செய்திகள் :

சரணடைந்த குஜராத் டைட்டன்ஸ்; முதல் போட்டியை கெத்தாய் வென்ற பஞ்சாப்! - என்ன நடந்தது?

post image

குஜராத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தனது முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது பஞ்சாப் அணி.

Punjab
Punjab

ஐபில் தொடரில் நேற்று (மார்ச்31) பஞ்சாப் vs குஜராத் அணிகளுக்கு இடையேயானா போட்டி முலான்பூர் மைதானத்தில் நடைபெற்றது,இதில் டாஸ் வென்ற பஞ்சாப் அணியின் கேப்டன் ஸ்ரேயஸ் ஐயர் பந்து வீச்சை தேர்வு செய்தார்,

கடந்த சீசனில் குஜராத் அணிக்காக நல்ல தொடக்கத்தை அளித்த கில் மற்றும் சாய் சுதர்சன் ஜோடி இந்த சீசனிலும் தொடக்க ஆட்டகாரர்களாக களமிறங்கினர். ஆனால் மார்கோ ஜான்சென் வீசிய நான்காவது ஓவரிலேயே (13 )ரன்களுக்கு அவுட் ஆகி பெவிலியன் திரும்பினார் சாய் சுதர்சன்.

அதன் பின் வந்த பட்லர் மற்றும் கில் இணைந்து ஒரு குட்டி பார்ட்னர்ஷிப் அமைத்தாலும் 10வது ஓவரில் சாஹல் வீசிய சுழலில் சிக்கி அவுட் ஆகி வெளியேறினார் கேப்டன் சுப்மன் கில். 200 ரன்களை எளிதாக எட்டி விடலாம் என்று இருந்த குஜராத் பேட்டர்களை,பஞ்சாப் அணியின் சிறப்பான பந்துவீச்சின் மூலம் அடுத்தடுத்து விக்கெட்களை வீழ்த்த ஆரம்பித்தனர்,

அடுத்து வந்த பிலிப்ஸ் (25),

பட்லர் (38),

வாஷிங்டன் சுந்தர்(18),

தெவாட்டியா(11), ஷாருக்கான் (4), ரன்கள் எடுத்து 6 விக்கெட் இழப்பிற்கு 163 என்ற இலக்கை பஞ்சாப் அணிக்கு நிர்ணயித்தனர்.

Connolly
Connolly

இந்த இலக்கை நோக்கி பஞ்சாப் அணி ஓப்பனர்கள்

பிரியான்ஸ் ஆர்யா மற்றும் பிரப்சிம்ரன் களமிறங்கினர். ஆனால் ஆட்டத்தின் இரண்டாவது ஓவரிலயே ரபாடா பந்துவீச்சில் பிரியான்ஸ் ஆர்யா ஆட்டமிழந்தார். அடுத்து கானலி மற்றும் பிரப்சிம்ரன் ஆட்டத்தை தங்களின் வசம் கொண்டு வந்தார்கள். ஆனால் ரஷீத் கானின் சுழலில் தப்பிக்க முடியாமல் பிரப்சிம்ரனும் (37) ரன்களுக்கு ஆட்டமிழந்தார். பொறுமையாக ஆடினாலே வெற்றி நிச்சயம் என்ற நிலையில் இருந்த பஞ்சாப் அணியை, முக்கிய பேட்ஸ்மேன்களான ஸ்ரேயஸ், வதேரா, ஷாஷாங்க் சிங், ஸ்டோய்னிஷ் ஆகியோரின் விக்கெட்களை அடுத்தடுத்த ஓவர்களில் கட்டம் கட்டி தகர்த்தனர் குஜராத் பவுலர்கள்.

GT
GT

மறுபக்கம் பொறுப்புடன் ஆடி வந்த கானலி அரைசதம் கடந்து மறுபடியும் வெற்றியை பஞ்சாப் பக்கம் அழைத்து வந்தார். இதன் மூலம் 3 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி இந்த போட்டியை வென்றுள்ளது, அதிகபட்சமாக கானலி 72 ரன்கள் எடுத்திருந்தார்.

