செய்திகள் :

கோவை அடுக்குமாடி குடியிருப்புக் கொள்ளை சம்பவம் - சுட்டுப் பிடிக்கப்பட்ட குற்றவாளி உயிரிழப்பு

post image

கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. அங்கு கடந்த வெள்ளிக்கிழமை அடுத்தடுத்து 13 வீடுகளில் பூட்டை உடைத்து நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்டது.

கவுண்டம்பாளையம் கொள்ளை

இந்த சம்பவத்தில் ஈடுபட்டது உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ஆசிப், இர்ஃபான், கல்லு ஆகிய 3 பேர் என்பது விசாரணையில் தெரியவந்தது. குனியமுத்தூர் பகுதியில் தங்கியிருந்த அவர்களை கைது செய்ய காவல்துறையினர் நேற்று சென்றுள்ளனர்.

அப்போது அவர்கள் பார்த்திபன் என்கிற காவலரை தாக்கிவிட்டு தப்பிக்க முயற்சி செய்ததாகவும், தற்காப்புக்காக அவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்திப் பிடித்ததாக காவல்துறை கூறியது. கைது செய்யப்பட்ட 3 பேரும் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர்.

துப்பாக்கிச்சூடு

அதேபோல காவலர் பார்த்திபனும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். கைது செய்யப்பட்டவர்களின் பின்னணி குறித்து விசாரித்து வருவதாக காவல்துறையினர் கூறியிருந்தனர்.

இந்நிலையில் அந்த 3 பேரில் ஆசிப் என்பவர் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். வலது காலில் துப்பாக்கி குண்டு பாய்ந்த ஆசிப்புக்கு ரத்தப்போக்கு அதிகம் ஏற்பட்டதாகக் காவல்துறையினர் கூறியுள்ளனர்.

உயிரிழந்த ஆசிப்
உயிரிழந்த ஆசிப்

காவல்துறை சுட்டுப் பிடித்தவர் மரணமடைந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. “இது போலி என்கவுன்ட்டராக இருக்க வாய்ப்புள்ளது. எனவே விசாரணை நடத்த வேண்டும்.” என்று மனித உரிமை செயற்பாட்டாளர்கள் கூறியுள்ளனர்.  

திருப்பரங்குன்றம்: ``நீதிமன்ற உத்தரவை இந்து விரோத திமுக அரசு செயல்படுத்த வேண்டும்" - அண்ணாமலை

வருடந்தோறும் கார்த்திகை தீபம் தினத்தன்று திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்றப்படும் உச்சிப் பிள்ளையார் கோயிலின் தீபத் தூணில் நேற்று (டிசம்பர் 3) தீபம் ஏற்றப்பட்டது.ஆனால், இந்து தமிழர் கட்சியின் ராம ர... மேலும் பார்க்க

திருப்பரங்குன்றம்: "நீதிமன்ற தீர்ப்பை நிறைவேற்றாதது ஏன்?" - அமைச்சர் ரகுபதி விளக்கம்!

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தூணில் தீபம் ஏற்ற வேண்டுமென எழுந்த கோரிக்கையும் அதைத்தொடர்ந்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அளித்த தீர்ப்பும் பேசுபொருளாகியிருக்கிறது. இந்த சூழலில் தமிழ்நாடு அரசு நீத... மேலும் பார்க்க

திருப்பரங்குன்றம்: ``தேவையில்லாத பதற்றத்தை உண்டாக்க திமுக கபட நாடகம்" - எடப்பாடி பழனிசாமி கண்டனம்

வருடந்தோறும் கார்த்திகை தீபம் தினத்தன்று திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்றப்படும் உச்சிப் பிள்ளையார் கோயிலின் தீபத் தூணில் நேற்று (டிசம்பர் 3) தீபம் ஏற்றப்பட்டது.ஆனால், இந்து தமிழர் கட்சியின் ராம ர... மேலும் பார்க்க

'இவர்கள் சிக்கந்தர் தர்காவையே தரைமட்டமாக்கி விடுவார்கள்!' - கொதிக்கும் பெ.சண்முகம் | பேட்டி

திருப்பரங்குன்றத்தில் நேற்று பதட்டமான சூழல் நிலவிய நிலையில், மனுதாரர் கேட்ட இடத்திலேயே தீபம் ஏற்ற மதுரை உயர்நீதிமன்றம் மீண்டும் உத்தரவிட்டுள்ளது. பரபரப்பான இந்த சூழலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிய... மேலும் பார்க்க

Madurai, Coimbatore Metro: நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பிய தயாநிதி மாறன்!

சென்னையைத் தொடர்ந்து கோவை மற்றும் மதுரை மாநகரங்களில் மெட்ரோ போக்குவரத்து வசதியை அமைக்க தமிழ்நாடு அரசு வகுத்த திட்டத்தை சமீபத்தில் திருப்பி அனுப்பியது மத்திய அரசு. Metro திட்டம் நிராகரிப்பு: மத்திய அரச... மேலும் பார்க்க

திண்டுக்கல்: `கோயில் தீபம் விவகாரம்'- ஒரே சமூகத்தினரிடையே பிரச்னை; 144 தடை உத்தரவு- என்ன நடந்தது?

திண்டுக்கல் மாவட்டம், சின்னாளப்பட்டி அருகே உள்ள பெருமாள் கோயில் பட்டியில் வன்னியர் சமுதாயத்தைச் சேர்ந்த இந்து மக்கள் மற்றும் கிறிஸ்துவ மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இப்பகுதியில் மண்டு கருப்பணசாமி கோயில... மேலும் பார்க்க