சிறை விமர்சனம்: தடதடக்கும் த்ரில்லர், ஆழமான உணர்வுகள் - நம் அகத்தைச் சிறைபிடிக்க...
சிறை: "நல்ல படம் கொடுத்திருக்கோம் என நம்புறோம்” - நடிகர் விக்ரம் பிரபு
விக்ரம் பிரபு நடிப்பில் உருவாகியிருக்கும் 'சிறை' திரைப்படம் இன்று (டிச. 25) திரையரங்கில் வெளியாகியிருக்கிறது.
'டாணாக்காரன்' இயக்குநர் தமிழ் எழுதிய கதையை, அறிமுக இயக்குநர் சுரேஷ் இயக்கியிருக்கிறார்.
‘சிறை’ படத்தின் முதல் காட்சியை ரசிகர்களுடன் பார்த்த பிறகு நடிகர் விக்ரம் பிரபு செய்தியாளர்களைச் சந்தித்து பேசியிருக்கிறார்.
" எல்லோருக்கும் கிறிஸ்துமஸ் வாழ்த்துகள். இன்றைக்கு 'சிறை' படம் வெளியாகி இருக்கிறது.
ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. நிறைய குடும்பங்கள் இந்தப் படத்தை பார்க்க வருகிறார்கள்.
நிறைய பேர் எனக்கு அழைத்து பேசுகிறார்கள். ஒரு நல்ல படத்தைக் கொடுத்திருக்கிறோம் என்று நம்புகிறோம்.
படத்துக்கு நல்ல வரவேற்பு வரத் தொடங்கியிருக்கிறது. எல்லோரும் படத்தை தியேட்டருக்கு சென்று பாருங்கள்" என்று பேசியிருக்கிறார்.

தொடர்ந்து பேசிய படத்தின் இயக்குநர் சுரேஷ், " இது விக்ரம் சாரின் 25-வது படம். 'டாணாக்காரன்' இயக்குநர் தமிழின் வாழ்க்கையில் நடந்த கதைதான் இந்தப் படம். எல்லோரும் இந்தப் படத்திற்கு சப்போர்ட் செய்யுங்கள்" என்று கூறியிருக்கிறார்.



















