செய்திகள் :

”சர்க்காரா? சர்க்கஸ் கம்பெனியா? எனக் கேட்கும் அளவுக்கு இந்த அரசின் பர்பாமன்ஸ் இருக்கு” - உதயநிதி

post image

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையில் நடைபெற்ற திமுக இல்லத் திருமண விழாவில் கலந்து கொண்ட எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது, ''கடந்த சில மாதங்களாகவே தஞ்சாவூர் மாவட்டத்திற்கு அடிக்கடி வருகிறேன். கடந்த மூன்று மாதங்களில் நான்கு முறை வந்திருக்கிறேன்.

நான் வரலைனாலும் இந்த அரசு என்னைக் கைது செய்து தஞ்சாவூர் மாவட்டத்திற்கு அழைத்து வருகிறார்கள். இரண்டு வாரம் முன்பு என்ன நடந்தது என்பதை நீங்கள் பார்த்திருப்பீர்கள்.

திமுக இல்லத் திருமண விழாவில் உதயநிதி
திமுக இல்லத் திருமண விழாவில் உதயநிதி

தமிழ்நாட்டுல எங்க பேசினாலும் தஞ்சாவூர் மாவட்டத்துல பேசும்போது ரொம்ப ஜாக்கிரதையா பேசணும். நாம பேசலனாலும் பரவாயில்லை, கீழ இருந்து பேசி நம்மள மாட்டி விட்டுருவாங்க. இன்னைக்கு அந்த மாதிரி துரை.சந்திரசேகரன் என்னை மாட்டி விட்டுருக்கிறார்.

சில வார்த்தைகள் எல்லாம் கூறி அதற்கும் நான்தான் பொறுப்பேற்க வேண்டும், பரவாயில்லை. கைது நடவடிக்கைகளுக்கெல்லாம் பயந்தவன் கிடையாது இந்த உதயநிதி என்பதை இந்த அரசுக்கு இந்நேரம் தெரிஞ்சிருக்கும்.

கடந்த 3ம் தேதி தஞ்சையில் விவசாயிகளுக்கு ஆதரவாக அவர்களுடைய கோரிக்கைகளை எல்லாம் இந்த அரசு நிறைவேற்றணும்னு ஒரு மிகப்பெரிய போராட்டத்தை நடத்தினோம். அதில், நான் கிட்டத்தட்ட 22 நிமிஷம் பேசியிருக்கிறேன். என்ன சொன்னேன்? காவேரில தண்ணி வரலை.

அதுமட்டும் சொல்லல, அதைவிட இன்னும் நிறைய பேசியிருக்கிறேன். டம்மி முதலமைச்சர் அப்படின்னேன். ஒரு கேடுகெட்ட அரசாங்கம் அமைஞ்சிருக்கு, வெட்கங்கெட்ட முதலமைச்சர் அமைஞ்சிருக்கிறார் தமிழ்நாட்டுக்கு அப்படின்னு சொன்னேன்.

திருமண விழாவில் பேசும் உதயநிதி
திருமண விழாவில் பேசும் உதயநிதி

தேர்தலில் வாக்குறுதி கொடுத்தீங்களே, அதையெல்லாம் நீங்க செயல்படுத்துறதுக்கு உங்களுக்கு வக்கு இல்லை அப்படின்னு சொன்னேன். அதற்கெல்லாம் அவங்களுக்கு கோவம் வரல. காவேரில தண்ணி வரலைன்னு சொன்ன உடனே கோவம் வந்துருச்சு. அதற்காக உடனே இரவோடு இரவாக தஞ்சாவூர்ல இருந்து காவல்துறை அதிகாரிகளை அனுப்பினர்.

அதிகாலையிலேயே என்னுடைய வீட்டுக்கு வந்துட்டாங்க. காலை 8 மணிக்கெல்லாம் வந்து கைது செய்து அழைத்து வந்தனர். கைது பண்ணி தஞ்சாவூருக்கு அழைச்சிட்டு வர்றாங்கன்னு தெரிஞ்சதுமே, டெல்டாவில் இருக்கக்கூடிய அனைத்து உடன்பிறப்புகளும் தஞ்சையில ஒன்று கூடிட்டீங்க.

