செய்திகள் :

சபரீசன் என்ட்ரி; கேக் வெட்ட மறுத்த முதல்வர்; MLA குழந்தைக்கு பெயர் சூட்டு விழா - சட்டமன்ற ஹைலைட்ஸ்!

post image

சட்டமன்ற கூட்டத்தொடரின் மூன்றாவது நாள் நடந்து முடிந்திருக்கிறது. இன்று நடந்த சில சுவாரஸ்யமான விஷயங்கள் இங்கே.

சபரீசன்
சபரீசன்

எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் இன்று அவையில் உரையாற்றியிருந்தார். அவர் பேசுவதைப் பார்க்க திமுக மேலிடத்தின் 'மாப்பிள்ளை சபரீசன்' வந்திருந்தார். ஓ.எஸ்.மணியனும் எடப்பாடி பழனிசாமியும் பேசிக் கொண்டிருக்கும் போதே சபரீசன் வந்துவிட்டார். அதனால் சில நிமிடங்கள் எதிர்க்கட்சித் தலைவரின் அறையில் காத்திருந்தார்.

உதயநிதி பேசத் தொடங்குகையில் பார்வையாளர் மாடத்திற்குச் சென்றவர், அங்கிருந்து அவை நிகழ்வுகளைப் பார்வையிட்டார். உதயநிதி பேசி முடிக்கையிலேயே வேக வேகமாகக் கிளம்பியும் சென்றுவிட்டார். சபரீசனின் திடீர் சட்டசபை என்ட்ரி மூலம் திமுக தலைமை அதன் தொண்டர்களுக்கும் நிர்வாகிகளுக்கும் சில மெசேஜ்களைக் கொடுக்க நினைப்பதாகக் கூறுகின்றனர் அரசியல் வட்டாரத்தினர்.

பிறந்தநாள் கேக்
பிறந்தநாள் கேக்

இன்று முதல்வர் விஜய்யின் பிறந்தநாள். தமிழகம் முழுவதும் தவெகவின் நிர்வாகிகளும் தொண்டர்களும் பிரமாண்டமாக விஜய்யின் பிறந்தநாளைக் கொண்டாடியிருந்தனர்.

சட்டமன்றம் நடந்துகொண்டிருக்கையில் நிர்வாகிகள் சிலர் முதல்வருக்காக ஒரு பெரிய கேக்கை தலைமைச் செயலகத்துக்கு எடுத்து வந்திருந்தனர்.

அதிகாரிகள் முதல்வரின் தனிப்பிரிவில் அந்தக் கேக்கை வாங்கி வைத்தனர். ஆனால், முதல்வர் தரப்பு கேக் வெட்டும் ஐடியா இல்லை. மேலும் தலைமைச் செயலகத்தில் கேக் வெட்டினால் சரியாகவும் இருக்காது எனக் கூறிவிட்டதால், அந்தக் கேக்கை அப்படியே மீண்டும் எடுத்துச் சென்றுவிட்டனர்.

முதல்வரின் பிறந்தநாளை முன்னிட்டு சட்டமன்ற அவை ஊழியர்களுக்கும் தலைமைச் செயலகத்தில் கூடியிருந்த தவெக நிர்வாகிகளுக்கும் ஸ்வீட் பாக்ஸ்கள் விநியோகிக்கப்பட்டது. ஊழியர்கள் ஸ்வீட் பாக்ஸ்களை வாங்கிவிட்டு முதல்வருக்கு அதிகாரிகளிடம் வாழ்த்துகளையும் கூறிவிட்டு சென்றனர்.

பல்லவி
பல்லவி

திரு.வி.க நகர் தொகுதி எம்.எல்.ஏ பல்லவிக்குச் சமீபத்தில்தான் குழந்தை பிறந்திருந்தது. முதல்வர்தான் குழந்தைக்கு பெயர் வைக்க வேண்டுமென பல்லவி கூறியிருந்தார். முதல்வரின் பிறந்தநாளான இன்றே அந்த வாய்ப்பும் வந்தது. சட்டமன்றம் முடிந்த பிறகு பல்லவியைக் காத்திருக்க சொன்ன அதிகாரிகள் முதல்வர் ஃப்ரீ ஆனவுடன் அழைத்தனர்.

