'அடிச்சான் பாரு அப்பாயின்மென்ட் ஆர்டர்!' - அண்ணாமலைக்கு புதிய பதவி; அப்செட்டில் ...
சக்தி விகடன்-ஸ்ரீவாராஹி மந்திரபீடம் இணைந்து நடத்தும் சனிப்பெயர்ச்சி ஹோமம்: நீங்களும் சங்கல்பிக்கலாம்
அன்னை வாராஹி ஆபத்துகளில் இருந்து நம்மைக் காப்பவள். இந்த அகிலத்தை ஆளும் அன்னை ராஜராஜேஸ்வரியில் அருகில், 'தண்டினி' என்கிற திருநாமத்தோடு அருள்பவள். லலிதாம்பிகையின் படைத்தளபதியாகத் திகழ்பவள். வராக (பன்றி) முகத்துடன் அருள்வதால் இவளுக்கு, 'வாராஹி' என்ற திருநாமம் ஏற்பட்டது.
பரமேஸ்வரனைப்போன்று மூன்று திருக்கண்கள் உடைய இந்த அன்னை எட்டு திருக்கரங்களுடன் திகழ்பவள். சங்கு - சக்கரம், கட்கம்(கத்தி), உலக்கை, கலப்பை, உடுக்கை ஆகியன ஏந்தி அபய- வரத முத்திரைகளுடன் காட்சி தருபவள் இந்த அன்னை.
சிவப்பு நிற ஆடை உடுத்தி, சந்திர கலை தரித்து நவரத்தினக் கிரீடம் அணிந்தவளாக சிம்ம வாகனத்தில் வீற்றிருக்கும் இந்த அன்னையை தரிசித்து வழிபட்டால் துன்பங்கள் அகலும்; பூமி தொடர்பான அனைத்துக் காரியங்களும் சுமுகமாக நடந்தேறும். இயற்கைச் சீற்றங்களில் இருந்து விடுபடலாம். எதிரிகளின் தொல்லைகள் தீரும்.
ஸ்ரீவாராஹி மந்திரபீடம்
அன்னை வாராஹிக்கு ஆங்காங்கே கோயில்கள் அமைந்திருந்தாலும் அன்னைக்கென்றே பிரத்யேகமாக 64 வாராஹி ரூபங்களும் எழுந்தருளியிருக்கும் கோயிலாகத் திகழ்கிறது, 'சித்தாத்தூர் ஸ்ரீவாராஹி மந்திர பீடம்.' இந்த இடத்துக்கு வந்தாலே மனம் அமைதி அடைவதோடு நேர்மறை அதிர்வுகள் நிறைவதையும் உணரலாம். காரணம், இது சித்தர்கள் அன்னையை வழிபட்ட பூமி என்பதுதான்.
ஹோமத்தில் கலந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யவும்.

முற்காலத்தில் இந்தப் பகுதி, 'சித்தர்கள் வாழும் ஊர்' என்று அழைக்கப்பட்டுபின் சித்தாத்தூர் என்று மருவியது என்கிறார்கள். அதற்கேற்ப இந்தக் கோயிலில் மாண்டுக சித்தரின் ஜீவசமாதி அமைந்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த ஆலயத்தில் மூலவராக அன்னை ராஜராஜேஸ்வரி திகழ்கிறாள். அவளுக்கு எதிர்புறம் அகத்தியரின் சந்நிதி அமைந்திருக்கிறது. அகத்தியர் கண்கள் அன்னையை தரிசிக்கும் வகையில் நேராக அமைக்கும்படி உத்தரவுகிடைத்து அதற்கேற்ப இங்கே பிரதிஷ்டை செய்திருக்கிறார்கள். ஆலயத்துக்கு நுழையும் முன்பாக வெளியே பிரமாண்ட முருகர் திருமேனி அமைந்துள்ளது. அதை தரிசித்து உள் நுழைந்தால் திருக்குளம்.
இந்தத் திருக்குளத்தில் அபூர்வ அத்தி மர வாராஹியின் திருமேனி ஒன்று நீரில் அமிழ்ந்திருக்கிறது. மிகவும் உக்கிரமாகவும் அதேவேளையில் வேண்டும் வரம் அருள்பவளாகவும் திகழும் இந்த அன்னையை ஒவ்வொரு பௌர்ணமிக்கும் வெளியே எழுந்தருளச் செய்து வழிபாடுகள் செய்து மீண்டும் திருக்குளத்தில் இட்டுவிடுகிறார்கள். இந்தப் பௌர்ணமி பூஜையில் கலந்துகொண்டால் பாவங்கள் விலகும். பகைவர்கள் தொல்லை மறையும் என்பது நம்பிக்கை.
பொதுவாக வாராஹி அன்னையை ஒரு திருக்கோலத்தில்தான் தரிசித்திருப்போம். ஆனால் அன்னை 64 திருக்கோலங்களை உடையவள். அப்படிப்பட்ட 64 வாராஹி ரூபங்களையும் இங்கே பிரதிஷ்டை செய்திருக்கிறார்கள். 64 வாராஹிகளுக்கும் நடுவே பிரமாண்டமாக 15 அடி உயரத்தில் அமைந்திருக்கும் சந்தான வாராஹி காண்பவர்களை ஆகர்ஷிக்கும் சக்தி கொண்டவள். மடியில் ஒரு குழந்தையைக் கொண்டவளாகக் காட்சி தரும் இந்த அன்னையின் திருமேனி சாலக்கிராமம், வலம்புரி சங்கு மற்றும் நர்மதா நதியில் கிடைத்த பாண லிங்கம் ஆகியவற்றால் செய்யப்பட்டுள்ளது.
எனவே இந்த அன்னையின் முன் நின்று வணங்கினாலே நம் மனதில் கவலைகள் எல்லாம் பறந்துபோகும். பிள்ளை வரம் தரும் இந்த அன்னையை வழிபட்டு இங்கு சொல்லும் பிரார்த்தனையை மேற்கொண்டால் விரைவில் சந்தான பாக்கியம் கிடைக்கும் என்கிறார்கள்.
ஹோமத்தில் கலந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யவும்.