அதனால தஞ்சாவூர் போனா நிச்சயம் நம்மளால சமாளிக்க முடியாதுன்னு அண்ணன் துரை சந்திரசேகரன் சொன்னாங்க. காவல்துறையினர் வண்டிய செங்கிப்பட்டி ஸ்டேஷனுக்கு திருப்பிட்டாங்க. அது மட்டுமல்ல நீதிமன்றத்துல இந்த அரசு மன்னிப்புக் கேட்டுச்சு. நாங்க அவரைக் கைது பண்ணலீங்க, விசாரிச்சுட்டு விட்டுருவோம் அப்படின்னு பல்டி அடிச்சாங்க. இந்த டெல்டா மண்டலம் என்றைக்குமே திமுக-வின் கோட்டை என்பதை நாம மீண்டும் நிரூபிச்சிருக்கிறோம்.

ஏற்கனவே சட்டமன்றத் தேர்தல்ல புரிய வச்சீங்க. டெல்டா மாவட்டங்கள்ல இருக்கக்கூடிய சுமார் 30 தொகுதிகள்ல வெறும் நான்கு தொகுதிகள் மட்டும்தான் இன்றைக்கு இருக்கக்கூடிய ஆளுங்கட்சி ஜெயிச்சிருக்கு. இந்தப் புதிய அரசு அமைஞ்சதுல இருந்து கடந்த 105 நாட்களாக இந்த அரசால அதிகம் பாதிக்கப்பட்டது யாருன்னு பாத்தீங்கன்னா விவசாய பெருங்குடி மக்கள்தான். திராவிட மாடல் அரசு, நம்முடைய தலைவர் முதலமைச்சரா இருக்கும் பொழுது, கடந்த 5 வருஷமும் மேட்டூர் அணையில் இருந்து சரியா ஜூன் 12-தண்ணீர் திறந்தோம்.

ஆனால், இவங்க ஆட்சிக்கு வந்து இன்னைக்கு ஜூன் மாசம் முடிஞ்சு, ஜூலை மாசம் முடிஞ்சு, இப்ப ஆகஸ்ட் மாசம் முடியப் போகுது. இதுவரைக்கும் மேட்டூர்ல இருந்து தண்ணி திறந்து விடல. காவேரில தண்ணி இல்லை. டெல்டா பகுதியில குறுவை சாகுபடி மொத்தமா இன்னைக்குப் பாதிக்கப்பட்டிருக்கு. விவசாயிகளுக்கு வறட்சி நிவாரணம் கொடுக்க அரசு கிட்ட நிதி இல்லை ஆளுங்கட்சியில் இருக்கக்கூடிய எம்.எல்.ஏக்களுக்கு கார் வாங்கி கொடுக்கின்றனர் அதற்கு எங்கிருந்து வந்தது இப்ப நிதி?

உதயநிதி

நம்முடைய தலைவர் தெளிவா சொல்லிட்டாரு, நான் அன்னைக்கு சபையிலயே பதிவு செஞ்சிருக்கிறேன். திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் எங்களுக்கு யாருக்கும் கார் தேவை இல்லை, இந்த அரசு கொடுக்கக்கூடிய அந்த வாகனம் தேவை இல்லை. முதல்ல நீங்க விவசாயிகளுடைய பிரச்னையைத் தீர்த்து வைங்க அப்படின்னு சொல்லிட்டோம்.

அதுக்கும் சண்டைக்கு வர்றாங்க, அது எப்படி நீங்க வேண்டாம்னு சொல்லலாம்? அதற்கு நான் நீங்க வாங்கிக்கோங்க, எங்களுடைய தலைவர் இந்த ஸ்டாண்ட் எடுத்திருக்காருனு சொன்னேன்.

விவசாயப் பிரச்னையை முதல்ல கவனம் செலுத்துங்க, அதற்கு நிதி இல்லைன்னு சொல்லிட்டீங்க. ஆட்சிக்கு வந்தவுடனே கஜானாவைத் துடைச்சு வச்சிட்டு போயிட்டோம்னு சொல்றீங்க. தேர்தல் வாக்குறுதி எதையும் நிறைவேற்றல. மகளிர் உரிமைத் தொகை ரூ.2500 கொடுக்கப் போறேன்னு சொன்னீங்க, அதைக் கொடுக்கல.

