செய்திகள் :

சபரிமலை: `கூட்டத்திற்கு ஏற்ப ஸ்பாட் புக்கிங்' -தேவசம்போர்டு முடிவு; பக்தர்களுக்கு கைகொடுக்குமா?

post image

சபரிமலை ஐயப்ப சுவாமி கோயிலில் மண்டலக்கால மகரவிளக்கு பூஜைகளுக்காக கடந்த 16-ம் தேதி மாலை நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடைபெற்று வருகின்றன.

ஆன்லைன் முன்பதிவு மூலம் 70,000 பக்தர்களும் ஸ்பாட் புக்கிங்க்மூலம் 20,000 பக்தர்கள் என மொத்தம் 90,000 பக்தர்களை தினமும் அனுமதிக்க முதலில் முடிவுசெய்யப்பட்டது.

ஆனால் மண்டல பூஜைகள் தொடங்கப்பட்ட கடந்த 18-ம் தேதி, கடுமையான பக்தர்கள கூட்டத்தால் சபரிமலை சிக்கி திணறியது.

குழந்தைகளும் முதியவர்களும் குடிக்க தண்ணீர் மற்றும் உணவுக்கிடைக்காமல் தவித்தனர். டாய்லெட் வசதியின்மையும் ஏற்பட்டது.

சபரிமலை ஐயப்ப சுவாமி கோயில்

கேரள அரசும், திருவிதாங்கூர் தேவசம்போர்டும் முறையான ஏற்பாடுகளை செய்யவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது.

இதுகுறித்து சபரிமலை ஸ்பெஷல் கமிஷனர் அளித்த தகவலின் அடிப்படையில், கேரள ஐகோர்ட் விசாரணை நடத்தி, தினமும் 20,000 ஸ்பாட் புக்கிங்கை 5,000 ஆக குறைத்தது. ஆன்லைன் முன்பதிவு மூலம் தினமும் 70,000 பேரை அனுமதிக்க வேண்டும் எனவும் அறிவித்தது. இதையடுத்து, தினமும் 75,000 பக்தர்களை மட்டுமே தரிசனத்துக்கு அனுமதிக்க வேண்டும் என ஐகோர்ட் கூறியிருந்தது.

இதற்கிடையில், கேரள மாநில தேவசம்போர்டு அமைச்சர் வாசவன் தலைமையில் பம்பாவில் நடைபெற்ற ஆலோசனைக்கூட்டத்தில், சபரிமலையில் தினசரி வருகைதரும் பக்தர்களின் கூட்டத்துக்கு ஏற்ப ஸ்பாட் புக்கிங் எண்ணிக்கையை அதிகரிப்பது என முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு கேரளா ஐகோர்ட்டும் அனுமதி அளித்துள்ளது.

அதுபோல, ஒவ்வொரு நாளும் சன்னிதானத்தில் அனைத்து துறையினரின் கூட்டு ஆலோசனைக்கூட்டம் நடத்தப்பட வேண்டும் எனவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. பம்பா மற்றும் நிலக்கல்லில் முக்கிய துறைகளின் அதிகாரிகள் தலைமையில் இதே போன்ற கூட்டங்கள் நடத்தப்பட வேண்டும் எனவும் தீர்மானிக்கப்பட்டது.

சபரிமலையில் பக்தர்கள் கூட்டம்
சபரிமலையில் பக்தர்கள் கூட்டம்

தற்போது, பதினெட்டாம் படியில் நிமிடத்திற்கு சராசரியாக 70 பேர் ஏறிச் செல்கின்றனர். அது 85 ஆக அதிகரிக்கப்படும். அதற்காக அனுபவம் வாய்ந்த போலீசாரும் கூடுதலாக பணியில் அமர்த்தப்படுவார்கள்.

பார்க்கிங், கழிப்பறைகளை சுத்தம் செய்தல், குடிநீர் விநியோகம், டோலி பிரச்னை போன்ற விஷயங்களையும் அமைச்சர் வாசவன் தலைமையிலான ஆலோசனைக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

இப்போது சபரிமலையில் மிதமான பக்தர்கள் கூட்டம் காணப்படுகிறது. ஐகோர்ட் ஸ்பாட் புக்கிங் எண்ணிக்கையை குறைத்ததற்குப் பிறகு நிலைமை கட்டுக்குள் வந்துள்ளது.

சபரிமலைக்கு வருகைதந்த அனைத்து பக்தர்களுக்கும் ஸ்பாட் புக்கிங் வழங்கப்பட்டதால் கூட்ட நெரிசல் ஏற்பட காரணம் எனத் தெரியவந்தது. இதையடுத்து ஸ்பாட் புக்கிங் எண்ணிக்கை குறைக்கப்பட்டது.

