செய்திகள் :

சபரிமலை ஐயப்பன்: 'எப்போது மாலை அணிய வேண்டும்? - வழிகாட்டுகிறார் குருசாமி அரவிந்த் சுப்ரமணியன்

post image

ஐப்பசி முடிந்து கார்த்திகை மாதம் பிறக்கும்போது மாலை அணிவது, மண்டல காலம் ஆகியவை குறித்த கேள்விகள் ஒவ்வோர் ஆண்டும் எழுகின்றன. புதிதாக மாலை அணிபவர்களுக்கு நிறைய கேள்விகள் இருக்கும்.

அதிலும் கார்த்திகை முதல் தேதி மாலை அணியும் மரபு உண்டு. ஏன் கார்த்திகை முதல் தேதி? மண்டல காலம் என்பது எவ்வளவு நாள்கள்? விரத காலம் என்பது எத்தனை நாள்கள் என்னும் பல கேள்விகளுக்குப் பதில் சொல்கிறார் சாஸ்தா வியாசர் அரவிந்த் சுப்ரமணியன்.

"ஒவ்வோர் ஆண்டும் தமிழ் மாதப்பிறப்பை ஒட்டியே நடை திறந்திருக்கும் சபரிமலை கார்த்திகை முதல் தை மாதம் முதல் வாரம் வரை (ஜனவரி 20) திறந்திருக்கும். இடையில் பிறகு மூன்று, நான்கு நாள்கள் மட்டுமே நடை சாத்தப்பட்டிருக்கும். இந்தக் காலகட்டத்தில் லட்சக்கணக்கானவர்கள் சபரிமலைக்குச் செல்வார்கள்.

கார்த்திகை முதல் தேதி மாலை அணிந்தால் அவர்கள் மகர ஜோதிக்குத்தான் மலைக்குச் செல்ல வேண்டும். அப்படிச் செல்பவர்கள்தான் கார்த்திகை முதல் நாளில் மாலை அணிவார்கள். இதுதான் மரபும். அப்படியானால் பொதுவாக எவ்வளவுநாள்கள் ஒருவர் மாலையணிந்து விரதம் இருக்க வேண்டும் என்கிற கேள்வி தோன்றும்.

சபரிமலை சுவாமி ஐயப்பன்!

இதில் பல வழக்கங்கள் உள்ளன. தமிழ்நாட்டில் ஒரு மண்டலம் என்பது 48 நாள்கள் என்ற மரபைக் கடைப்பிடிக்கிறோம். கேரளத்தில் ஒரு மண்டலம் என்பது 41 நாள்கள். ஆனால் புராண மரபில் பகவான் அதுவும் 'மூன்று பட்சம் விரதம் இருக்க வேண்டும்' என்கிறார். ஒரு பட்சம் என்றால் 15 நாள்கள், எனவே மூன்று பட்சம் 45 நாள்கள் குறைந்தபட்சம் விரதம் இருக்க வேண்டும். அதற்கு மேல் இருந்தால் பரவாயில்லை என்றே சொல்கிறது சாஸ்திர நூல்கள்.

அடுத்த கேள்வி, இந்தக் கணக்கு எதுவரை என்பதுதான். அதாவது, சாமி தரிசனம் வரையிலோ, நெய்யபிஷேகம் வரையிலோ அல்ல. மாலை அணிந்த நாளிலிருந்து இருமுடி கட்டும் நாள் வரைதான். ஒருவர் 45 நாள்கள் விரதம் பூர்த்தியான பிறகு இருமுடி கட்டிப் புறப்பட வேண்டும் என்பது விதி.

ஆனால் நிறைய பேர் குறைவான நாள்கள் மட்டுமே மாலை அணிந்து விரதம் கடைப்பிடித்து சபரிமலை செல்கிறார்கள். இது தவறு. நம்மால் எதைக் கடைபிடிக்க முடியுமோ அதையே கடைபிடிக்க வேண்டும். ஒவ்வோர் ஆலயத்துக்கும் ஒரு விதிமுறை உண்டு. அதைக் கடைப்பிடித்து ஐயன் முன் நிற்கும்போதுதான் அனுபூதி நிலை உண்டாகும், அனுக்கிரகம் கிடைக்கும்' என்பது பெரியோர்கள் வாக்கு.

