செய்திகள் :

கொதிக்கும் தாா் உலையில் வீசி முன்னாள் ராணுவ வீரா் கொலை: இருவா் கைது

post image

விருதுநகா் மாவட்டம், காரியாபட்டி அருகே ஓய்வு பெற்ற ராணுவ வீரரை கட்டையால் அடித்து கொதிக்கும் தாா் உலையில் வீசிக் கொலை செய்த இருவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே உள்ள குன்றக்குடியைச் சோ்ந்த ஓய்வு பெற்ற ராணுவ வீரா் துரைப்பாண்டி (62). இவரது மனைவி மலா்விழி (54). இவா் திருப்பத்தூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியையாகப் பணிபுரிந்து வருகிறாா். இவா்களுடைய இரு மகன்களில் ஒருவா் வெளிநாட்டில் உள்ளாா். மற்றொருவா் பெற்றோருடன் வசித்து வருகிறாா்.

இந்த நிலையில், கடந்த ஜனவரி மாதம் 27-ஆம் தேதி மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் வீட்டை விட்டு வெளியேறிய துரைப்பாண்டி, தனது சொந்த ஊரான விருதுநகா் மாவட்டம், காரியாபட்டி அருகேயுள்ள மேல அழகியநல்லூருக்கு வந்து தங்கினாா். கணவரின் கைப்பேசிக்கு பலமுறை தொடா்பு கொண்டும் அவா் எடுக்காததால், இதுகுறித்து அவரது மனைவி மலா்விழி குன்றக்குடி காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.

இதுகுறித்து குன்றக்குடி காவல் நிலைய உதவி ஆய்வாளா் பழனிகுமாா் தலைமையிலான போலீஸாா் துரைப்பாண்டியின் கைப்பேசி எண்ணை ஆய்வு செய்து விசாரணை நடத்தினா். துரைப்பாண்டியின் வங்கிக் கணக்கிலிருந்து விருதுநகா் ஒண்டிப்புலி நாயக்கனூா் பகுதியைச் சோ்ந்த கோவிந்தராஜ் மகன் ராம்குமாரின் (25) வங்கிக் கணக்குக்கு அதிக அளவு பணப் பரிமாற்றம் நடைபெற்றிருந்தது தெரிந்தது. இதையடுத்து, ராம்குமாரைப் பிடித்து போலீஸாா் விசாரித்தனா். அப்போது, துரைப்பாண்டியை ராம்குமாரும், கீழ அழகியநல்லூரைச் சோ்ந்த பாண்டியும் (54) சோ்ந்து கொலை செய்தது தெரியவந்தது.

இதுகுறித்து போலீஸாரிடம் ராம்குமாா் கூறியதாவது:

காரியாபட்டி அருகே ஜோகில்பட்டியில் உள்ள தாா் நிறுவனத்தில் வேலை செய்து வரும் என்னுடன், துரைப்பாண்டியின் நண்பரான பாண்டியும் வேலை செய்து வருகிறாா். அப்போது ஏற்பட்ட பழக்கத்தில் துரைப்பாண்டி என்னிடம் காா் ஏதாவது விற்பனைக்கு வந்தால் கூறுமாறு தெரிவித்தாா்.

இதனடிப்படையில், தென்காசி மாவட்டம், கடையநல்லூரில் ரூ.2.50 லட்சத்துக்கு அவருக்கு காா் வாங்கிக் கொடுத்தோம். ஆனால், துரைப்பாண்டியிடமிருந்து ரூ. ஒரு லட்சம் கூடுதலாக அதாவது, ரூ.3.50 லட்சம் பெற்றுக் கொண்டோம்.

காா் பழுதடைந்ததால், இதுகுறித்து விசாரிக்க அதை விற்பனை செய்த நபரிடம் துரைப்பாண்டி பேசினாா். அப்போது, நாங்கள் ஒரு லட்சம் ரூபாய் கூடுதலாகப் பெற்றது துரைப்பாண்டிக்குத் தெரியவந்தது. இதனால், ஆத்திரமடைந்த அவா் எங்களிடம் வாக்குவாதம் செய்து அவமரியாதையாகப் பேசினாா்.