சபரிமலை பக்தர்கள்

அதே சமயம், ஆன்லைன் முன்பதிவு செய்தவர்கள் தரிசனத்துக்கு வருகைதராமல் இருப்பதும் கருத்தில் எடுக்கப்பட்டது. அதன் அடிப்படையில், ஆன்லைன் முன்பதிவு செய்த பக்தர்கள் எண்ணிக்கை குறைவாக இருந்தால், ஸ்பாட் புக்கிங் அதிகரிக்கப்படும்.

இதன்மூலம் கூட்டமும் கட்டுப்படுத்தப்பட்டு, பிற பக்தர்களுக்கும் தரிசனம் செய்ய வாய்ப்பு கிடைக்கும் என்பதே தேவசம்போர்டின் திட்டமாக உள்ளது. இது பக்தர்களுக்கு அனுகூலமான முடிவு என்றாலும், மீண்டும் கூட்ட நெரிசலுக்கு வழிவகுக்காமல் முன்னெச்சரிக்கையுடன் கவனமாக செயல்பட வேண்டும் என்பதே பக்தர்களின் எண்ணமாக உள்ளது.

ஆவணியாபுரம் ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் கோயில்: சிம்ம முகத்துடன் தாயார், கருடன்; ஒரே தலத்தில் 9 நரசிம்மர்

பெருமாள் ஸ்ரீநரசிம்மராக எழுந்தருளியிருக்கும் ஆலயங்கள் பல தமிழகம் முழுவதும் உள்ளன. அவற்றுள் சில தலங்கள் தனித்துவம் வாய்ந்தவை. பொதுவாக நரசிம்மம் என்றால் பெருமாள் சிங்க முகத்தோடு காட்சிகொடுப்பார் அல்லவா.... மேலும் பார்க்க

சிதம்பரம்: தரிசனம் செய்தாலே முக்தி அருளும் திருத்தலம்; சிதம்பர ரகசியம் என்ன தெரியுமா?

பஞ்சபூதத் தலங்களில் ஆகாயத் தலம் சிதம்பரம். முற்காலத்தில் தில்லை மரங்கள் சூழ்ந்த வனமாக இருந்ததால் இத்தலத்துக்குத் தில்லை என்றே பெயர் ஏற்பட்டது. இத்தலத்தில் ஈசன் நடராஜராகக் கோயில்கொண்டு அருள்கிறார். சைவ... மேலும் பார்க்க

சென்னை கந்தகோட்டம்: கனவில் வந்து காட்சிதந்தார்; வள்ளலார் முதல் பாம்பன் சுவாமிகள்வரை வழிபட்ட முருகன்!

தருமமிகு சென்னை என்று போற்றப்படும் சென்னை மாநகரில் பல முக்கியக் கோயில்கள் அமைந்துள்ளன. அவற்றில் பல பழைமையும் பெருமையும் உடையவை. அப்படிப்பட்ட சென்னை ஆலயங்களில் ஒன்றுதான் கந்தகோட்டம். இந்த ஆலயம் அமைந்த ... மேலும் பார்க்க

திண்டுக்கல்: 37 தம்பதிகளுக்கு அறநிலையத் துறை சார்பில் 60ஆம் கல்யாணம்! | Photo Album

60ஆவது கல்யாணம் 60ஆவது கல்யாணம் 60ஆவது கல்யாணம் 60ஆவது கல்யாணம் 60ஆவது கல்யாணம் 60ஆவது கல்யாணம் 60ஆவது கல்யாணம் 60ஆவது கல்யாணம் 60ஆவது கல்யாணம் 60ஆவது கல்யாணம் 60ஆவது கல்யாணம் 60ஆவது கல்யாணம் 60ஆவது க... மேலும் பார்க்க

``திருச்செந்தூர் கோயில் வளாகத்தில் ரீல்ஸ் எடுத்தால் சட்ட நடவடிக்கை'' - நிர்வாகம் எச்சரிக்கை

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடு திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில். ஆண்டு முழுவதும் தொடர் திருவிழாக்கள் நடைபெறும். தினமும் நூற்றுக்கணக்கான பக்தர்களும், விடும... மேலும் பார்க்க

பவளக்குன்று அர்த்தநாரீஸ்வரர் கோயில்: திருவண்ணாமலை போறீங்களா? அப்போ அவசியம் தரிசிக்க வேண்டிய தலம்!

திருவண்ணாமலையில் ஈசனே மலையாக எழுந்தருளியிருக்கிறார் என்பது ஐதிகம். நினைத்தாலே முக்தி தரும் தலம். இத்தலத்திற்கு வந்தாலும் கிரிவலம் செய்தாலும் பல ஜன்மப் பாவங்களும் போகும். அப்படிப்பட்ட திருவண்ணாமலைத் தி... மேலும் பார்க்க