அதைவிடுத்து, 'தம் சௌகரியத்துக்காக விரதங்களைச் சரியாக அனுஷ்டிக்காதவர்கள் கையில் காசு இல்லாமல் கடைத்தெருவுக்குச் செல்வதற்குச் சமம்' என்று பூதநாத உபாக்யானம் என்னும் நூலில் பகவானே சொல்கிறார். இது புராண வாக்கு. தன் தகப்பனாருக்கு சபரிமலைக்கு எப்படி வர வேண்டும் என்ற விதிகளைச் சொல்லும்போது பகவான் இதை வெளிப்படுத்தினார்.

அரவிந்த் சுப்ரமணியன்

எவ்வளவு கடினமாக விரதம் இருக்கிறோமோ அவ்வளவு நல்லது. அதனால்தான் பல பழைய குருமார்கள் 45, 48 நாள்கள் போதாது என்று கார்த்திகை முதல் தேதி மாலை போட்டுத் தை முதல் தேதி வரை, கிட்டத்தட்ட 58 முதல் 60 நாள்கள் கடினமான விரதம் இருந்தார்கள். நம் சௌகரியத்துக்காகக் குறைவான நாள்களே விரதம் இருப்போன் என்றால் உள்ளூர் ஐயப்பன் கோயிலில் தரிசனம் செய்யலாம்.

அடுத்து மாலை போடும் முன் கடைப்பிடிக்க வேண்டிய மரபு என்ன என்பதும் முக்கியமானது.

சபரிமலை யாத்திரை செல்ல விரும்புபவர்கள் திருமணம் ஆகாதவர் என்றால் முதலில் தாய் தந்தையிடம் அனுமதி பெற வேண்டும். திருமணம் ஆனவர் தாய் தந்தையிடமும் மனைவியிடமும் அனுமதி பெற வேண்டும். அவர்கள் எல்லோரும் முழு மனதோடு சம்மதித்தால்தான் யாத்திரை மேற்கொள்வது என்பது வழக்கம்.

இப்போது கோயிலில் மாலை போட்டுக்கொள்ளும் காலத்தில் குருசாமி என்ற விஷயமே கொஞ்சம் கொஞ்சமாகக் காணாமல் போகிறது. பண்டையக் காலத்தில் இந்த விஷயத்தில் குருசாமிகள் மிகவும் கண்டிப்பாக இருப்பார்கள்.

நடந்த ஒரு சம்பவம் சொல்கிறேன். ஒருவர், மும்பாயில் வேலை பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது, ஊரில் இருக்கும் அப்பா அம்மாவுக்கு கடிதம் எழுதி சபரிமலைக்குப் போக ஆசைப்படுவதாக அனுமதி கேட்டார். அவர்கள் ஆசீர்வாதம் தந்து நல்லபடியாகப் போய் வரச் சொல்லிப் பதில் கடிதம் எழுதினார்கள். அந்தப் பதில் கடிதத்தை குருசாமியிடம் கொண்டு வந்து காட்டினால்தான் அவர் மாலை போட்டு விடுவார், இல்லையென்றால் கிடையாது.

பெற்றோரின் அனுமதியும் ஆசீர்வாதமும் இல்லாமல் சபரிமலை யாத்திரைக்குக் கூட்டிச் செல்ல மாட்டேன் என்று சொன்ன குருசாமிகளும் இதே பாரத பூமியில் இருந்திருக்கிறார்கள். அதுதான் பண்டைய மரபு.

சபரிமலை ஐயப்பன் கோயில்

மனைவியிடமும் முறையாக அனுமதி வாங்கியே மாலை போட வேண்டும். காரணம் பிரம்மசர்யம் கடைப்பிடிக்க அவர்களின் ஒத்துழைப்பும் அவசியம். குடும்பத்தில் ஒருவர் மாலைபோட்டால் ஒட்டுமொத்தக் குடும்பமும் விரதம் அனுஷ்டிக்க வேண்டும். எனவே மாலை போடும் முன் அதற்குரிய வழிமுறைகளை உங்கள் குருசாமியிடம் கேட்டு அதன்படி மாலையணிந்து முறையாக விரதம் இருந்து யாத்திரை செல்வது நல்லது" என்றார் அரவிந்த் சுப்ரமணியன்.