பல்லவி ஏற்கனவே தமிழ் வெற்றிக்கொண்டான் என்ற பெயரைத் தேர்வு செய்து வைத்திருந்தார். அதை முதல்வரிடம் சொல்ல, முதல்வரும் குழந்தையின் காதில் மூன்று முறை பெயரைச் சொல்லி வாழ்த்து கூறி அனுப்பி வைத்திருந்தார்.

மேகதாது அணை விவகாரம் சம்பந்தமாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் சில கூறுகளை எதிர்த்து அதிமுக வெளிநடப்பு செய்யும் எனக் கூறி எடப்பாடி பழனிசாமி அவையிலிருந்து வெளியேறினார்.

எடப்பாடி வெளியேறிய போதும் எஸ்.பி.வேலுமணி, நத்தம் விஸ்வநாதன், சங்கராபுரம் ராகேஷ் போன்றோர் அவையிலேயே இருந்தனர். அணிகள் இணைந்தாலும் மனங்கள் இணையவில்லை?

கூட்டுறவு வங்கி: விவசாயிகளின் ரூ.5,932.23 கோடி பயிர்க்கடன் தள்ளுபடி; தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு

தமிழ்நாட்டில் உள்ள கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன்களைத் தள்ளுபடி செய்து தமிழ்நாடு அரசு அதிகாரப்பூர்வமாக அரசாணை வெளியிட்டுள்ளது. அந்த அரசாரணையில், ''தமிழக முதலமைச்சர் அவர்களின் அறிவிப... மேலும் பார்க்க

பிரிட்டன்: 10 ஆண்டுகளில் 6 பிரதமர்கள் - உலகை ஆண்ட நாட்டின் தற்போதைய நிலை என்ன?

ஒரு காலத்தில் சூரியன் மறையாத பேரரசு எனக் கூறப்பட்ட பிரிட்டிஷ் அரசு, இப்போது நிலையான ஆட்சியாளர்கள் இல்லாமல் தத்தளிக்கிறது. பிரிட்டிஷ் மக்களுக்கு வரிசைகளில் நிற்பது என்றால் மிகவும் பிடிக்கும் என்பார்கள்... மேலும் பார்க்க

"அமைச்சர் ராஜ்மோகனுக்கு மிரட்டல்" - பத்திரிகையாளர் மன்ற நிகழ்ச்சியைப் புறக்கணித்தாரா ராஜ்மோகன்?

சென்னை பத்திரிகையாளர் மன்றத்தின் நிகழ்ச்சியில் அமைச்சர் ராஜ் மோகன் கலந்து கொள்ளாமல் புறக்கணித்ததாக வெளியான செய்தி பேசுபொருளாகியிருக்கிறது. இது தொடர்பாக சென்னை பத்திரிகையாளர் மன்றம் வெளியிட்டிருக்கும் ... மேலும் பார்க்க

Keir Starmer: ``பதவியை விட்டு விலகுகிறேன்; ஆனால்.."- நா தழுதழுக்கப் பேசிய இங்கிலாந்து பிரதமர் கெய்ர்

பிரிட்டனில் மாபெரும் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்த இரண்டு ஆண்டுகளுக்குள்ளாகவே, அந்நாட்டுப் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் தனது பதவியை ராஜினாமா செய்வதாக அதிரடியாக அறிவித்துள்ளார். கடந்த 2024 ஜூலை மாதம் நடை... மேலும் பார்க்க

"ஆட்டமும் பாட்டமும் போதும்; ஆட்சியில் கவனம் செலுத்துங்க" - தவெக அரசுக்கு தமிழிசை கண்டனம்

சென்னை விமான நிலையத்தில் பாஜக-வின் மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, ``சமீபத்திய புள்ளி விவரங்களின்படி, சென்னையில் 61 சதவீத மக்களுக்கு மட்டுமே பொதுப் போக்கு... மேலும் பார்க்க

``என்னுடன் விவாதிக்க மேயர் பிரியாவுக்குத் துணிச்சல் இருக்கிறதா?" - அமைச்சர் கீர்த்தனா

தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஜோசப் விஜய்யின் 52-வது பிறந்தநாளை முன்னிட்டு சிவகாசியில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா, ``தமிழ்நாடு அரசின் அசுர வளர்ச்சியைப... மேலும் பார்க்க