அரசு அலுவலகங்களில் `இது' கட்டாயம்; தலைமைச் செயலர் உத்தரவு!

தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், துறைகள், மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள், உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் அரசு நிறுவனங்களில் “லஞ்சம் கொடுப்பதும், வாங்குவதும் குற்றம்” என்ற வாசகத்துடன் கூடிய அறிவிப... மேலும் பார்க்க

செந்தில் பாலாஜி: டாஸ்மாக் டெண்டர், பார் ஒப்பந்தங்களில் பல கோடி ரூபாய் முறைகேடு! - FIR விவரங்கள்!

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, முன்னாள் டாஸ்மாக் மேலாண்மை இயக்குநர் விசாகன் IAS உள்ளிட்ட 7 பேர் மீது டாஸ்மாக் நிறுவனத்தில் நடைபெற்றதாகக் கூறப்படும் பல்வேறு முறைகேடுகள் தொடர்பாக ஊழல் தடுப்பு மற்றும... மேலும் பார்க்க

`மேட்டூர் திறக்காததால் கடும் வறட்சி; ஏக்கருக்கு ரூ.25,000 இழப்பீடு வழங்க வேண்டும்!' - ஜி.கே.வாசன்

தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டையில் த.மா.க-வின் டெல்டா மண்டல செயல்வீரர்கள் கூட்டம், அதன் தலைவர் ஜி.கே.வாசன் தலைமையில் நடைபெற்றது. இதில் என்.ஆர்.ரெங்கராஜன், சுரேஷ் மூப்பனார் உள்ளிட்ட பலர் கலந்துகொண... மேலும் பார்க்க