இப்படிப்பட்ட அற்புதமான வாராஹி ஆலயத்தில் வாக்கியப் பஞ்சாங்கப்படி நடைபெறும் சனிப்பெயர்ச்சியை முன்னிட்டு பிரமாண்ட ஹோமம் ஒன்றை சக்தி விகடனும் வாராஹி மந்திரபீடமும் இணைந்து நடத்த இருக்கிறது. மார்ச் 6 - ம் தேதி வாக்கியப்பஞ்சாங்கப்படி சனிபகவான் கும்ப ராசியில் இருந்து மீனராசிக்குள் 8.24 மணிக்குப் பெயர்ச்சி ஆக இருக்கிறது. இதை ஒட்டி அனைத்து ஆலயங்களிலும் விசேஷ வழிபாடுகள் நடைபெறும். அதேவேளையில் வாராஹி மந்திர பீடத்தில் விகடன் வாசகர்களின் நலனை முன்னிட்டு சனிப்பெயர்ச்சி விசேஷ பரிகார ஹோமம் மற்றும் ஆராதனைகளை நடைபெறும். கணபதி ஹோமம், நவகிரக ஹோமம், சனிபகவான் ப்ரிதிக்காக விசேஷ ஆவர்த்திகளோடு நடைபெற இருக்கும் சிறப்பு ஹோமம் ஆகியவற்றோடு அன்னை வாராஹிக்கும் விசேஷ வழிபாடுகள் நடைபெற இருக்கின்றன. இந்த ஹோமத்தை வாராஹி குருஜியே முன்னின்று நடத்த இருக்கிறார்.
இந்த சனிப்பெயர்ச்சி கும்பம், மீனம், மேஷம், சிம்மம், கன்னி, தனுசு ஆகிய ராசிக்காரர்களுக்குக் கொஞ்சம் சிரம திசையைத் தரலாம். எனவே இந்த சிறப்பு ஹோமத்தில் சங்கல்பம் செய்துகொண்டால் நிச்சயம் சனியால் உண்டாகும் கஷ்டங்கள் குறையும்; நற்பலன்கள்கள் மேம்படும் என்கிறார்கள் பெரியோர்கள். மேலும் 12 ராசிக்காரர்களும் இதில் சங்கல்பம் செய்துகொண்டு அன்னையை மனதார வழிபட்டால் நிச்சயம் சுபபலன்கள் பெறுகும். வீட்டில் சுபகாரியத்தடைகள் நீங்கும். தொழில் அபிவிருத்தி உண்டாகும். சத்ருக்களின் சூழ்ச்சிகளை வெல்லும் வலிமை கிடைக்கும். இப்படி எண்ணிலடங்கா நன்மைகளைத் தரும் இந்த வழிபாட்டில் கலந்துகொண்டு வாசகர்கள் பயன் அடையுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
இடம் : ஸ்ரீ வாராஹி மந்திர பீடம், சித்தாத்தூர், வேடந்தாங்கல்
நாள் : 6.3.2026
நேரம் : காலை 8.30 மணி

வாசகர்கள் கவனத்துக்கு:
இந்தப் பூஜையில் வாசகர்களே கர்த்தாக்கள் என்பதால், அவர்களின் பங்களிப்பும் அவசியம் எனும் அடிப்படையில், பூஜைக்கான சங்கல்பக் கட்டணம் (ரூ.500/- மட்டும்) நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பூஜை சங்கல்பத்துக்கு முன்பதிவு செய்யும் வாசகர்களின் பிரார்த்தனைகள், வழிபாட்டில் சமர்ப்பிக்கப்படும்.
அத்துடன், அவர்களுக்கு அபிஷேகம் செய்யப்பட்ட ஹோமப் பிரசாதம் (ஹோம பஸ்பம் + விபூதி + குங்குமம்) அனுப்பிவைக்கப்படும் (தமிழகம் - புதுவை பகுதிகளுக்கு மட்டும்). தற்போதைய சூழலில், அரசு வழிகாட்டுதல் நெறிமுறைப்படி வழிபாடுகள் நிகழவுள்ளன.
ஆகவே, வைபவத்தை நேரில் தரிசிக்க இயலாத நிலையில், வாசகர்கள் இணைய தளத்தில் தரிசித்து மகிழ வசதியாக, வழிபாட்டு வைபவங்கள் வீடியோ வடிவில் சக்தி விகடன் ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியாகும். வாசகர்கள் தரிசித்து மகிழலாம்.
முன்பதிவு மற்றும் சங்கல்பம் விவரங்களுக்கு: 044 - 66802980/07















