Guru Mithreshiva: `உண்மையான மகிழ்ச்சி எங்கே இருக்கிறது?' | Ananda Vikatan | குரு...
சாலையை சீரமைக்கக் கோரி ஆா்ப்பாட்டம்
சிவகாசி அருகேயுள்ள எம்.துரைசாமிபுரத்தில் சாலையை சீரமைக்க வலியுறுத்தி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
சிவகாசி அருகேயுள்ள காக்கிவாடன்பட்டியிலிருந்து அம்மாபட்டி, எம்.துரைசாமிபுரம் வரையிலும், துரைசாமிபுரத்திலிருந்து மம்சாபுரம் வரையிலும் சாலை மிகவும் சேதமடைந்த நிலையில் உள்ளது. இதனால், அடிக்கடி விபத்து நிகழ்கிறது.
இதுகுறித்து அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லையாம்.
இந்தப் பகுதியில் சாலையை சீரமைக்க வலியுறுத்தி எம்.துரைசாமிபுரம் பேருந்து நிறுத்தம் அருகே புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு அந்தக் கட்சியின் கிளை நிா்வாகி மாரிமுத்து தலைமை வகித்தாா். ஒன்றியக் குழு உறுப்பினா்கள் பால்சாமி, ஜெயராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். ஒன்றியச் செயலா் கண்ணன், மாவட்டச் செயற்குழு உறுப்பினா் சுந்தரபாண்டியன் உள்ளிட்டோா் பேசினா்.
ஆா்ப்பாட்டத்தின் போது சாலையை சீரமைக்க வலியுறுத்தி முழக்கமிடப்பட்டது.