செய்திகள் :

'சங்கமம்' படத்தில ஜூனியர் ஆர்ட்டிஸ்டா இருந்த ஒருத்தர் இன்னைக்கு.!'- சூரி குறித்து ஆர்.ஜே.பாலாஜி

post image

மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில், 'மண்டாடி' படத்தில் நடித்திருக்கிறார் நடிகர் சூரி.

ஆர்.எஸ். இன்ஃபோடெய்ன்மென்ட் இப்படத்தைத் தயாரித்திருக்கிறது. இப்படத்தில் கிரியேட்டிவ் தயாரிப்பாளராக வெற்றிமாறன் பணியாற்றி இருக்கிறார்.

ஜி.வி. பிரகாஷ் இந்தப் படத்திற்கு இசையமைத்திருக்கிறார். இந்நிலையில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று (ஆக. 28) அன்று நடைபெற்றது.

மண்டாடி
மண்டாடி

இதில் கலந்துகொண்டு பேசிய ஆர்.ஜே. பாலாஜி, " நான் இங்கு வந்ததற்கு ஒரே காரணம் என் நண்பர் சூரி தான். தனிப்பட்ட முறையில் எங்களுக்கு இடையே நல்ல நட்பு இருக்கிறது. நான் படப் பிரச்னையை சந்தித்தப்போது போன் செய்து எனக்கு முதலில் ஆறுதல் சொன்னது சூரி சார் தான்.

நீங்கள் எல்லோருக்கும் மிகப்பெரிய இன்ஸ்பிரேஷன். 1999-ம் ஆண்டு வெளியான 'சங்கமம்' படத்தில் விஜயகுமார் சார் காரால் அடிபட்டுப் பறக்கும் சீனில் இருந்த ஒரு ஜூனியர் ஆர்ட்டிஸ்ட்தான் சூரி. அதிலிருந்து சினிமாவில் ஒருவர் ஹீரோ ஆகுவதற்கு 25 வருடங்கள் ஆகியிருக்கிறது.

நடிகர் சூரி
நடிகர் சூரி

அவர் எந்த இடத்திலும் விட்டுக்கொடுக்கவில்லை. தொடர்ந்து முயற்சி செய்துகொண்டே இருந்தார். விடாமுயற்சியுடன் உழைத்தால் யார் வேண்டுமானாலும் சினிமாவில் சாதிக்க முடியும் என்பதற்கு அவர்தான் உதாரணம். இன்று அவருக்குப் பெரிய அளவில் வரவேற்பு கிடைப்பதைக் பார்க்கும்போது மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கிறது" என்று பேசியிருக்கிறார்.

Sherif: "இன்னொருத்தருடைய உழைப்புல அவங்க பெயரை போட்டுக்கிறாங்க!" - நடன இயக்குநர் ஷெரிஃப்

'கனிமா', 'பவள மல்லி' உள்ளிட்ட பல பாடல்களுக்கு நடன இயக்கம் செய்தவர் நடன இயக்குநர் ஷெரிஃப். அவருடைய சமூக வலைதளப் பக்கத்தில் அவர் சமீபத்தில் பதிவிட்ட காணொளி, பலரின் கவனத்தை ஈர்த்து வருகிறது. அந்தக் காணொள... மேலும் பார்க்க

Mandaadi: "தமிழரின் கதையை உலகம் பேசுமாறு செய்வதே பெருவெற்றி!" - 'மண்டாடி'க்கு சீமான் பாராட்டு!

சூரியின் 'மண்டாடி' படத்திற்கு வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இயக்குநர் மதிமாறன் புகழேந்தி இயக்கியிருக்கும் இந்தப் படத்தில் மகிமா நம்பியார், சத்யராஜ், சுஹாஸ் ஆக... மேலும் பார்க்க

Venkat Prabhu: "இதுனாலதான் நான் லண்டனுக்கு போகல!"- 'லெனின் பாண்டியன்' பட நிகழ்வில் வெங்கட் பிரபு

அறிமுக இயக்குநர் டி.டி. பாலசந்திரன் இயக்கத்தில் தர்ஷன் கணேசன், கங்கை அமரன், ரோஜா ஆகியோர் நடித்திருக்கும் 'லெனின் பாண்டியன்' திரைப்படம் இந்த மாதம் 25-ஆம் தேதி திரைக்கு வருகிறது. இந்தப் படத்தின் ப்ரீ ரி... மேலும் பார்க்க

Ilaiyaraaja: "இவன் என்கிட்டயே நடிப்பான்" - 'கங்கை அமரன்' பற்றி இளையராஜா கலகல

அறிமுக இயக்குநர் டி.டி. பாலசந்திரன் இயக்கத்தில் தர்ஷன் கணேசன், கங்கை அமரன், ரோஜா ஆகியோர் நடித்திருக்கும் 'லெனின் பாண்டியன்' திரைப்படம் இந்த மாதம் 25-ஆம் தேதி திரைக்கு வருகிறது. தர்ஷன் கணேசன், மறைந்த ந... மேலும் பார்க்க

Dorothy: 'தும்சக்கு தும்சக்கு தும்சக்கு!' - டொராண்டோ திரைப்பட விழாவில் ‘டோரதி' படக்குழு| Photo Album

சாலமன் பாப்பையா: "அனாதை பிள்ளைகளாக நாங்கள் நிற்கிறோம்"- மனமுடைந்து அழுத பாரதி பாஸ்கர் மேலும் பார்க்க

DC Exclusive: "லோகேஷை நடிக்க வச்சதுக்கு காரணம் இதுதான்!" - அருண் மாதேஸ்வரன் பேட்டி

அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில், லோகேஷ் கனகராஜ் நடிப்பில் வெளியான 'டிசி' படத்திற்கு வசூலாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பு கிடைத்திருந்தது. இப்போது சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்திற்கு படம் வந்திருக்கிறத... மேலும் பார்க்க