இந்த ஐபில் தொடரில் இதுவரை நடந்து முடிந்த நான்கு போட்டிகளிலும் டாஸ் வென்று பந்துவீச்சு தேர்வு செய்த அணியே வெற்றி பெற்றுள்ளது.இந்த சீசனை வெற்றியுடன் தொடங்கி இருக்கிறது பஞ்சாப் கிங்ஸ்.

'ஒரே ஒருத்தன்.!' - மாஸ் காட்டிய சூர்யவன்ஷி; ஆர்.சி.பி-யின் முதல் தோல்வி

ஐபிஎல் தொடரில் நேற்று ( ஏப்ரல் 10)நடைபெற்ற பெங்களூரு vs ராஜஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி கவுகாத்தி மைதானத்தில் நடைபெற்றது. இந்தத் தொடரில் இதுவரை தோல்வியே காணாத அணிகளாக இந்த இரண்டு அணிகளும் களம் இற... மேலும் பார்க்க

`அவ்வளவுதான் முடிந்துவிட்டது நினைக்கும்போது.!' - வெளுத்தெடுத்த முகுல்; மீண்டும் ஒரு திரில்லர்

ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற லக்னோ vs கொல்கத்தா அணிகளுக்கு இடையிலான போட்டி, ஒரு த்ரில்லர் போட்டியாக மாறி ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியது.இப்போட்டியில் டாஸ் வென்ற லக்னோ அணி முதலில் பந்துவீச்சைத் தே... மேலும் பார்க்க

'ஒரே ஒரு ரன் வித்தியாசத்தில் டெல்லி தோல்வி!' - திரில்லரை எப்படி வென்றது குஜராத்?

ஐபிஎல் தொடரில் நேற்று (ஏப்ரல் 8) நடைபெற்ற குஜராத் vs டெல்லி அணிகளுக்கு இடையேயான விறுவிறுப்பான போட்டி, டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்றது. இரண்டு தோல்விகளுக்குப் பின் எப்படியாவது வெற்றிபெற வேண்... மேலும் பார்க்க

IPL : `தண்ணீர்ல மீனைப் போட்டா நீந்தும், கருவாடைப் போட்டா?' - வெறுப்பேற்றும் சிஎஸ்கே

வந்தாரை வாழ வைக்கலாம். அதற்காக பக்கத்து ஸ்டேட்டுக்கு பஸ்ஸூ பிடித்துப் போயெல்லாமா இன்னொரு டீமை வாழ வைப்பது? சிஎஸ்கே அந்த அளவுக்கு பரந்துபட்ட மனப்பான்மையோடு எதிர்த்து ஆடும் எல்லா அணிகளுக்கும் 2 புள்ளிகள... மேலும் பார்க்க

தத்தளித்த ஹைதராபாத்; தட்டித்தூக்கிய லக்னோ! - எப்படி வென்றது பண்ட் & கோ?

இந்த மேட்ச்சும் தோற்றால் ஓனரிடம் கைகட்டி பதில் சொல்ல வேண்டும் என்ற நெருக்கடி ஒரு பக்கம், சொந்த மண்ணில் எப்படியாவது இரண்டு புள்ளிகளைப் பெற்றாக வேண்டும் என்ற கட்டாயம் இன்னொரு பக்கம் என, லக்னோ மற்றும் ஹை... மேலும் பார்க்க

உலகின் நம்பர் 1 குத்துச்சண்டை வீரரை வீழ்த்திய 21 வயது தமிழ் இளைஞர் - யார் இந்த விஸ்வநாத் சுரேஷ்?

மங்கோலியாவின் உலன்பாதர் நகரில் நடைபெற்று வரும் 2026 ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில், இந்திய விளையாட்டு உலகையே அதிரவைக்கும் ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது.யாராலும் அசைக்க முடியாத "உலக நம்பர் 1"... மேலும் பார்க்க