செய்திகள் :

சிங்கப்பெண் சிறப்பு அதிரடி படை தொடக்க விழா தொடர்ந்து தள்ளிப் போவது ஏன்?

post image

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் த.வெ.க, 108 இடங்களில் வெற்றி பெற்றது. அதைத் தொடர்ந்து காங்கிரஸ், வி.சி.க, கம்யூனிஸ்ட்கள், ஐ.யு.எம்.எல் ஆகிய கட்சிகளின் ஆதரவோடு விஜய் புதிய ஆட்சியை அமைத்தார்.

முதல்வராக அவர் பொறுப்பேற்றதும் பெண்கள், சிறுமிகளின் பாதுகாப்புக்காக காவல்துறையில் சிங்கப்பெண் சிறப்பு அதிரடி படை என்ற புதிய பிரிவு உருவாக்கப்படும் என தெரிவித்தார். அதைத் தொடர்ந்து அந்தப் பிரிவுக்கு ஐஜி பவானீஸ்வரி நியமிக்கப்பட்டார்.

இதன் தொடக்கவிழா, சென்னை எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் மே 27-ம் தேதி நடத்தப்படும் என காவல்துறை சார்பில் அறிவிக்கப்பட்டு அதற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடந்தன. ஆனால் பிரதமர் மோடியை முதல்வர் விஜய் சந்திக்க டெல்லி சென்றதால் தொடக்கவிழா தள்ளிவைக்கப்பட்டது.

அதைத் தொடர்ந்து மே 29-ம் தேதி(இன்று) விழா நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால் மீண்டும் தொடக்க விழா தள்ளி வைக்கப்படுவதாக காவல்துறை சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

முதல்வர் விஜய்
முதல்வர் விஜய்

சிங்கப்பெண் சிறப்பு அதிரடி படை தொடக்க விழா தொடர்ந்து தள்ளிப் போவதற்கு என்ன காரணம் என சென்னை காவல்துறை வட்டாரத்தில் விசாரித்தோம்.

``இந்த விழாவை இன்று நடத்த ஏற்பாடு செய்யப்பட்ட நிலையில் திடீரென டி.ஜி.பி அலுவலகத்திலிருந்து விழா தள்ளி வைக்கப்படுவதாக தகவல் வந்தது. ஆனால் அதற்கான எந்த காரணத்தையும் டி.ஜி.பி அலுவலகம் தரப்பில் எங்களிடம் தெரிவிக்கவில்லை. விழாவுக்கான தேதி மீண்டும் அறிவிக்கப்படும் போது ஏற்பாடுகளை செய்வோம்'' என்றனர்.

அதைத் தொடர்ந்து டி.ஜி.பி அலுவலக வட்டாரத்தில் கேட்ட போது, ``மே 29-ம் தேதி விழாவை நடத்தலாம் என எங்களுக்கு முதல்வர் அலுவலகத்திலிருந்து எங்களுக்கு தகவல் வந்தது. அதனால்தான் விழாவுக்கான ஏற்பாடுகளை செய்தோம். திடீரென விழாவை தள்ளி வைத்துவிட்டார்கள். விரைவில் பிரமாண்டமாக விழா நடத்தப்படும்" என்றனர்.

ஐ.பி.எஸ் அதிகாரிகள் வட்டாரத்தில் கேட்டபோது, ``சட்டம் ஒழுங்கு பிரிவுக்கு புதிய டி.ஜி.பியை நியமிக்க யுபிஎஸ்சி ஒப்புதல் அளித்து விட்டது. தற்போது தேர்தல் ஆணையத்தால் நியமிக்கப்பட்ட சட்டம் ஒழுங்கு டி.ஜி.பி சந்தீப் ராய் ரத்தோருக்கு எதிராக சிலர் லாபி செய்கிறார்கள். அதனால் யுபிஎஸ்சி பட்டியலில் உள்ள ராஜீவ்குமார், மகேஷ்குமார் அகர்வால் ஆகியோரில் ஒருவரை நியமிப்பது தொடர்பாக ஆலோசனை நடந்து வருகிறது.

