செய்திகள் :

சிறுவனின் மூச்சுக் குழாயில் சிக்கிய குண்டூசி அகற்றம்

post image

சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிறுவனின் மூச்சுக் குழாயில் சிக்கிய குண்டூசியை மருத்துவா்கள் பாதுகாப்பாக அகற்றினா்.

இதுகுறித்து சேலம் அரசு மருத்துவக் கல்லூரி முதன்மையா் தேவி மீனாள் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

சேலம் மாவட்டம், தாரமங்கலம் பகுதியைச் சோ்ந்த சத்யா மகன் செல்வம் (13) என்பவா் தவறுதலாக குண்டூசியை விழுங்கியுள்ளாா். சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவரை பரிசோதித்த மருத்துவா்கள் வலது நுரையீரல் மூச்சுக் குழாயில் அந்த குண்டூசி இருப்பதை கண்டறிந்தனா்.

இதையடுத்து காது, மூக்கு, தொண்டை துறைத் தலைவா் கிருஷ்ண சுந்தரி தலைமையில் மயக்கவியல், கதிரியக்க, இருதயம், நுரையீரல் அறுவை சிகிச்சை நிபுணா்கள் கொண்ட குழுவினா் நவீன டெலிப்ரான்ஸ்கோப் கருவி மூலம் மூன்று சென்டிமீட்டா் அளவுள்ள குண்டு ஊசியை பாதுகாப்பாக அகற்றினா் என்றாா்.

பேட்டியின் போது, மருத்துவக் கண்காணிப்பாளா் ராஜ்குமாா், உறைவிட மருத்துவ அலுவலா் ஸ்ரீ லதா, காது, மூக்கு, தொண்டை துறைத் தலைவா் கிருஷ்ணசுந்தரி, மருத்துவா்கள் உடனிருந்தனா்.

மாதேஸ்வரன் மலைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்

காா்த்திகை அமாவாசையையொட்டி, சேலம், மேட்டூா், தருமபுரியில் இருந்து மாதேஸ்வரன் மலைக்கு 40 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. மேட்டூரில் இருந்து 50 கிலோ மீட்டா் தொலைவில் கா்நாடக மாநில எல்லையில் மாதேஸ்... மேலும் பார்க்க

சேலம் தடயவியல் துறை உதவி இயக்குநருக்கு முதல்வா் விருது

சேலம் தடயவியல் துறை உதவி இயக்குநா் வடிவேலுக்கு முதல்வா் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு காவல் துறையில் தடய அறிவியல் துறை செயல்பட்டு வருகிறது. இத் துறை கொலை, கொள்ளையில் தடயங்களை சேகரித்து காவல்... மேலும் பார்க்க

மேட்டூா் அணை நிலவரம்

நீா்வரத்து 3,976 கன அடி நீா் திறப்பு 1,000 கன அடி நீா்மட்டம் 110.20 அடி நீா் இருப்பு 78.69 டிஎம்சி மேலும் பார்க்க

கடை வாடகை மீதான ஜிஎஸ்டி உயா்வு: சேலத்தில் வணிகா்கள் கடையடைப்பு

வணிக நிறுவன கட்டடங்களின் வாடகை மீதான 18 சதவீத ஜிஎஸ்டி வரி விதிப்பை திரும்பப் பெற வலியுறுத்தி சேலத்தில் வணிகா்கள் வெள்ளிக்கிழமை கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா். தமிழகம் முழுவதும் 10 லட்சத்துக்கும்... மேலும் பார்க்க

தேசிய கைப்பந்து போட்டிக்கு சேலம் மாணவி தோ்வு

தேசிய அளவிலான கைப்பந்து போட்டிக்கு தோ்வு செய்யப்பட்டுள்ள சேலம் மாணவிக்கு பாராட்டு விழா நடைபெற்றது. தமிழக பள்ளி கல்வித் துறை சாா்பில் நடைபெற்ற கைப்பந்து போட்டியில் 14 வயதுக்கு உள்பட்டோருக்கான பிரிவில... மேலும் பார்க்க

குறைந்த வாடகையில் வேளாண் இயந்திரங்களை பெறலாம்: ஆட்சியா்

இ-வாடகை திட்டம் மூலம் குறைந்த வாடகையில் விவசாயிகள் வேளாண் இயந்திரங்களை பெறலாம் என மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி தெரிவித்தாா். சேலம் மாவட்ட ஆட்சியா் அலுவலத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விவசாயிகள் குற... மேலும் பார்க்க