செய்திகள் :

"கோவை சிறுமி கொலை குற்றவாளிகளுக்கு உச்சபட்ச தண்டனை" - அமைச்சர் சம்பத்குமார் உறுதி

post image

கோவையில் கொலை செய்யப்பட்ட சிறுமி குடும்பத்தினரை இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் இன்று நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.

பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அவர், “சிறுமி கொலை செய்யப்பட்ட தகவல் கிடைத்தவுடன் அதிகாரிகளிடம் பேசினேன்.

துரிதமாகச் செயல்பட்டு காவல் துறையினர் குற்றவாளிகளைக்  கைது செய்து இருக்கின்றனர். இந்த வழக்கு விசாரணை துரிதப்படுத்தப்படும். கைதான இரண்டு பேரும் நீதிமன்ற காவலுக்குக் கொண்டு சென்று இருக்கின்றனர்.

உடனடியாக குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய வேண்டும் எனக் கேட்டிருக்கின்றேன். குற்றவாளிகளுக்கு உச்சபட்ச தண்டனையை வாங்கித் தருவதில் அரசு உறுதியாக இருக்கிறது. பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்குத் தேவையான நிவாரணம் வழங்கப்படும்.

இந்தச் சம்பவமே இறுதியாக இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறோம். குற்றம் செய்பவர்களுக்குப் பயம் இருக்க வேண்டும். இந்தக் குற்றவாளிக்கு உச்சபட்ச தண்டனையைப் பெற்றுத்தருவது எங்களது கடமையாக இருக்கும்.

சூலூர் காவல் நிலையம்
சூலூர் காவல் நிலையம்

தமிழகம் முழுவதும் சிங்கப்பெண்கள் திட்டம் கூடிய விரைவில் அறிமுகப்படுத்தப்பட இருக்கிறது. வரும் 27ஆம் தேதி திட்டம் நடைமுறைப்படுத்த வாய்ப்பு இருக்கிறது. இதன் மூலம் கண்காணிப்பு தீவிரப்படுத்தபடும்.

ஆர்டிஓ மற்றும் காவல்துறை மூலம் விழிப்புணர்வு பிரசாரங்கள் செய்யவும் திட்டமிட்டு இருக்கிறோம். சிறுமி குடும்பத்திற்கு நிதி உதவியை முதல்வர் விரைவில் அறிவிப்பார். எங்கள் அரசு எந்தச் சமரசமும் செய்து கொள்ளாது.

குற்றவாளி யாராக இருந்தாலும் தண்டனை கடுமையாக இருக்கும். குற்றம் நடைபெற்ற பகுதியில் கண்காணிப்பைப் பலப்படுத்துவதற்கான பணிகள் மேற்கொள்ளப்படும் எனவும், குற்றச் சம்பவங்கள் அதிகம் நடக்க கூடிய பகுதிகளில் கண்காணிப்பு பலப்படுத்தபடும்” என்றார்.

தவெக-வுக்கு ஆதரவு: ``ஸ்டாலினின் இசைவோடுதான் ஆதரவு" - விசிக தலைவர் திருமாவளவன் விளக்கம்

தமிழக வெற்றிக் கழகத்திற்கு (த.வெ.க) விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஆதரவு தெரிவித்தது தொடர்பாக சமூக ஊடகங்களில் எழுந்துள்ள விமர்சனங்களுக்கு, விசிக தலைவர் திருமாவளவன் விளக்கமளித்திருக்கிறார். அவரின் பேட்டிய... மேலும் பார்க்க

"மருத்துவத்துறையைத் தனியார்மயமாக்கும் செயல்" - தவெக அரசைச் சாடும் சீமான்; பின்னணி என்ன?

அரசு மருத்துவமனைகளைத் தரம் உயர்த்துவதாக வாக்குறுதி அளித்துவிட்டு, மருத்துவத்துறையில் தனியார்மயத்தை ஊக்குவிப்பதா என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியிருக்கிறார். இது த... மேலும் பார்க்க

கோவை சிறுமி கொலை: 'சட்டம் ஒழுங்கிற்கு முதல் முக்கியத்துவத்தை முதல்வர் தர வேண்டும்'- உதயநிதி கண்டனம்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் அருகே கண்ணம்பாளையம் பேரூராட்சியில், 10 வயது சிறுமி படுகொலை செய்யப்பட்டு, கிணற்றில் வீசப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த வழக்கில் கார்த்தி, மோகன்ராஜ்... மேலும் பார்க்க

Cockroach Janta Party: "என் குடும்பத்திற்கு எதுவும் நேர்ந்துவிடக் கூடாது" - அபிஜித் தீப்கே ஆதங்கம்!

வேலை இல்லாத இளைஞர்கள் கரப்பான் பூச்சிகள் என்ற உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி சூர்ய காந்த் கருத்து பல்வேறு விமர்சனங்களைச் சந்தித்தது. அதைத் தொடர்ந்து `கரப்பான் பூச்சி ஜனதா கட்சி என்ற நையாண்டித் தளத்தை இ... மேலும் பார்க்க

`பிராமணர் என்கிற காரணத்திற்காக அறநிலையத்துறை அமைச்சர் பதவியா?' - அமைச்சர் ரமேஷ் விளக்கம்

தமிழக அமைச்சரவையில் ஸ்ரீரங்கம் தொகுதி எம்.எல்.ஏ.ரமேஷுக்கு இந்து சமய அறநிலையத்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டது. ரமேஷ் பிராமணர் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால் பலரும் இதை விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில்... மேலும் பார்க்க

VCK : 'தலித் பாந்தர்' தொடங்கி தமிழக அமைச்சரவை முதல் முறை வரை.! - விசிக கடந்து வந்த பாதை!

தமிழக அமைச்சரவையில் முதல் முறையாக விசிக இடம்பெற்றிருக்கிறது. தவெக அரசின் சமூக நீதி அமைச்சராக வன்னிஅரசு பொறுப்பேற்றிருக்கிறார். அதிகாரப் பகிர்வு குறித்து நீண்டகாலமாக பேசி வந்த விசிக-விற்கு அமைச்சரவையில... மேலும் பார்க்க