செய்திகள் :

"சிறப்பு அதிரடிப்படை திட்டத்தை நிறுத்தி வைத்திருப்பது ஏன்?" - தவெக அரசுக்கு கனிமொழி கேள்வி

post image

தவெக அரசு பொறுப்பேற்றதில் இருந்து கொலைகள், பாலியல் குற்றங்கள் என அடுத்தடுத்து குற்றசம்பவங்கள் அரங்கேறி கொண்டே இருக்கின்றன.

இதற்கு அரசியல் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் கடலூரில் 25 வயது பெண் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டிருக்கிறார்.

க்ரைம்
க்ரைம்

அதேபோல தூத்துக்குடியில் நண்பர்களுடன் ஏற்பட்ட தகராறில் இளைஞர் ஒருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டிருக்கிறார்.

இந்தக் குற்றசம்பவங்களுக்கு திமுக-வைச் சேர்ந்த தூத்துக்குடி எம்.பி கனிமொழி கண்டனம் தெரிவித்திருக்கிறார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், "கடலூரில் இளம் பெண் ஒருவர் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டுப் புதைக்கப்பட்ட செய்தி, தூத்துக்குடியில் நண்பர்களுடன் ஏற்பட்ட தகராறில் இளைஞர் ஒருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட செய்தி என தமிழ்நாட்டில் அடுத்தடுத்து வேதனை அளிக்கும் குற்றச்சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன.

தவெக அரசு
தவெக அரசு

தமிழ்நாட்டில் அதிகரித்துவரும் சட்ட ஒழுங்கு பிரச்னைகளின் தீவிரத்தை உணர்ந்து எப்போது செயல்படப் போகிறது, தவெக அரசு?

மகளிர் பாதுகாப்புக்காக இன்று தொடங்கப்படும் என்று அறிவித்திருந்த 'சிறப்பு அதிரடிப்படை' திட்டத்தை நிறுத்திவைத்துள்ளது ஏன்? தொடரும் இந்தக் குற்றச் சம்பங்களைத் தடுக்க என்ன செய்யப்போகிறது, இந்த அரசு?" என்று கேள்வி எழுப்பியிருக்கிறார்.

திமுக கூட்டணியிலிருந்து விலகும் முடிவில் மதிமுக - பொதுக்குழுவில் முக்கிய அறிவிப்பு வெளியிடும் வைகோ?

தமிழக அரசியலில் கடந்த சில மாதங்களாக கூட்டணி மறுசீரமைப்பு வேகமெடுத்து வரும் நிலையில், திமுக கூட்டணியில் இருந்து மதிமுக விலகும் முடிவை எடுக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது தொடர்பான இறுதி முடிவு ஜ... மேலும் பார்க்க

'இந்திய அரசு அனுமதித்த அளவுக்குள்ளேயே தமிழக அரசின் கடன் இருக்கிறது'- நிதித்துறைச் செயலர் சித்திக்

தமிழகத்தின் அனைத்து துறைகளின் நிதிநிலை, கடன் சுமை முந்தைய நிர்வாக செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டு, வெள்ளை அறிக்கை வெளியிடப்படும் என்று பதவியேற்பு விழாவில் முதல்வர் விஜய் அறிவித்திருந்தார். அந... மேலும் பார்க்க

'ரூ10 லட்சம் கோடி கடன்; திமுக ஆட்சியில் கடன் இருமடங்கு உயர்வு'- வெள்ளை அறிக்கை வெளியிட்ட தமிழக அரசு

தமிழகத்தின் நிதிநிலை குறித்து நிதியமைச்சர் மரிய வில்சன் வெள்ளை அறிக்கை வெளியிட்டிருக்கிறார். தமிழகத்தின் அனைத்து துறைகளின் நிதிநிலை, கடன் சுமை முந்தைய நிர்வாக செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டு ... மேலும் பார்க்க

”அமைச்சர் ஷாஜஹான் பேசுவது ஆணவத்தின் வெளிப்பாடு”- சாடும் ஜவாஹிருல்லா!

மனித நேய மக்கள் கட்சியின் தலைவர், பேராசிரியர் ஜவாஹிருல்லா கடந்த சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் நாகப்பட்டினம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்.எல்.ஏ-வாக இருக்கிறார். தனது தொகுதிக்கு உட்ப... மேலும் பார்க்க

எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்த விஜயபாஸ்கர்; தவெகவில் இணைகிறாரா?

தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்திருக்கிறார் விஜயபாஸ்கர் 2026 சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு, அதிமுகவில் உட்கட்சி பூசல் நிலவி வருகிறது. எடப்பாடி பழனிசாமி மற்றும் சி.வி.சண்முகம் தலைமையில் இரண்டு அண... மேலும் பார்க்க

விஜயபாஸ்கர் ராஜினாமா : அதிமுக MLAக்கள் எண்ணிக்கை 42 ஆகக் குறைவு; 6 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்!

விராலிமலை சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான சி.விஜயபாஸ்கரின் ராஜினாமாவை சபாநாயகர் ஏற்றுக்கொண்டதைத் தொடர்ந்து, தமிழக சட்டப்பேரவையில் அதிமுகவின் பலம் 42 ஆகக் குறைந்துள்ளது.234 உறுப்பினர்களைக் ... மேலும் பார்க்க