செய்திகள் :

கொளத்தூரில் வீழ்ந்த ஸ்டாலின்; தகர்ந்த தொடர் ஆட்சி கனவு - திமுக பின்னடைவைச் சந்தித்தது எங்கே?

post image

தமிழக அரசியல் வரலாற்றில் 1971-க்குப் பிறகு சட்டமன்றத் தேர்தலில் திமுக தொடர்ச்சியாக வெற்றி பெற்றதே இல்லை என்கிற அந்தச் சாபத்தை முறியடிக்க, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மேற்கொண்ட அத்தனை முயற்சிகளும் இம்முறையும் தோல்வியில் முடிந்திருக்கின்றன.

தகர்ந்த கனவு

மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி அவர்களுக்கே சாத்தியப்படாத அந்த 'தொடர் ஆட்சி' சாதனையை நிகழ்த்தி வரலாறு படைப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போதைய தேர்தல் முடிவுகள் திமுகவை அரியணையில் இருந்து இறக்கியது மட்டும் அல்லாமல் கொளத்தூர் தொகுதியில் ஸ்டாலினையே தோற்கடித்திருக்கிறது.

தவெக விஜய்
தவெக விஜய்

திமுகவின் கோட்டைகளைக் கைப்பற்றிய தவெக

தீவிரமான நான்குமுனைப் போட்டி நிலவிய நிலையில், விஜய் ஒரு பெரும் சவாலாக உருவெடுத்து திமுகவின் வாக்கு வங்கியில் பெரும் சரிவை ஏற்படுத்தி இருக்கிறார். திமுகவின் கோட்டையாகக் கருதப்பட்ட பல இடங்களை விஜய் தலைமையிலான புதிய அரசியல் கைப்பற்றியது திமுகவுக்குப் பெரும் பின்னடைவு ஏற்படுத்தி இருக்கிறது.

திமுக பின்னடைவைச் சந்தித்தது ஏன்?

2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக பின்னடைவைச் சந்தித்தது ஏன்? என்று மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாமை தொடர்புகொண்டு பேசினோம்.

இது தொடர்பாக நம்மிடம் பேசிய அவர், " மிக மிஞ்சிய தன்னம்பிக்கை, வேட்பாளர் தேர்வில் கோளாறு, இளைய தலைமுறை மற்றும் முதல் முறை வாக்காளர்கள் மனதைப் புரிந்துகொள்ளாத மூத்த தலைவர்கள்.. இவைதான் காரணம்.

திமுக தீய சக்தி என்று விஜய் அடித்துக் கூறும் போது அதை சரியாக எதிர்கொள்ளவில்லை. அண்ணாவின் கட்சி தீய சக்தியா? என்ற கேள்வியை எழுப்பி இருக்க வேண்டும், மாறாக விஜயயை புறக்கணித்தார்கள். அது கோஷம் மாதிரி இளைய தலைமுறைகளும் போய் சேர்ந்தது.

ஸ்டாலின் - திமுக
ஸ்டாலின் - திமுக

திமுக அதில் தவறிவிட்டது

அந்த இளைய தலைமுறைக்கு ஸ்டாலின் சாதனைகள் அல்லது திராவிட இயக்கத்தின் சாதனைகள் தெரியாது. விஜய் அவர்கள் கூறியதும் திராவிட இயக்கத்தின் கோட்பாடுகள் தான்.

எனவே அது த.வெ.க முன் வைக்கும் செயல் திட்டம் என்று இளைய தலைமுறை கருதி இருக்கும். வாக்கு அரசியலில் புதிய தலைமுறை உருவாகிக் கொண்டுதான் இருக்கும். அதன் மனப்போக்கை தீர்மானிப்பது தான் சவால். திமுக அதில் தவறிவிட்டது என்பதுதான் என் கருத்து.

அண்ணாவின் கூற்று எப்போதும் உண்மைதான்...

கூட்டணி கட்சிகள் திமுக ஆட்சிக்கு வருவதற்கு பெரிய அளவுக்கு பணியாற்றவில்லை. 28 இடங்களில் போட்டியிட்ட காங்கிரஸ் 5 இடங்களில் தான் வெற்றி பெற்றிருக்கிறது.

