செய்திகள் :

சனாதனம்: ``இதுக்கெல்லாம் பயப்படுற ஆள் நான் இல்ல" - உதயநிதி ஸ்டாலின் பதிவு!

post image

2026 சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு தன் பெரும்பான்மையை நிரூபித்து ஆட்சியைக் கைப்பற்றியது தவெக. அதைத் தொடர்ந்து, புதிய சட்டமன்றத்தின் முதல் சட்டமன்றக் கூட்டத்தொடர் நடந்தது. இதில், எதிர்க்கட்சித் தலைவராகப் பொறுப்பேற்றுள்ள உதயநிதி ஸ்டாலின் தனது உரையில், கடந்த 2023-ம் ஆண்டு அவர் முன்வைத்த அதே "சனாதன ஒழிப்பு" என்பதை மீண்டும் கையில் எடுத்தார். "மக்களைப் பிரிக்கும் சனாதனம் ஒழிய வேண்டும்" என்று அவர் ஆவேசமாக முழங்கினார்.

உதயநிதி ஸ்டாலின்
உதயநிதி ஸ்டாலின்

உதயநிதியின் இந்தப் பேச்சு அரசியல் வட்டாரத்தில் விவாதத்தை ஏற்படுத்திய நிலையில், தவெக-வின் மதுரை மத்திய தொகுதி எம்.எல்.ஏ முஸ்தஃபா பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். அப்போது, உதயநிதியின் சனாதனப் பேச்சு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு சற்றும் தயங்காமல் பதிலளித்த முஸ்தஃபா, "நாங்களும் அதை ஒழிக்கத்தான் அரசியலுக்கு வந்துள்ளோம்" என பதிலளித்தார்.

உதயநிதியின் தனிப்பட்ட கருத்தாகப் பார்க்கப்பட்ட சனாதன எதிர்ப்பு, இப்போது ஆளுங்கட்சி எம்.எல்.ஏ-வின் வெளிப்படையான ஆதரவால் புதிய பரிமாணத்தைப் பெற்றுள்ளது. தவெக மற்றும் திமுக ஆகிய இரு கட்சிகளுமே இந்து தர்மத்திற்கு எதிராகச் செயல்படுவதாகக் குற்றம் சாட்டி, பாஜக மற்றும் பல்வேறு இந்து அமைப்புகள் தமிழகம் தழுவிய அளவில் தங்களது கடும் கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றன.

இந்த நிலையில், தமிழ்நாட்டின் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தன் எக்ஸ் பக்கத்தில், ``தமிழ்நாடு சட்டப்பேரவையில நான் பேசுனப்ப, ''மக்களைப் பிரிக்கும் சனாதனம் நிச்சயம் ஒழிக்கப்பட வேண்டும்''-னு குறிப்பிட்டேன். இதுக்காக என்னை சில பேர் criticize பண்றாங்க.

உதயநிதி ஸ்டாலின்
உதயநிதி ஸ்டாலின்

இதுக்கெல்லாம் பயப்படுற ஆள் நான் இல்ல. எதிர்ப்புலேயே வளர்ந்தது தான் திராவிட இயக்கம். அந்த வகையில, ஒரு சின்ன விளக்கத்தை மட்டும் கொடுக்க விரும்புறேன். சனாதனம் ஒழிக்கப்படணும்னு சொன்னா யாரும் கோயிலுக்கு போகக் கூடாதுனு அர்த்தம் இல்ல. கோயில்ல மட்டும் இல்ல, society-லயும் எல்லாருக்கும் equal உரிமை இருக்கணும்னு அர்த்தம். மேல் சாதி - கீழ் சாதின்னு மக்களைப் பிரிக்கிறதை தான் நான் ஒழிக்கணும்னு சொன்னேன். பெரியார் - அம்பேத்கர் - அண்ணா - கலைஞர் பேசின கொள்கைய தான் நானும் பேசினேன். நாங்க யாருடைய கடவுள் நம்பிக்கைக்கும் எதிரானவங்க இல்லை. ஆனா, Inequality-ஐயும், oppression-ஐயும் கடுமையா எதிர்ப்போம் . 'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்'-னு வள்ளுவர் சொன்னது தான் எங்க வழி!" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

அதிமுக: `எப்போதும் போல `நான் மட்டுமே எல்லாம்' என்று.!' - எடப்பாடிக்கு எஸ்.பி.வேலுமணி பதில்

தேர்தலுக்குப் பிறகு அதிமுக எடப்பாடி அணி - சி.வி.சண்முகம் அணி என இரண்டு குழுவாகப் பிரிந்திருக்கும் நிலையில், இருதரப்பும் மாறி மாறி குற்றம்சாட்டிவருகின்றனர்.இந்த நிலையில், எடப்பாடி பழனிசாமி அறிக்கை ஒன்ற... மேலும் பார்க்க

பெட்ரோல் விலை உயர்வு: ``தன் இயலாமைக்கு மக்களைப் பலியாக்குகிறது ஒன்றிய அரசு" - சு.வெங்கடேசன் கண்டனம்!

மேற்கு ஆசியாவில் நிலவி வரும் போர் பதற்றங்கள் காரணமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. இதன் நேரடித் தாக்கமாக, இந்திய எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை இன்ற... மேலும் பார்க்க

`மாண்புமிகு முதலமைச்சர் அவர்களே, தயவுசெய்து இதைச் செய்யாதீர்கள்' - விஜய்க்கு விசிக எம்.பி கோரிக்கை!

எடப்பாடி தலைமையில் ஒரு அணி, சி.வி சண்முகம், எஸ்.பி வேலுமணி தலைமையிலான ஒரு அணி என அதிமுக மீண்டும் பிளவுபட்டு இருக்கிறது. இதில் சி.வி சண்முகம், எஸ்.பி வேலுமணி தலைமையில் உள்ள 25 எம்எல்ஏக்கள் நம்பிக்கை வா... மேலும் பார்க்க

தவெக: ``திமுக தோல்விக்கு காரணம் இருவர் மட்டுமே! அதிமுகவின் பதவி வெறி.!" - அமைச்சர் ஆதவ் அர்ஜுனா

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் வெற்றிப் பெற்று ஆட்சி அமைத்திருக்கும் தவெக முதல் சட்டமன்றக் கூட்டத்தை நம்பிக்கை வாக்கெடுப்புக்காக நடத்தியிருக்கிறது. இந்த நிலையில், தேர்தலில் வாக்களித்த மக்களுக்கு நன்றி... மேலும் பார்க்க

'திருச்சி கிழக்கில் மு.க.ஸ்டாலின் போட்டியிட வேண்டும்!' - தீர்மானம் நிறைவேற்றிய திருச்சி திமுக

தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தல் முடிவடைந்து, புதிதாக த.வெ.க ஆட்சியமைத்துள்ளது. அந்த கட்சியைச் சேர்ந்த ஜோசப் விஜய் முதல்வராக பொறுப்பேற்றுள்ளார். இந்நிலையில், தி.மு.க தோல்வியடைந்து எதிர்க்கட்சி வரிசையி... மேலும் பார்க்க

தம்பிக்கு 'செக்', அண்ணனுக்கு 'லக்' - ஜெயலலிதா கட்டம் கட்டியவரை அழைத்து வந்த எடப்பாடி! - அதகள அதிமுக!

த.வெ.க-வுக்கு வலிய முட்டுக் கொடுத்த அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்கள்!தமிழகத்தில் நடந்து முடிந்த 2026 சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் வெற்றிபெற்றதையடுத்து, அதன் தலைவர் விஜய் முதலமைச்சராக பொறுப்பேற்ற... மேலும் பார்க்க