செய்திகள் :

’கோவை தவெக-வில் உட்கட்சிப் பூசலா?’ – சூலூர் எம்.எல்.ஏ சுகுமார் விளக்கம்!

post image

கோவை மாவட்டம் சூலூர் சட்டமன்ற  உறுப்பினர் சுகுமார் நேற்றிரவு கணியூர் பகுதியில், தேர்தலில் தனக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்த பொதுமக்களுக்கு வாகனத்தில் சென்றபடி நன்றி தெரிவித்தார். அப்போது அங்கு திரண்ட த.வெ.க-வினர்  சட்டமன்ற உறுப்பினர் சுகுமாருக்கு மாலை அணிவிக்க முயன்றனர். அக்கட்சியை சேர்ந்த வசந்தி என்ற நிர்வாகியை, த.வெ.க-வை சேர்ந்த மற்றொரு தரப்பு நிர்வாகிகளே மாலை அணிவிக்க விடாமல் தடுத்து நிறுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் சட்டமன்ற உறுப்பினர் சுகுமார் முன்னிலையிலேயே இருதரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் மற்றும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

இது தொடர்பாக சூலூர் சட்டமன்ற உறுப்பினர் சுகுமார் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், “நேற்று கணியூர் பகுதியில் எனக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி சொல்லிவிட்டு சென்றுவிட்டேன். 5 கி.மீ. தூரம் தாண்டி சென்ற பிறகுதான், கணியூரில் பிரச்னை என்றார்கள்.  இது தொடர்பாக யாரும் எழுத்துப்பூர்வமாக போலீசில் புகார் அளிக்கவில்லை. இச்சம்பவத்தில் தாக்கப்பட்டதாக கூறிய வசந்தியிடம் பேசினேன். அவர் நன்றாக இருப்பதாகவும், இரண்டு நாளில் என்னை வந்து சந்திப்பதாகவும் கூறினார். என்னுடன் வந்தவர்கள் யாரும் அவரை தள்ளிவிடவில்லை. அவரை தள்ளிவிட்டவர் அவருடன் வந்தவர் தான். த.வெ.க-வில் உட்கட்சி பிரச்னை இல்லை. ஏதொவொரு அழுத்தம் காரணமாக வசந்தி புகார் கூறியுள்ளார்.

சுகுமார் எம்.எல்.ஏ
சுகுமார் எம்.எல்.ஏ

அங்கு நடந்தவை எல்லாம் எதேச்சையாக நடந்தது. திட்டமிட்டு பழிவாங்க நடக்கவில்லை. என்னை பிடிக்காதவர்கள் காழ்ப்புணர்ச்சி காரணமாக, என்னைப் பற்றி தவறான கருத்துகளை பரப்புகிறார்கள். யாரையும் நான் எதிரியாக பார்க்கவில்லை. அனைத்து கட்சியில் இருப்பவர்களுக்கும், கட்சிக்குள் சின்ன மனக்கசப்பு இருக்கத்தான் செய்யும். த.வெ.க-விலும் சிலருக்கு மனக்கசப்பு இருக்கலாம். ஆனால் மனக்கசப்பு என்பது வேறு, குழுவாக செயல்படுதல் என்பது வேறு. இங்கு யாரும் குழுவாக செயல்படவில்லை. புதிய மாவட்டச் செயலாளர் யார் என்பதை தலைமை அறிவிக்கும்.

புதிதாக வருபவர்களால் தங்களது இடத்திற்கு பாதிப்பு வருமோ என்ற பயம் பழையவர்களுக்கு இருக்கத்தான் செய்யும். கட்சியில் உள்ள அனைவரிடமும் ஒற்றுமையை ஏற்படுத்தியுள்ளேன். கட்சியினர் சண்டை போட வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளேன். வேலை செய்தால் பதவி தானாக வரும். புதிய தண்ணீர் வந்தால் தான் குளம் நன்றாக இருக்கும். அதுபோல புதியவர்கள் வந்தால் தான் கட்சி நன்றாக இருக்கும்” என்றார்.

"அன்புமணியை தலைவராக ஏற்க தயாராக இல்லை; வன்னிய மக்களை வைத்து..!"- பாமக முன்னாள் எம்எல்ஏ அருள்

"பாமகவினர் அன்புமணியை தலைவராக ஏற்க தயாராக இல்லை. வன்னிய மக்களை வைத்து பிழைப்பு நடத்திக்கொண்டிருக்கும் அன்புமணியை புறக்கணிக்க வேண்டும்"- என்று பாமக முன்னாள் எம்எல்ஏ அருள் பேசியிருக்கிறார். சேலத்தில் தன... மேலும் பார்க்க

பழநி : "முன்னாள் அமைச்சர் மூர்த்தி மினிஸ்டர் கட்டிங் என பணம் வாங்கினார்.!"- நிர்மல் குமார் பகீர்

முதல்வர் விஜய் தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் இன்று (ஜூலை.16) நடைபெற்றது. இந்தக் கூட்டம் முடிந்த பிறகு அமைச்சர் நிர்மல் குமார் செய்தியாளர்களைச் சந்தித்து பேசியிருக்கிறார். "இன்று நடைபெற்றது பட்ஜெட்... மேலும் பார்க்க

விழுப்புரம்: குப்பைக் கிடங்காக மாறிய திண்டிவனம் மேம்பாலம்! - கண்டுகொள்ளாத நகராட்சி; தீர்வு?

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தின் மையப் பகுதியில் அமைந்திருக்கும் மேம்பாலத்தை, நகரின் இதயப்பகுதி என்றே சொல்லலாம். அந்த அளவுக்கு உள்ளூர் மற்றும் வெளியூர் மக்களை பொதுப் போக்குவரத்துடன் இணைக்கும் பாலம... மேலும் பார்க்க

"உங்கள் பிரதமரின் வயது என்ன? நான் எப்போதாவது கேட்டேனா?" - மம்தா பானர்ஜி தாக்கு

15 ஆண்டுகளாக மேற்கு வங்கத்தை ஆட்சி செய்த திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜிக்கு, இந்த முறை சொந்த தொகுதியிலேயே வெற்றியைத் தரவில்லை மக்கள். ஆட்சியை இழந்தது மட்டுமல்லாமல், தற்போது கொஞ்சம் கொஞ்சமாக... மேலும் பார்க்க

நாடாளுமன்றத்திற்குள் 'நோ' ஸ்மார்ட் வாட்ச்; வாகனத்தில் 10 கி.மீ மேல் வேகம் 'நோ'; MP-களுக்கான ரூல்ஸ்!

வருகிற ஜூலை 20-ம் தேதி முதல் ஆகஸ்ட் 13-ம் தேதி வரை, நாடாளுமன்றத்தில் மழைக்காலக் கூட்டத்தொடர் நடக்க உள்ளது.இந்தக் கூட்டத்தொடர்களை அவை தலைவர்கள் வழிநடத்துவார்கள்... நாடாளுமன்ற உறுப்பினர்கள் பேசுவார்கள்.... மேலும் பார்க்க

"எந்தவொரு உயிரும் விலைமதிப்பற்றது" - சோனம் வாங்சுக் உடல்நிலை வழக்கில் டெல்லி உயர்நீதிமன்றம் தீர்ப்பு

சோனம் வாங்சுக்கின் உண்ணாவிரதப் போராட்டம் தொடங்கி இன்றுடன் 19 நாள்கள் ஆகின்றன. நீட் தேர்வு வினாத்தாள் கசிவுக்கும் நீட் மாணவர்களின் மரணத்திற்கும் பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பத... மேலும் பார்க்க