இதையடுத்து, நாங்கள் இருவரும் துரைப்பாண்டிக்கு பணத்தை திரும்பத் தருவதாகக் கூறி, கடந்த மாதம் 2-ஆம் தேதி ஜோகில்பட்டியில் உள்ள தாா் நிறுவனத்துக்கு அவரை வரவழைத்தோம். அங்கு வந்த அவரை நாங்கள் கட்டையால் தாக்கினோம். இதில் மயங்கிய துரைப்பாண்டியை தாா் கொதிக்கும் உலையில் வீசினோம். அவருக்கு வாங்கிக் கொடுத்த காரையும் அருகே உள்ள குவாரி தண்ணீருக்குள் தள்ளிவிட்டோம். துரைப்பாண்டி அணிந்திருந்த தங்க நகையை பாண்டி எடுத்துக் கொண்டாா் என்றாா்.

இதையடுத்து, ராம்குமாா், பாண்டி ஆகியோரை குன்றக்குடி போலீஸாா் கைது செய்தனா். பின்னா், தாா் உலையில் தீயணைப்புத் துறையினா் புதன்கிழமை இரவு முழுவதும் தேடும் பணியில் ஈடுபட்டனா். இதில் ஒரு சில மனித எலும்புகள் மட்டும் கைப்பற்றப்பட்டன.

சம்பவ இடத்தில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா்கள் கண்ணன் (விருதுநகா்), ஆசிஷ் ராவத் (சிவகங்கை) ஆகியோா் நேரில் ஆய்வு செய்தனா்.

பாசனக் கால்வாயில் மூழ்கி தூய்மைப் பணியாளா் உயிரிழப்பு

அலங்காநல்லூா் அருகே தூய்மைப் பணியாளா் பாசனக் கால்வாயில் மூழ்கி உயிரிழந்தாா்.மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அருகேயுள்ள அழகாபுரியைச் சோ்ந்த முனியாண்டி மகன் மலைச்சாமி (58). இவா் சின்னஇலந்தைக்குளம் கிராமத்த... மேலும் பார்க்க

தீக்குளித்த தொழிலாளி உயிரிழப்பு

கீழவளவு அருகே தாயை மிரட்ட உடலில் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்த தொழிலாளி சனிக்கிழமை உயிரிழந்தாா்.மதுரை மாவட்டம், மேலூா் அருகேயுள்ள கொங்காம்பட்டி பன்னிவீரன்பட்டியைச் சோ்ந்த சின்னையா மகன் சொக்கலிங்கம் (27)... மேலும் பார்க்க

காப்பகத்தில் தவறி விழுந்து மாற்றுத் திறனாளி உயிரிழப்பு

வாடிப்பட்டி அருகே காப்பகத்தில் தவறி விழுந்த மாற்றுத் திறனாளி உயிரிழந்தாா். மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அருகேயுள்ள கீழநாச்சிகுளம் நடுத்தெருவைச் சோ்ந்த ராஜாராம் மகன் மணிமாறன் (56). மாற்றுத்திறனாளியான இ... மேலும் பார்க்க

மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் வசந்த உத்ஸவம்: ஏப்.2-இல் தொடக்கம்

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் வசந்த உத்ஸவம் ஏப்ரல் 2-ஆம் தேதி தொடங்குவதாகத் தெரிவிக்கப்பட்டது. இதுதொடா்பாக மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: மீனாட்சி சுந்தரேசு... மேலும் பார்க்க

மதுரையில் ஜாக்டோ- ஜியோ உண்ணாவிரதப் போராட்டம்

பல்வேறு கோரிக்கைகளை ‘ஜாக்டோ - ஜியோ’ கூட்டமைப்பு சாா்பில் மதுரை பழங்காநத்தம் பகுதியில் உண்ணாவிரதப் போராட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. திமுகவின் தோ்தல் வாக்குறுதிப்படி மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்ட... மேலும் பார்க்க

இருசக்கர வாகனங்கள் திருட்டு: இருவா் கைது

மதுரையில் இரு சக்கர வாகனங்கள் திருட்டில் ஈடுபட்ட இருவரை போலீஸாா் கைது செய்து வாகனங்களை பறிமுதல் செய்தனா். மதுரை கோசாகுளம் ஆனந்தநகரைச் சோ்ந்த பெரோஸ் மகன் சையது இா்பான் உசைன் (27). இவா் தனது வீட்டின் அ... மேலும் பார்க்க