6 கேஸ் சிலிண்டர் கொடுப்பேன்னீங்க, கொடுக்கல. வேலையில்லா இளைஞர்களுக்கு மாசம் ரூ.4000 கொடுக்குறேன்னு சொன்னீங்க, அதைக் கொடுக்கல. வாக்குறுதியா சொன்ன எதையும் நிறைவேற்றாம, இன்னைக்கு எம்.எல்.ஏ-க்களுக்கு கார் வாங்கி தர்றேன்னு சொல்றதை திமுக ஒத்துக்காது, எங்களுக்கு வேணாம் அப்படின்னு சொல்லிட்டேன்.

பட்டுக்கோட்டையில் நடைபெற்ற திருமண விழாவில் உதயநிதி
பட்டுக்கோட்டையில் நடைபெற்ற திருமண விழாவில் உதயநிதி

இன்னைக்கு சட்டமன்றத்துல நடக்குறதை நீங்கள் நேரலையில பாத்துட்டு இருக்கீங்க. இந்த ஆளுங்கட்சியினர் இன்னைக்கு ஒவ்வொரு நாளும் என்னென்ன கூத்தெல்லாம் அடிச்சுட்டு இருக்காங்கங்கிறதை நீங்க லைவ்ல பார்ப்பீங்க.

நான் அன்னைக்கு சபையிலயே பேசுனேன். நாங்களாம் சட்டமன்றத்துக்குத்தான் வர்றோமா, இல்லை சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்கு வந்துருக்கோமா? அப்படின்னு எங்களுக்கே சந்தேகம் வந்துருது. ஏன்னா முன்னெல்லாம் சபையில பேசுவாங்க, கேள்வி கேட்பாங்க, அதற்குப் பதில் சொல்வாங்க. கேள்வி கேட்டா பதில் சொல்லலாம், பாட்டு பாடுனா நான் எப்படி பாட்டு பாட முடியும்?

அப்படி ஒரு கேடுகெட்ட ஆட்சி இன்னைக்கு நடந்துட்டு இருக்கு. சட்டமன்றத்துல மக்கள் பிரச்னை, விவசாயிகள் பிரச்னை, சட்ட ஒழுங்கு பிரச்னை இதைப் பத்தில்லாம் பேசலாம்னு நாங்க குறிப்பெல்லாம் எடுத்துட்டு போறோம். ஆனா நாங்க கேட்கக்கூடிய எந்தக் கேள்விக்கு முதலமைச்சர் எந்திரிச்சு பதில் சொல்றது கிடையாது.

ஒரு நான்கு அமைச்சர்கள் இருக்குறாங்க. அனைத்து கேள்விகளுக்கும் அவங்கதான் பதில் சொல்றாங்க. அதுவும் நாங்க கேட்டக் கேள்விக்கான பதில் கிடையாது. அனைத்தையும் திசை திருப்புற மாதிரி, டைவர்ஷன் டேக்டிக்ஸ் அவ்வளவுதான்.

திருமண விழாவில் பேசும் உதயநிதி
திருமண விழாவில் பேசும் உதயநிதி

அமைச்சர்கள், ஆளுங்கட்சி எம்.எல்.ஏ-க்கள் எல்லாம் மக்கள் பிரச்னை பேசுவதற்கு சட்டசபைக்கு வரவில்லை. அவங்களுக்குத் தேவையெல்லாம் ஒரு நான்கு ரீல்ஸ். இவர்கள் சர்க்கார் நடத்துகிறார்களா அல்லது சர்க்கஸ் கம்பெனி நடத்துகிறார்களா எனக் கேட்கும் அளவுக்குத்தான் இந்த அரசின் பர்பாமன்ஸ் இருக்கிறது.

நம்முடைய தலைவர் இந்தியாவிலேயே நம்பர் ஒன் ஸ்டேட்டாக நம்முடைய தமிழ்நாட்டைக் கொண்டு வந்தாங்க. 11.19 சதவீத வளர்ச்சியோடு இந்தியாவுல டெவலப்பிங் ஸ்டேட்ல நம்பர் ஒன் ஸ்டேட்டாக தமிழ்நாடு இருந்தது. இன்னைக்கு அதைக் கொண்டு போய் பாதாளத்துல தள்ளிட்டாங்க.

