செய்திகள் :

கொலையில் முடிந்த மதுபோதை தகராறு, வீடியோவைப் பார்த்து அதிர்ச்சியில் உறைந்த காவல்துறை! - என்ன நடந்தது?

post image

சேலம் மாவட்டம், தாசநாயக்கன்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் 19 வயதான கோகுல். தன்னுடைய நண்பர்களான‌ மூன்று சிறுவர்களுடன் சேர்ந்து மது அருந்துவதற்காக கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை ஜருகுமலை அடிவாரப் பகுதிக்குச் சென்றிருக்கிறார். நால்வரும் சேர்ந்து மது அருந்தியுள்ளனர். கோகுல் மற்றும் சிறுவர்கள் 3 பேருக்கும்‌ இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

ஆத்திரமடைந்த சிறுவர்கள் கோகுலை கொடூரமாக தாக்கி கொலை செய்திருக்கிறார்கள். இரு சக்கர வாகனத்தில் 3 சிறுவர்களும் அங்கிருந்து தப்ப முயற்சி செய்த நிலையில், விபத்தால் வாகனத்தில் இருந்து நிலைத்தடுமாறி கீழே விழுந்ததுள்ளனர். உள்ளுர் மக்களின் உதவியுடன் 3 பேரையும் பிடித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டதில் கொலையில் ஈடுபட்டதைக் கண்டறிந்துள்ளனர்.

கொடூரமாக கொல்லப்பட்ட கோகுலின் உடலை மீட்ட காவல்துறையினர் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 3 சிறுவர்களையும் கூர்நோக்கு இல்லத்தில் வைத்து பராமரித்து வரும் நிலையில், கோகுலை கொலை செய்ததை சிறுவர்கள் தங்களின் செல்போனில் வீடியோ பதிவு செய்திருப்பதையும் காவல்துறையினர் கண்டறிந்துள்ளனர்.

murder

இந்தச் சம்பவத்தின் பின்னணி குறித்து தெரிவித்த காவல்துறையினர், "சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த 10-ஆம் வகுப்பு படிக்கும் 2 சிறுவர்கள் மற்றும் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த ஒரு சிறுவன் என மூன்று பேரும் மது அருந்தி வந்துள்ளனர். கூலி வேலை செய்து வந்த கோகுலும் இவர்களுடன் சேர்ந்து அடிக்கடி மது அருந்தி வந்திருக்கிறார். நட்புறவில் கோகுல் ஆதிக்கம் செலுத்துவதைப் பிடிக்காத 3 சிறுவர்களும் சேர்ந்து கோகுலை கொடூரமாக கற்கள், கட்டையால் தாக்கியதுடன் கத்தியால் குத்தியும் கொலை செய்திருக்கிறார்கள். அந்தக் கொடூரத்தை செல்போனில் வீடியோ எடுத்திருக்கிறார்கள். கொலைக்கான காரணம் குறித்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகிறோம்" என்றனர்.

நெல்லை: விஜய் முதல்வராவதில் ஏற்பட்ட இழுபறி; விரக்தியில் தீக்குளித்த தவெக நிர்வாகி உயிரிழந்த பரிதாபம்

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் கடந்த 4-ம் தேதி வெளியாகின. இதில் எந்தக் கட்சிக்கும் அறுதிப் பெரும்பான்மை கிடைக்கவில்லை. 108 தொகுதிகளைக் கைப்பற்றிய போதிலும், த.வெ.க தலைவர் விஜய் ஆட்சி அமைப்பதில் இழு... மேலும் பார்க்க

நாட்டில் குற்றச் சம்பவங்களின் சதவிகிதம் குறைந்தாலும் சிறார்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பு!

தேசிய குற்ற ஆவண காப்பக தரவவுகளின் அடிப்படையில் குழந்தைகள் உரிமை அமைப்பான 'க்ரை' (CRY) வெளியிட்டுள்ள அறிக்கையில், "நாட்டில் ஒட்டுமொத்த குற்றச்சம்பவஙகளின் எண்ணிக்கை 10.8 சதவிகிதம் குறைந்துள்ளது. கடந்த 2... மேலும் பார்க்க

கிருஷ்ணகிரி: எரிந்த நிலையில் ராணுவ வீரர், அவர் தந்தை உடல்கள் - திருமணம் மீறிய உறவால் நடந்த பயங்கரம்

கிருஷ்ணகிரி அருகே இருவர் எரித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், கொலையானது ராணுவ வீரரும் அவர் தந்தை என்பதும், திருமணம் மீறிய விவகாரத்தால் இக்கொலை நடந்துள்ளத... மேலும் பார்க்க

NEET : 30 நிமிடத்தில் கைமாறிய வினாத்தாள்:ரூ.10 லட்சத்துக்கு வாங்கி ரூ.15 லட்சத்தில் விற்ற மாணவர்

நாடு முழுவதும் மருத்துவ படிப்புக்காக நடத்தப்பட்ட நீட் நுழைவுத்தேர்வுக்கான வினாத்தாள் தேர்வுக்கு முன்பே கசிந்ததை தொடர்ந்து ஒட்டுமொத்த தேர்வும் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் ஆண்டு முழுவதும் படித்த மாண... மேலும் பார்க்க

போனுக்கு வந்த திருமண அழைப்பிதழ்; 5 லட்சத்தை இழந்த நபர்- புது வகை மோசடியிலிருந்து தப்பிப்பது எப்படி?

பெங்களூருவைச் சேர்ந்த நூர் நஹித் கான் என்ற 42 வயது தொழிலதிபரின் வாட்ஸ்அப் எண்ணுக்கு ஒரு குறுஞ்செய்தி வந்தது. அதில், "எங்கள் திருமணத்திற்கு உங்களை அன்புடன் அழைக்கிறோம். முழுமையான விவரங்களுக்குக் கீழே இ... மேலும் பார்க்க

மது போதையில் ஆம்னி பேருந்துகளை இயக்கிய டிரைவர்கள்; காட்டிக்கொடுத்த மூச்சு பரிசோதனை கருவி!

தூத்துக்குடி நகர போக்குவரத்துப் பிரிவு ஆய்வாளர் வில்லியம் பெஞ்சமின் தலைமையில் போலீஸார் தூத்துக்குடி புதிய பேருந்து நிலையம் முன்பு இரவில் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது தூத்துக்குடியில் இரு... மேலும் பார்க்க