செய்திகள் :

கோவை: மின்சாரம் தாக்கி காட்டு யானை உயிரிழப்பா? – வனத்துறை விசாரணை!

post image

கோவை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய வனப்பகுதியில் உள்ள காட்டு யானை உள்ளிட்ட வனவிலங்குகள் உணவு மற்றும் தண்ணீர் தேடி கிராமங்களுக்குள் நுழைந்து வருகின்றன. இந்த நிலையில் தடாகம் அருகேயுள்ள 24-வீரபாண்டி கிராமத்தில் வனப்பகுதியில் இருந்து சுமார் 50 மீட்டர் தொலைவில் உள்ள அருள் ஆண்டனி என்பவருக்குச் சொந்தமான விவசாய நிலத்தில் மின்மாற்றி அருகே ஆண் யானை ஒன்று இறந்த நிலையில் கிடந்துள்ளது. இது குறித்து அப்பகுதி மக்கள் வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர்.

இந்த தகவலின் பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வனப் பணியாளர்கள் மற்றும் அதிகாரிகள் தீவிர தணிக்கை மேற்கொண்டனர். மேலும் அந்த யானை மின்சாரம் தாக்கி உயிரிழந்ததா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்து கண்டறிய வனக் கால்நடை மருத்துவர்கள் உடற்கூறாய்வு செய்தனர். இந்த முடிவுகள் வந்த பிறகே யானை உயிரிழப்பிற்கான முழு விவரமும் தெரியவரும் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து வனத்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காட்டு யானை உயிரிழந்த சம்பவம் வன ஆர்வலர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அதிக நாவல் பழ விளைச்சல்! வருங்கால வறட்சிக்கு எச்சரிக்கை மணியா? - தாவரவியல் வல்லுநர்கள் சொல்வதென்ன?

"இந்தாண்டு நாவல் பழத்தின் அதிகப்படியான விளைச்சல் என்பது அடுத்து வரப்போகும் பெரிய வறட்சிக்காக இயற்கை நமக்குக் கொடுத்திருக்கும் எச்சரிக்கை மணி..!" — கடந்த சில வாரங்களாக வாட்ஸ்அப், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிரா... மேலும் பார்க்க

போர்க்களத்திலும் குறையாத கடல் ஆமைகள் மீதான கரிசனம்; உலகை உலுக்கிய சுற்றுச்சூழல் ஆர்வலர் மரணம்!

லெபனான் நாட்டில் நடக்கும் பயங்கரமான போருக்கு மத்தியிலும், தான் நேசித்த கடற்கரையையும், அங்கு வாழும் ஆமைகளையும் காப்பாற்ற நினைத்த ஒரு பெண்ணின் கதை சோகமாக முடிந்துள்ளது.லெபனானின் புகழ்பெற்ற சுற்றுச்சூழல்... மேலும் பார்க்க

`சுற்றுச்சூழலின் Bio Indicators'- தனித்துவமான புலி வண்டுகள் குறித்து விளக்கும் பல்லுயிர் ஆய்வாளர்கள்

இவ்வுலகில் வாழும் அத்தனை உயிர்களும் சூழலியலோடு ஒன்றி இயங்குவதோடு மட்டுமன்றி, சுற்றுச்சூழலின் நிலையையும் உயிர் காட்டியாக (Bio indicators) இருந்து சுட்டுகின்றன.மழை வருவதை முன்கூட்டியே உணர்த்தும் தும்பிக... மேலும் பார்க்க

``தென்மேற்கு பருவமழைக் காலத்தில் 'El Nino' தீவிரம் அடைய வாய்ப்பு" - வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

மத்திய மற்றும் கிழக்கு பசிபிக் பெருங்கடல் பகுதியில் 'எல் நினோ' (El Nino) காலநிலை மாற்றம் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) உறுதிப்படுத்தியுள்ளது. தற்போது தீவிரமடைந்து ... மேலும் பார்க்க

Philliphines-ல் சக்திவாய்ந்த நில நடுக்கம்: ஜப்பான், இந்தோனேசியா, பிலிப்பைன்ஸில் சுனாமி எச்சரிக்கை!

பிலிப்பைன்ஸ் நேரப்படி, இன்று காலை 7.40 மணிக்கு, பிலிப்பைன்ஸின் தெற்கு தீவான மிண்டானாவில் 7.8 அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவாகி உள்ளது. இதையொட்டி, ஜப்பான், பிலிப்பைன்ஸ், இந்தோனேசியா ஆகிய நாடுகளில... மேலும் பார்க்க