திருச்செந்தூர் கந்த சஷ்டிப் பெருவிழா சூரசம்ஹாரம்... நேரலை! Live

கந்த சஷ்டிப் பெருவிழாவின் சிகர நிகழ்வான சூரசம்ஹாரம் இன்னும் சற்று நேரத்தில் நடைபெற இருக்கிறது. அந்த அற்புத வைபவத்தை திருச்செந்தூரில் இருந்து நேரலையாக தரிசனம் செய்ய்வலாம். மேலும் பார்க்க

கந்த சஷ்டி விரதம்: சிக்கலில் வேல்வாங்கி செந்தூரில் சம்ஹாரம்... | திருச்செந்தூரின் கடலோரத்தில் - 7

முருகப்பெருமானுக்கு சக்திதரன் என்கிற திருநாமம் உண்டு. அக்னியால் அந்தக் கந்தனை உண்டாக்கியவன் ஆதி சிவன் என்றால் அவருக்கு வேலாகத் தன் சக்தியைக்கொடுத்து அசுர சம்ஹாரமூர்த்தி ஆக்கியவள் ஆதி சக்தி. சூரசம்ஹாரத... மேலும் பார்க்க

கந்த சஷ்டி விரதம் : தமிழ் வளர்த்த அடியார்களுக்கு அருளிய முருகன்... 'திருச்செந்தூரின் கடலோரத்தில்-6'

ராமநாதபுரம் அருகே இருக்கும் புகலூர் என்னும் தலத்தில் பிரசித்திபெற்று விளங்கும் ஐயனாருக்கு ‘பகழிக் கூத்தர்’ என்று பெயர். ஓர் அடியார் தன் மனைவியோடு அங்கு சென்று தரிசனம் செய்தார். அப்போது சாமியாடிய அந்தக... மேலும் பார்க்க

கந்த சஷ்டி விரதம்: கவசம் பாடினால் கவலையில்லை... 'திருச்செந்தூரின் கடலோரத்தில் - 5'

திருச்செந்தூரில் கந்த சஷ்டி விரதம் இருப்பவர்கள் பல ஆயிரம்பேர். ஆலயத்தின் சுற்றுப்பகுதியிலேயே தங்கியிருந்து தினமும் சமுத்திரத்தில் நீராடி அந்த ஷண்முகனைத் துதிப்பார்கள். அதிலும் கந்ததுக்கு உகந்தது கந்த ... மேலும் பார்க்க

Kanda sasti | முருகனுக்கு ஏன் இரண்டு மனைவிகள்? கந்தபுராண சொல்லும் கந்த சஷ்டி ரகசியங்கள் | வாதவூரன்

கந்த சஷ்டி காலத்தில் முருகப்பெருமானின் அருமை பெருமைகளையும் அருணகிரிநாதரின் பாடல்களையும் வாரியார் சுவாமிகளின் ஆழ்ந்த கருத்துக்களையும் எடுத்துரைக்கும் வாதவூரன் ஐயாவுடன் ஒரு சிறப்பு உரையாடல். மேலும் பார்க்க

கந்த சஷ்டி விரதம் : 8 லிங்கங்கள்; 4 உற்சவர்கள்; அற்புத தகவல்கள் - திருச்செந்தூரின் கடலோரத்தில் - 4

ஆறுபடை வீடுகளில் இரண்டாவது திருத்தலம் திருச்செந்தூர். தானே விரும்பிவந்து திருச்செந்தூரில் கோயில்கொண்டான் அந்த செந்தில்நாதன் எனக்கண்டோம். அவன் ஆலய மகிமைகளையும் அறிந்துகொள்வோம். திருச்செந்தூர் ஆலயம் (ஓம... மேலும் பார்க்க