செய்திகள் :

``கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் தாக்குதல்; கேரளா உறுதியாக நடவடிக்கை எடுக்கும்" - பினராயி விஜயன்

post image

உலகம் முழுவதும் கிறிஸ்துவர்கள், இயேசு பிறந்த நாளை கிறிஸ்துமஸ் தினமாக கொண்டாடி வருகின்றனர். இந்தியாவிலும் கிறிஸ்துவர்கள் இப்புனித நாள் கொண்டாட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.

கேரளா மாநிலம் பாலக்காட்டில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களை நடத்த எதிர்ப்பு தெரிவித்து பாஜக- ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் தாக்குதல் நடத்தியிருந்தனர். இது பதற்றத்தை ஏற்படுத்தி இருந்தது.

கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் மீது தாக்குதல்
கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் மீது தாக்குதல்

மத்திய பிரதேசம், பீகார், சத்தீஸ்கர், ஜார்க்கண்ட் மற்றும் அஸ்ஸாம் உள்ளிட்ட வட இந்தியாவின் பல மாநிலங்களில் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு அமைக்கப்பட்டிருந்த அலங்கார வளைவுகள், குடில்கள், கிறிஸ்துமஸ் தாத்தா உருவங்களை தாக்கியும் சேதப்படுத்தியும் இந்துத்துவா அமைப்பினர் தாக்குதலில் ஈடுபட்டனர்.

தனியார் பள்ளிகள், கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களுக்கு விடுமுறை விடவும் கூட சில இடங்களில் இந்துத்துவா அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன. இத்தகைய வன்முறை சம்பவங்களால் பதற்றமான சூழல் நிலவுகிறது. கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களில் நடந்த இத்தகைய தாக்குதல்களுக்கு கேரளா முதல்வர் பினராயி விஜயன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் செய்தியாளர் சந்திப்பில், ``உத்தரப் பிரதேச அரசு கிறிஸ்துமஸ் திருநாளின் விடுமுறையை ரத்து செய்து, முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயின் பிறந்த நாளைக் கொண்டாட கல்வி நிலையங்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. இத்தகைய, நடவடிக்கைகள் அனைத்தும் கிறிஸ்துமஸ் திருநாளின் முக்கியத்துவத்தை குறைக்கும் முயற்சிகள் ஆகும்.

கேரளம் இதுபோன்ற நடவடிக்கைகளில் இருந்து விடுபட்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டாலும், அந்த நம்பிக்கையைக் குலைக்கும் விதமாக சில முயற்சிகள் நடைபெற்றுள்ளன. மாநிலத்தின் தபால் நிலையங்களில் நடத்தப்படும் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டங்களில், பா.ஜ.க-வுடன் தொடர்புடைய பி.எம்.எஸ். தொழிற்சங்கத்தினர் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் கீதங்களை பாடவேண்டும் எனும் கோரிக்கையை முன்வைத்தன.

கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களில் பிரதமர் மோடி
கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களில் பிரதமர் மோடி

இதற்கு, எதிர்ப்புகள் அதிகரித்ததால் பணியாளர்கள் நடத்த திட்டமிட்டிருந்த கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களை திருவனந்தபுரம் தபால் நிலையத்தின் தலைமை அதிகாரி, ரத்து செய்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இத்துடன், பாலக்காடு மாவட்டத்தில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களில் ஈடுபட்ட குழுவினர் மீது சங் பரிவார் அமைப்பினர் தாக்குதல் நடத்தியிருக்கின்றனர். இந்தத் தாக்குதல்களை பா.ஜ.க தலைவர்கள் நியாயப்படுத்த முயற்சிக்கின்றனர்.

சில தனியார் பள்ளிகளில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களை நடத்தக்கூடாது என ஆர்.எஸ்.எஸ். அமைப்புடன் தொடர்புடைய சிலர் அழுத்தம் கொடுத்து மிரட்டுவதாக புகார்கள் எழுந்திருக்கிறது. அது குறித்து அவசர நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறோம்.

மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம், கர்நாடகா, ஹரியானா, ஒடிசா, சத்தீஸ்கர், பீகார் மற்றும் ஜார்க்கண்ட் உள்ளிட்ட மாநிலங்களில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களை இலக்காகக் கொண்ட வன்முறை மற்றும் அச்சுறுத்தல் சம்பவங்கள் மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்துகின்றன. இவை உலகம் முழுவதும் எதிரொலிக்கும் அமைதி மற்றும் மனிதநேயச் செய்தியை மழுங்கடிக்கும் நோக்கம் கொண்டவை.

அரசியலமைப்புச் சுதந்திரங்களையும், கேரளாவின் பன்மைத்துவ நெறிமுறைகளையும் குறைமதிப்பிற்கு உட்படுத்தும் எந்தவொரு முயற்சியும் பொறுத்துக்கொள்ளப்படாது. கொண்டாட்டங்களைத் தடுப்பவர்கள் மீதும், மதப் பாகுபாட்டில் ஈடுபடும் கல்வி நிறுவனங்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களில் பிரதமர் மோடி
கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களில் பிரதமர் மோடி

மதச்சார்பின்மை மற்றும் சகமனித வாழ்வைக் குறைமதிப்பிற்கு உட்படுத்தும் எந்தவொரு முயற்சியையும் கேரளா உறுதியாக எதிர்க்கும்." எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

TVK: கிறிஸ்துமஸ் தாக்குதல்; ``இந்தியாவின் எந்த மூலையிலும் நடைபெறக் கூடாது" - தவெக அருண்ராஜ்

உலகம் முழுவதும் கிறிஸ்துவர்கள், இயேசு பிறந்த நாளை கிறிஸ்துமஸ் தினமாக கொண்டாடி வருகின்றனர். இந்தியாவிலும் கிறிஸ்துவர்கள் இப்புனித நாள் கொண்டாட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.ஆனால் வடமாநிலங்களான மத்திய பிரதேசம... மேலும் பார்க்க

பாஜக கூட்டம், புறக்கணித்த அண்ணாமலை டு திமுக-வை நெருங்கும் ராமதாஸ்; டென்ஷனில் அன்புமணி! | கழுகார்

கடுப்பில் மேற்கு மண்டல நிர்வாகிகள்!உத்தரவு போட்ட ‘தில்’ மாஜி...‘தில்’லான மாஜி அமைச்சர் வசமிருக்கும்மேற்கு மண்டலத்தில்,உடன்பிறப்புகள் பயங்கர கோபத்தில்இருக்கிறார்களாம்.அங்கு ஏற்கெனவே அனைத்து கன்ட்ரோலும்... மேலும் பார்க்க

"அந்தப் போட்டியில் சிம்புவின் விக்கெட்டை நான்தான் எடுத்தேன்" - கிரிக்கெட் அனுபவம் பகிரும் ஸ்டாலின்

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இளம் தலைமுறை விளையாட்டு வீரர்களுடன் கலந்துரையாடும் ' Vibe With MKS' என்ற நிகழ்ச்சி நேற்று (டிச. 24) வெளியாகியிருந்தது.அதில் பேசியிருந்த மு.க. ஸ்டாலின், "நான் ஒரு ஆஃப் ஸ்ப... மேலும் பார்க்க

ஆண்டிப்பட்டி தொகுதியைக் குறி வைக்கும் அமமுக; "NDA கூட்டணியில் நாங்களா?" - கொதிக்கும் டிடிவி தினகரன்

முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆரின் 38 ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில் உள்ள எம்ஜிஆர் திருவுருவச் சிலைக்கு அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் மாலை அணிவித்து மரியாதை செல... மேலும் பார்க்க

தவெக கூட்டணி: "ஓபிஎஸ், டிடிவி தினகரனிடம் பேசுவது உண்மைதான்" - சஸ்பென்ஸ் உடைத்த செங்கோட்டையன்

தமிழக வெற்றிக் கழக நிர்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.அப்போது அவர் கூறுகையில், "ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் நடத்திய நிகழ்ச்சியில்,... மேலும் பார்க்க