செய்திகள் :

சிகரெட் வியாபாரியை தாக்கி செல்போன் பறித்த இளைஞர்கள் - 7 கி.மீ விரட்டிப் பிடித்த போலீஸார்!

post image

தூத்துக்குடியில் எஸ்.ஆர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் தினகரன். சிகரெட் மொத்த வியாபாரியான இவர், மடத்தூர் பகுதியில் உள்ள ஒரு கடையில் சிகரெட் பாக்கெட்டுகளை விற்பனை செய்துவிட்டு, அருகில் உள்ள மற்றொரு கடையில் சிகரெட் பாக்கெட்டுகளை விற்பனை செய்வதற்காக பைக்கில் சென்று கொண்டிருந்தார். அவரை வழிமறித்த இருவர், அவரிடம் சிகிரெட் கேட்டுள்ளனர். ஆனால், `நான் மொத்த வியாபாரி.

சிப்காட் காவல் நிலையம்

சில்லறைக்கு சிகிரெட் விற்பனை செய்ய முடியாது' எனக் கூறியுள்ளார். இதனால், கோபமடைந்த இருவரும் தினகரனை கீழே தள்ளிவிட்டு கத்தியால் அவரது நெற்றிப் பகுதியில் குத்திவிட்டு அவரிடம் இருந்த செல்போனை பறித்துக் கொண்டு சென்றுவிட்டனர். தகவலறிந்த சிப்காட் காவல் நிலைய போலீஸார், காயமடைந்த தினகரனை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

தினகரனை தாக்கிய இருவரையும் போலீஸார் தேடி வந்த நிலையில், தூத்துக்குடி – மதுரை பைபாஸ் ரோட்டில் ஒரே பைக்கில் செல்வதாக கிடைத்த தகவலையடுத்து இருவரையும் பிடிக்கச் சென்றனர். போலீஸாரைப் பார்த்ததும் பைக்கில் இருவரும் வேகமாகச் செல்ல, போலீஸாரும் அவர்களை பின் தொடர்ந்தனர். சுமார் 7 கி.மீ தூரம் விரட்டிச் சென்று மடக்கிப் பிடித்தனர்.

தூத்துக்குடி

விசாரணையில், பாக்கியலெட்சுமி நகரைச் சேர்ந்த பிரேம்குமார், பாத்திமாநகரைச் சேர்ந்த அந்தோணி பென்கர் அவர்கள் என்பது தெரிய வந்தது. இதில், பிரேம்குமார் மீது குளத்தூர், ஓட்டப்பிடாரம், புளியம்பட்டி ஆகிய காவல் நிலையங்களில் வழக்கு நிலுவையில் உள்ளன. அதேபோல அந்தோணி பென்கர் மீதும் தென் பாகம் மற்றும் புதுக்கோட்டை காவல்நிலையங்களில் வழக்கு நிலுவையில் உள்ளது தெரிய வந்தது. அவர்களிடமிருந்து தினகரனின் செல்போனை பறிமுதல் செய்த போலீஸார் இருவரிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர்.  

கேரளா: பாங்கோடு ராணுவ முகாமில் டிஜே பார்ட்டி; 2 யானை தந்தங்கள் கொள்ளை... விசாரணை நடத்தும் போலீஸ்!

கேரள மாநிலம், திருவனந்தபுரம் பாங்கோட்டில் மெட்ராஸ் ரெஜிமென்ட் மிலிட்டரி கேம்ப் உள்ளது. 24 மணிநேரமும் பாதுகாப்பு வளையத்துக்குள் இருக்கும் இந்த முகாமுக்குள், அனுமதி இல்லாமல் யாரும் நுழையமுடியாது. இங்கு ... மேலும் பார்க்க

ஒரே வீட்டில் மனைவி, காதலி: பணம் கேட்ட இன்ஸ்டா காதலியை கொன்று செப்டிங் டேங்கில் போட்ட காதலன்!

மத்திய பிரதேச மாநிலம் போபாலில் உள்ள நிஷத்புரா என்ற இடத்தை சேர்ந்தவர் சமீர். இவருக்கு கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு மகாராஷ்டிரா மாநிலம் கோண்டியா என்ற இடத்தை சேர்ந்த ஷியா என்ற பெண்ணுடன் இன்ஸ்டாகிராம் மூ... மேலும் பார்க்க

துருக்கி: நகைக்கடையில் திருடி விட்டு கழுதையில் ஏறி தப்பிய நபர்; வைரல் வீடியோவின் பின்னணி என்ன?

துருக்கியில் நகைக்கடை ஒன்றில் திருடிவிட்டு ஒருவர் சர்வ சாதாரணமாகத் தனது கழுதையில் ஏறிச்சென்ற சம்பவம் வைரலாகி இருக்கிறது. அங்குள்ள காய்சரி என்ற இடத்தில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது.அங்குள்ள நகைக்கடை ஒன்... மேலும் பார்க்க

அமெரிக்கா: இந்திய மாணவர் கலிபோர்னியாவில் மர்ம மரணம்; தூதரகம் சொல்வது என்ன?

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில், மாயமான இந்திய மாணவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தவர் சாகேத் ஸ்ரீனிவாசய்யா (22). இவர் கலிபோர்னியா பல்கல... மேலும் பார்க்க

நொய்டா: காதலர் தினத்தில் முடிந்த 15 ஆண்டுக் காதல்; காதலியைச் சுட்டுக்கொன்று தற்கொலை செய்த காதலன்

நொய்டாவில் காதலர் தினத்திற்காகச் சந்தித்துக் கொண்ட ஜோடி காரில் பிணமாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நொய்டாவில் கார் ஒன்று அனாதையாக நின்று கொண்டிருந்தது.இது குறித்து பொதுமக்கள் கொடுத்த தகவலின் பேரில் போல... மேலும் பார்க்க

கரூர்: "ரூ.10,000 இல் ஒரு ரூபாய் குறைந்தாலும் வேலை நடக்காது" - விவசாயியிடம் லஞ்சம் கேட்ட விஏஓ கைது

கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் அருகே உள்ள பாப்பையம்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் சின்னத்துரை. விவசாயியான இவர் தனது விவசாய நிலத்தை பட்டா பெயர் திருத்தம் செய்வதற்காக விண்ணப்பம் செய்திருந்தார்.அந்த வகையில... மேலும் பார்க்க