புதிய டி.ஜி.பியை நியமித்தப்பிறகு சிங்கப் பெண் சிறப்பு அதிரடி படை தொடக்க விழா நடத்தலாம் என சிலர் ஆலோசனை கூறியிருக்கிறார்கள். அதனால்தான் விழா இரண்டாவது தடவையாக தள்ளிப் போயிருக்கிறது" என்றனர்.

தமிழக அரசு

காவல்துறை சார்பில் நடத்தப்படும் முதல் நிகழ்ச்சி என்பதாலும் முதல்வர் பங்கேற்பதாலும் விழாவை பிரமாண்டமாக நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் ஒரு தகவல் டி.ஜி.பி அலுவலகத்தில் வட்டமடிக்கிறது. ஆனால் விழா தள்ளிப் போவதற்கு அதிகாரப்பூர்வ காரணம் என்னவென்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்படவில்லை.

`மேட்டூர் அணை வரலாற்றில் ஏற்பட்டுள்ள 62-வது ஆண்டு காலதாமதம் இது!' - அதிகாரிகள் சொல்வதென்ன?

காவிரி ஆற்றுப்படுகை பாசனத்தின் அடிப்படை ஆதாரமாகப் பங்காற்றி வருகிறது மேட்டூர் அணை. மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் காவிரி நீரால் சுமார் 15 லட்சம் ஏக்கர் பரப்பளவுக்கு மேல் குறுவை, சம்பா, தாளடி எ... மேலும் பார்க்க

சிங்கப்பெண் திட்ட வீடியோ சர்ச்சை: அமைச்சர் ராஜ் மோகன் சொல்லும் விளக்கம் என்ன?| Live Updates

லிடியன் நாதஸ்வரத்தை வரவேற்ற அமைச்சர் வன்னி அரசு!வன்னி அரசுசென்னை விமான நிலையத்தில் அமைச்சர் வன்னி அரசு. சிம்பொனி இசையமைத்து சாதனை நிகழ்த்திய இசைக் கலைஞர் லிடியன் நாதஸ்வரத்தை வரவேற்றார். அப்போது,``தமிழ... மேலும் பார்க்க

``கோயம்பேடு பேருந்து நிலையத்தை மீண்டும்..." - ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் கோரிக்கை!

சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தை மீண்டும் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரக் கோரி, ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கத் தலைவர் அன்பழகன், போக்குவரத்துத்துறை அமைச்சர் பார்த்திபனைச் சந்தித்து கோரிக்கை ம... மேலும் பார்க்க

ஈரோடு: பெண்கள், மாணவிகளைச் சந்தித்து விழிப்புணர்வு ஏற்படுத்திய சிங்கப்பெண் அதிரடிப்படையினர்! - Album

ஈரோட்டில் சிங்கப்பெண் அதிரடி படைஈரோட்டில் சிங்கப்பெண் அதிரடி படைஈரோட்டில் சிங்கப்பெண் அதிரடி படைஈரோட்டில் சிங்கப்பெண் அதிரடி படைஈரோட்டில் சிங்கப்பெண் அதிரடி படைஈரோட்டில் சிங்கப்பெண் அதிரடி படைஈரோட்டில... மேலும் பார்க்க

மீண்டும் உயரும் அத்தியாவசியப் பொருள்களின் விலை; லாரி வாடகை உயர்வும் சங்கிலித் தொடரான சிக்கல்களும்!

World Inequality Lab அறிக்கையின் படி இந்தியாவில் 10 சதவிகிதப் பணக்காரர்களின் சொத்து மதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே... இருக்கும் நிலையில், நடுத்தர வர்கத்தினரும், ஏழைகளும் தங்களின் அன்றாட வாழ்... மேலும் பார்க்க

C-295: இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட முதல் ராணுவ விமானம்; `Make in India’ வரலாற்றுச் சாதனை!

இந்திய ராணுவத்தின் போக்குவரத்து தேவைகளுக்காக பல தசாப்தங்களாகப் பயன்படுத்தப்பட்டு வந்த பழைய 'ஆவ்ரோ-748' (Avro-748) ரக விமானங்களுக்குப் ஓய்வளித்துவிட்டு, அதிநவீன வசதிகள் கொண்ட 56 புதிய C-295 போக்குவரத்த... மேலும் பார்க்க