இந்த அரசாங்கம் ஒரு டம்மி அரசாங்கமாக, தமிழ்நாட்டினுடைய வளர்ச்சியைப் பின்னாடி இழுத்துட்டு போய் தள்ளிட்டு இருக்காங்க. தமிழ்நாட்டுல நடக்குற எந்தப் பிரச்னையைப் பற்றியும் இன்று இருக்கக்கூடிய முதலமைச்சருக்குக் கவலை கிடையாது.

இதையெல்லாம் பார்த்து மக்கள் இப்பதான் உணர ஆரம்பிச்சிருக்காங்க. எனவே விரைவில் இந்த ஆட்சியாளர்களுடைய ஆணவத்திற்கும் கோமாளித்தனத்திற்கும் மக்கள் ஒரு சரியான பாடத்தைப் புகட்டுவார்கள்'' என்றார்.

``ஸ்டாலின் அல்ல, கலைஞரே போட்டியிட்டாலும் நானே வென்றிருப்பேன்"- கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ். பாபு பேச்சு

சென்னை பெரம்பூரில் நேற்று தவெக அரசின் 100 நாள் சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு பேசிய கொளத்தூர் தொகுதி எம்.எல்.ஏ வி.எஸ்.பாபு, ``சட்டமன்றத்தேர்தலில் எனக்கு பிரசாரத்துக்கு 5 ந... மேலும் பார்க்க

பாஜக-விலிருந்து விலகிய நடிகர் தேவன் தவெக-வில் இணைகிறாரா? விஜய்யைச் சந்திக்க காரணம் என்ன?

கேரளாவைச் சேர்ந்த பிரபல வில்லன் நடிகர் தேவன், தமிழில் ஏராளமான சினிமாக்களில் நடித்துள்ளார். நடிகர் விஜய்யுடன் சுமார் 30 சினிமாக்களில் வில்லன் வேடத்தில் நடித்துள்ளார். நடிகர் தேவன் அரசியலிலும் மிகுந்த ஆ... மேலும் பார்க்க

"வீடியோவில் இருப்பது நானல்ல; அவரின் ஆதரவாளர்களிடமிருந்து வேறு எதை எதிர்பார்க்க?" - கீர்த்தனா ஆதங்கம்

காரில் இருந்து ஒரு பெண் இறங்குவது போன்ற வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது. அந்தப் பெண் அமைச்சர் கீர்த்தனாதான் என்றும் பரப்பப்பட்டது. இந்நிலையில் அமைச்சர் கீர்த்தனா இதுதொடர்பாக விளக்கம் ஒன்றை தனது எக... மேலும் பார்க்க

Canada Vs US: ``தாக்கப்படும் போதுதான் போர்; நாங்கள் தாக்கப்பட்டிருக்கிறோம்" - கனடப் பிரதமர் காட்டம்

அமெரிக்கப் பொருட்களுக்கு கூடுதல் வரிகளை விதிக்கவுள்ளதாக கனடா பிரதமர் மார்க் கார்னி தெரிவித்துள்ளார். கனடாவின் சுமார் 20 பில்லியன் டாலர் மதிப்பிலான ஏற்றுமதியை இலக்காகக் கொண்டு, அமெரிக்க அதிபர் டொனால்ட்... மேலும் பார்க்க

TVK: `இந்தியாக் கூட்டணியில் தவெக?' - அமைச்சர் நிர்மல் குமார் பதில் என்ன?

திருப்பூர் மாவட்டத்தில் பேருந்து வசதியின்றி சிரமப்பட்ட கிராமப்புற மாணவர்களுக்காகப் புதிய பேருந்து சேவையை அமைச்சர் சி.டி.ஆர் நிர்மல் குமார் தொடங்கி வைத்தார். அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமை... மேலும் பார்க்க

அறநிலையத்துறை ரகசியங்கள் கசிவு: ``தவறு செய்த பயத்தில் வேவு பார்க்கிறார்கள்" – அமைச்சர் ரமேஷ்

தமிழ்நாடு அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, ``சட்டமன்றத்தில் ஜனநாயக முறைப்படி விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. தேவையற்ற மற்றும் அவைக்குறிப்பிற்கு மாறான வார்த்... மேலும் பார்க்க