செய்திகள் :

"கோவை சிறுமி பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை" - ஐ.ஜி ரம்ய பாரதி அதிர்ச்சித் தகவல்

post image

கோவை சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த வழக்கு தொடர்பாக மேற்கு மண்டல ஐஜி ரம்ய பாரதி இன்று செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார்.

அப்போது பேசிய அவர், "கடந்த 21-ம் தேதியன்று வீட்டின் வெளியே விளையாடிக் கொண்டிருந்த 10 வயது சிறுமி மாலை சுமார் 5 மணியளவில் காணாமல் போனதாக தகவல் கிடைத்தது.

காவல் துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை மேற்கொண்டு, இரவு சுமார் 10 மணியளவில் குழந்தை காணாமல் போனது தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

ஐந்து தனிப்படைகள் அமைக்கப்பட்டு, காணாமல் போன சிறுமியைத் தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டது. விசாரணையின் போது 250 சிசிடிவி காட்சிகள் மற்றும் தொழில்நுட்ப ஆதாரங்கள் ஆய்வு செய்யப்பட்டதில், நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்த கார்த்தி (33) என்ற சிறுமியின் குடும்பத்திற்குப் பழக்கமான அண்டை வீட்டுக்காரர் சிறுமியை அழைத்துச் சென்றது உறுதி செய்யப்பட்டது.

போலீஸ் விசாரணை
போலீஸ் விசாரணை

இதனைத் தொடர்ந்து, கண்ணம்பாளையம் பகுதியில் உள்ள மரியா ரோஸ் கார்டன் அடுக்குமாடி குடியிருப்பின் முதல் மாடியில் பதுங்கியிருந்த குற்றவாளி கார்த்தியை காவல் துறையினர் சுற்றி வளைத்தனர்.

அப்போது காவல் துறையினரிடமிருந்து தப்பிக்க மேல் மாடியில் இருந்து குதித்ததில், அவரது வலது கை மற்றும் வலது காலில் முறிவு ஏற்பட்டது. பின்னர் அவர் கைது செய்யப்பட்டார். விசாரணையில், குற்றவாளி கார்த்தி, சிறுமியை ஆசை வார்த்தை கூறி ஏமாற்றி அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்து, பின்னர் கண்ணம்பாளையம் குளம் அருகிலுள்ள தென்னந்தோட்டத்தில் கழுத்தை நெரித்து கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.

மேலும் நடைபெற்ற விசாரணையில் பாரதிபுரம், பள்ளபாளையத்தைச் சேர்ந்த மோகன் (30) என்பவர் குற்றவாளிக்கு உறுதுணையாக இருந்தது தெரியவந்தது.

இதனையடுத்து அவரும் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டார். கைது செய்யப்பட்ட கார்த்தி தற்போது கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

போலீஸ் விசாரணை
போலீஸ் விசாரணை

இவ்வழக்கு சிறுமி மீதான பாலியல் வன்கொடுமை தொடர்புடையது என்பதால், வழக்கில் போக்சோ சட்டப்பிரிவுகள் சேர்க்கப்பட்டு கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். முதல் தகவல் கிடைத்தவுடன் காவல்துறையினர் மேற்கொண்ட துரிதமான நடவடிக்கை காரணமாக, 24 மணி நேரத்திற்குள் வழக்கின் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும், பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு விரைவாக அரசின் நிவாரண உதவித் தொகை கிடைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. உடற்கூராய்வின் முதல்கட்ட அறிக்கையில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது உறுதியாகியுள்ளது.

கூலித் தொழிலாளியான கார்த்தி திருமணமாகி, மனைவியைப் பிரிந்து வாழ்கிறார். பெற்றோர் உடன் சேர்ந்து சிறுமியைத் தேடுவது போன்ற தோற்றத்தை உருவாக்கியுள்ளார்‌.

கார்த்தி மீது மட்டுமே போக்சோ வழக்கு போடப்பட்டுள்ளது. தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. குற்றவாளிகளைத் துரிதமாகப் பிடித்தது போல, குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்படும்" என்றார்.

ஸ்ரீவைகுண்டம் விவகாரம்: "என்னை வாழ விடாமல் அவதூறு.!" - பாதிக்கப்பட்ட பெண், டி.ஐ.ஜி-யிடம் கண்ணீர்!

. தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார்திருநகரி பகுதியைச் சேர்ந்த மாரியம்மாள் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற 37 வயது பெண்ணை த.வெ.க நிர்வாகியான பாலமுருகன் மற்றும் அவரது நண்பர் ஆகியோர் கூட்டுப் பாலியல் வன்கொடும... மேலும் பார்க்க

சேலம்: பெண்களை ஆபாச வீடியோ எடுத்து மிரட்டி பாலியல் வன்கொடுமை; தவெக உறுப்பினர் கைது; ஒதுங்கும் கட்சி

சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட பெண்களைப் பல்வேறு வழிகளில் ஏமாற்றி ஆபாச வீடியோக்களை எடுத்து மிரட்டி வந்த த.வெ.க-வைச் சேர்ந்த மணிகண்டன் என்கிற நபரை காவல்துறையினர் நேற்றிரவு கைது செய்தனர்.... மேலும் பார்க்க

சேலம்: குழந்தைக்கு வலிப்பு வந்ததாக நாடகமாடிய தாய்; அம்பலமான நாடகம்; குழந்தை உயிரிழந்தது எப்படி?

சேலம் மாவட்டம் தலைவசால் அருகில் உள்ள வரகூர் தெற்கு காடு திருவள்ளுவர் நகரைச் சேர்ந்தவர் திருமலை வாசுதேவன். இவரின் மனைவி லலிதா. இந்தத் தம்பதிக்கு ஹர்சன் ராஜ், புவன் ராஜ் ஆகிய இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளன... மேலும் பார்க்க

கலெக்டர் ஆபீஸ் வந்த போலி சிபிஐ அதிகாரி! - தவெக உட்பட 20-க்கும் அதிகமான போலி ஐடி கார்டுகள் பறிமுதல்

. நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சுகாதார நல்வாழ்வுக் குழுமத்தின் தற்காலிக ஆய்வாளர் பணிக்கான நேர்முகத் தேர்வு நேற்று நடைபெற்றது. அதில் கலந்து கொள்வதற்காக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து ... மேலும் பார்க்க

பீகார் : 40 மீட்டர் மொபைல் போன் டவரை தூக்கிச் சென்ற திருடர்கள்! - அதிகாரிகள் அதிர்ச்சி

பீகாரில் அடிக்கடி வித்தியாசமான திருட்டு நடப்பது வழக்கம். இதற்கு முன்பு ஆற்றின் அமைக்கப்பட்டு இருந்த இரும்பு பாலத்தை கூட இரவோடு இரவாக திருடிச்சென்ற சம்பவங்கள் நடந்து இருக்கிறது. இப்போது மொபைல் போன் டவர... மேலும் பார்க்க

கேரள - தமிழக எல்லை: 13 ஆண்டுகளில் 23 குழந்தைகள் மர்ம மரணம் - சிபிஐ விசாரணைக்கு பரிந்துரைத்த கோர்ட்!

கேரளம்-தமிழ்நாடு எல்லையோர மாவட்டமான பாலக்காட்டின் பல்வேறு பகுதிகளில் கடந்த 13 ஆண்டுகளில் 23 குழந்தைகள் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளனர். பாலக்காடு மாவட்டத்தில் ​வாளையார், கசபா, கொல்லங்கோடு, ​பட்டாம்ப... மேலும் பார்க்க