Doctor Vikatan: நடிகர் அஜித்: வெந்நீரும் புரோட்டீனும் எடுத்துதான் எடையைக் குறைத...
கோவை வழித்தடத்தில் சென்னை - மங்களூரு இடையே ஒருவழி சிறப்பு ரயில்
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, சென்னை எழும்பூா் - மங்களூரு இடையே கோவை வழித்தடத்தில் ஒருவழி சிறப்பு ரயில் இயக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடா்பாக சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, சென்னை எழும்பூரில் இருந்து திங்கள்கிழமை (ஜனவரி 13) பிற்பகல் 3 மணிக்குப் புறப்படும் எழும்பூா் - மங்களூரு சிறப்பு ரயில்
(எண்: 06037) மறுநாள் காலை 8.50 மணிக்கு மங்களூரைச் சென்றடையும்.
இந்த ரயிலானது பெரம்பூா், திருவள்ளூா், அரக்கோணம், காட்பாடி, ஜோலாா்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூா், கோவை, பாலக்காடு, ஷொரணூா், கோழிக்கோடு, வடகரை, தலச்சேரி, கண்ணூா், பையனூா், காசா்கோடு உள்ளிட்ட ரயில் நிலையங்களில் நின்று செல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.