அண்ணா திமுக கூட்டணியிலும் இந்த பிரச்சனை இருக்கிறது. விஜய் கூட்டணியே இல்லாமல் ஜெயித்திருக்கிறார். ஒருவேளை திமுகவும் அண்ணா திமுகவும் கூட்டணி இல்லாமல் களத்தில் நின்று இருந்தால் வேறு மாதிரியாக கூட முடிவு வந்திருக்கும்.

ஸ்டாலின் - திமுக
ஸ்டாலின் - திமுக

2016 தேர்தலில் கூட்டணி இல்லாமல் தான் ஜெயலலிதா ஜெயித்தார். வாக்கு அரசியல் ஒரு விசித்திரபுரி. கனத்த மாலைகளை தூக்கிக் கொண்டு வருகிற விசித்திரபுரி என்றார் அண்ணா. அது எப்போதுமே உண்மைதான்" என்ற கருத்தை பகிர்ந்துகொண்டார்.

`விஜய் முதல்வராவதை தடுத்தால்..!' - ஜல்லிக்கட்டு போராட்டத்தை நினைவூட்டும் காங்கிரஸ் நிர்வாகி

காங்கிரஸ் கட்சியின் தஞ்சாவூர் தெற்கு மாவட்டத் தலைவர் மகேந்திரன். இவர் ராகுல் காந்திக்கு நெருக்கமானவர் என்பது குறிப்பிடத்தக்கது. நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் பட்டுக்கோட்டை தொகுதி மகேந்திரனுக்கு ... மேலும் பார்க்க

`தி.மு.க-வுக்கு பாயத் தயாராகும் சிறுத்தைகள் டு சாரி கேட்ட செந்தில் பாலாஜி!' | கழுகார் அப்டேட்ஸ்

புலம்பும் கு.ப.கிருஷ்ணன்!"தப்புக்கணக்கு போட்டுட்டோம்"த.வெ.க-வில், முகம் தெரியாத பலரும் வெற்றிபெற்ற நிலையில், லால்குடி தொகுதி வேட்பாளர் கு.ப.கிருஷ்ணனோ தோல்வியைத் தழுவியிருக்கிறார். அ.தி.மு.க முன்னாள் அ... மேலும் பார்க்க

விஜய்க்கு ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்காமல் பந்தாடும் ஆளுநர்! - வலுக்கும் கண்டனங்கள்

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளின்படி, நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. ஆனால் 118 இடங்கள் இருந்தால் மட்டுமே பெரும்பான்மையுடன... மேலும் பார்க்க

`அந்த திட்டம் வேண்டாம்!' - அதிமுகவுக்கு `நோ' சொல்லிய திமுக?

தமிழக சட்டப்பேரவை தேர்தல் முடிவடைந்தாலும் இன்னும் பரபரப்புக்குக் குறைவில்லாமல் நகர்கிறது அரசியல் களம். குறிப்பாக நேற்று இரவு வெளியான சில தகவல்கள் தமிழக அரசியல் பார்வையாளர்கள்கூட எதிர்பாராதவை. அதாவது, ... மேலும் பார்க்க

"விஜய்யைப் பதவியேற்க அனுமதிக்க வேண்டும்; ஆளுநர் அப்படி சொல்ல முடியாது" - திருமாவளவன்

தமிழக சட்டமன்ற தேர்தலில் 108 தொகுதிகளில் விஜயின் தமிழக வெற்றிக்கழகம் வெற்றி பெற்றிருக்கிறது. 118 இடங்கள் இருந்தால் மட்டுமே பெரும்பான்மையுடன் தவெக ஆட்சி அமைக்க முடியும். இந்நிலையில் தான் திமுக கூட்டணிய... மேலும் பார்க்க

`மு.க.ஸ்டாலின் தோல்விக்கு எடப்பாடி பழனிசாமி மனதார வருத்தப்பட்டார்!' – ஆதங்கப்பட்ட அதிமுக எம்.எல்.ஏ

தமிழக சட்டப்பேரவை தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக த.வெ.க உருவெடுத்திருந்தாலும், ஆட்சி அமைப்பதற்கு தேவையான தனிப் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இந்நிலையில் தி.மு.க கூட்டணியில் இருந்த காங்கிரஸ் அதிலிருந்து ... மேலும் பார்க்க