செய்திகள் :

"சதாம் ஹுசைனால் பாதிக்கப்பட்ட ஈரான் 'இந்த' விஷயத்தில்..." - இஸ்ரேலைச் சாடும் ஈரான்

post image

"ஈரான் ரசாயன ஆயுதங்களைத் தயாரித்து வருகிறது. ஆனால், அதை முழுதாக உருவாக்க இஸ்ரேல் விடாது" என்று இஸ்ரேல் சொல்லியிருந்தது.

ஏற்கெனவே ஈரான் அணு ஆயுதங்களைத் தயாரிக்கிறது என்றுதான் ஈரான் மீது போரைத் தொடங்கியன அமெரிக்காவும், இஸ்ரேலும்.

இப்போது ரசாயன ஆயுதக் குற்றச்சாட்டை முன்வைக்கிறது இஸ்ரேல்.

ஈரான் அறிக்கை

இஸ்ரேலின் குற்றச்சாட்டிற்கு அறிக்கை மூலம் பதிலளித்துள்ளார் ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சர் அப்பாஸ் அராக்சி...

"அணு ஆயுதங்கள், ரசாயன ஆயுதங்கள் அல்லது உயிரியல் ஆயுதங்களைத் தடை செய்யும் அனைத்துச் சர்வதேச உடன்படிக்கையிலும் இணைய இஸ்ரேல் மறுத்துவிட்டது.

ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சர் அப்பாஸ் அராக்சியின் அறிக்கை
அப்பாஸ் அராக்சி அறிக்கை

நூற்றுக்கணக்கான அணு ஆயுதங்களைக் கைவசம் வைத்துள்ள இஸ்ரேல், இந்தப் பிராந்தியத்தில் உள்ள ஏழு நாடுகளின் மீது தாக்குதல் நடத்தியுள்ளதோடு, மூன்று நாடுகளின் பகுதிகளை ஆக்கிரமித்தும் உள்ளது.

கடந்த ஓராண்டில் மட்டும், ஈரானுக்கு எதிரான இரண்டு தோல்வியடைந்த போர்களில் அமெரிக்காவையும் அது இழுத்துவிட்டுள்ளது.

சதாம் ஹுசைனால் பாதிக்கப்பட்ட ஈரான்...

இப்போது, அணு ஆயுதப் பரவல் தடை ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ள, ரசாயன ஆயுதத் தடை அமைப்பின் உறுப்பு நாடான ஈரான் மீது போர் வெறிபிடித்த இஸ்ரேல் ஆட்சி வெட்கமின்றிப் பழி சுமத்துகிறது.

மேற்கு ஜெர்மனியால் சதாம் ஹுசைன் ஆட்சிக்கு வழங்கப்பட்ட ரசாயன ஆயுதங்களால் தானே பாதிக்கப்பட்ட ஈரான், மருந்துத் தொழிற்சாலைகளில் அத்தகைய கொடிய ஆயுதங்களை உருவாக்கி மறைத்து வைத்திருப்பதாக அது குற்றம் சாட்டுகிறது.

இதன் பின்னணியில் உள்ள நோக்கம் மிகவும் துணிச்சலான சதித்திட்டமாகும். தனக்காக மற்றொரு போரை நடத்தும்படி அமெரிக்காவை ஏமாற்றித் தூண்டிவிடுவதே இதன் நோக்கம்".

கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ வழக்கு: ஆளுநரை நேரில் சந்தித்தது ஏன்? - உதயநிதி ஸ்டாலின் விளக்கம்

கள்ளக்குறிச்சி விவகாரத்தில் தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இன்று ஆளுநரை நேரில் சந்தித்து புகார் மனு அளித்திருக்கிறார் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின். அதன் பிற... மேலும் பார்க்க

மகள் திருமணத்தில் நடனமாடிய தந்தைக்கு நேர்ந்த சோகம்; திருமணம் முடிந்த பிறகு நடந்த இறுதிச்சடங்கு

ராஜஸ்தான் மாநிலம் உதைப்பூர் மாவட்டத்தில் உள்ள புதார் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் சங்கர்லால். அகமதாபாத்தில் தனியார் நிறுவனத்தில் டிரைவராகப் பணியாற்றி வரும் இவருக்கு பிரியங்கா என்ற மகளும், இரண்டு மகன்கள... மேலும் பார்க்க

`ஆமா, பண்ணையார் தான்; நான் ஒன்றும் உழைத்து முன்னுக்கு வந்தவன் இல்லை.!" - கார்த்தி சிதம்பரம் பதில்

புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழுக்கூட்டத்தில் கலந்துகொண்டபின், சிவகங்கை தொகுதி காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் நேற்று செய்தியாளர்... மேலும் பார்க்க

'இந்தியப் பொருட்களுக்கு 25% வரி' - அமெரிக்கா முன்மொழிவு; வர்த்தக ஒப்பந்தத்தால் 17% ஆகக் குறையுமா?

ராய்ட்டர்ஸ் நிறுவனத்தின் தகவலின்படி, அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதி அலுவலகம் இந்தியா, கம்போடியா, இந்தோனேசியா, தென் கொரியா, மலேசியா, தைவான், தாய்லாந்து ஆகிய நாடுகளுக்கு 25 சதவிகிதம் வரை வரி விதிக்க முன்ம... மேலும் பார்க்க

”கட்சிப் பதவி வாங்கித் தரேன்”- தவெகவைச் சேர்ந்த பெண்ணுக்கு அக்கட்சி நிர்வாகி ஆபாசமெசேஜ் அனுப்பினாரா?

தஞ்சாவூர் அருகே உள்ள வல்லம் தவெக-வின் நகரச் செயலாளர் பாரதிராஜா. இவர் தவெகைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு கட்சியில் பதவி வாங்கித் தருவதாகச் சொல்லியிருக்கிறார். அப்பெண் திருமணமானவர். இவரது கணவர் கருப்புசாமி... மேலும் பார்க்க