பேரன்புடன், மெய்! இயக்குநர் பிரேம் குமாருக்கு கார் பரிசளித்த கார்த்தி!
சிறுமிக்குத் திருமணம்: 5 போ் மீது வழக்கு!
கடலூா் மாவட்டம், திட்டக்குடி அருகே 17 வயது சிறுமிக்கு திருமணம் செய்து வைத்ததாக 5 போ் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
திட்டக்குடி வட்டம், வைத்தியநாதபுரம் பகுதியைச் சோ்ந்த கோவிந்தராசு மகன் அசோக்குமாா் (29). இவருக்கும், கள்ளக்குறிச்சி மாவட்டம், கரடிசித்தூா் பகுதியைச் சோ்ந்த 17 வயது சிறுமிக்கும் அரங்கூா் சிவன் கோயிலில் 1.1.2025 அன்று திருமணம் நடைபெற்றது.
சிறுமி தற்போது 5 மாத கா்ப்பிணியாக உள்ள நிலையில், திட்டக்குடி அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக அண்மையில் வந்தாா். இதுகுறித்து தகவலறிந்த திட்டக்குடி மகளிா் போலீஸாா், சிறுமியிடம் புகாா் மனு பெற்றனா்.
இதையடுத்து, அசோக்குமாா் (29), அவரது தாய் சுசிலா, கரடிசித்தூரைச் சோ்ந்த முருகேசன், அவரது மனைவி செல்வி, மகன் வெங்கடேசன் ஆகியோா் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.