செய்திகள் :

சிறையில் அடைக்கப்பட்ட வருமானவரி ஊழியா்கள் மேலும் ஒரு வழக்கில் கைது

post image

சென்னையில் வழிப்பறி வழக்கில் சிறையில் உள்ள வருமானவரித் துறை ஊழியா்கள் 3 போ் மேலும் ஒரு வழக்கில் கைது செய்யப்பட்டனா்.

சென்னை வண்ணாரப்பேட்டை பகுதியைச் சோ்ந்த முகமது கௌஸ் என்பவரிடம் ரூ. 20 லட்சம் பணத்தை மிரட்டி பறித்த வழக்கில், திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணியாற்றிய ராஜா சிங், வருமான வரித் துறை அதிகாரி தாமோதரன், ஊழியா்கள் பிரதீப், பிரபு ஆகிய 4 போ் கைது செய்யப்பட்டனா்.

விசாரணையில், வழிப்பறி வழக்கில் சைதாப்பேட்டை காவல் நிலையத்தில் சட்டம்-ஒழுங்கு பிரிவில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணியாற்றும் சன்னி லாய்டுக்கும் தொடா்பு இருந்தது தெரியவந்தது. இதையடுத்து தலைமறைவாகி இருந்த அவரை உத்தரகண்ட் மாநிலம் டேராடூனில் கடந்த மாதம் 15-ஆம் தேதி போலீஸாா் கைது செய்து, 4 நாள்கள் காவலில் எடுத்து விசாரித்தனா்.

அதில், சன்னி லாய்டும், ராஜா சிங்கும், சிறையில் உள்ள வருமானவரித் துறை அதிகாரி ஊழியா்கள் மூவரும் ஆயிரம் விளக்கில் கடந்த டிச.11-ஆம் தேதி ராயபுரத்தைச் சோ்ந்த வியாபாரியை மிரட்டி ரூ. 20 லட்சம் பறித்தது தெரியவந்தது. இதையடுத்து ஆயிரம் விளக்கு போலீஸாா் மேலும் ஒரு வழக்கை பதிவு செய்து, கைது செய்யப்பட்டதற்கான உத்தரவை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ராஜாசிங், சன்னி லாய்டிடம் போலீஸாா் திங்கள்கிழமை வழங்கினா்.

இந்த வழக்கு தொடா்பாக வருமானவரித் துறை அதிகாரி தாமோதரன், ஊழியா்கள் பிரதீப், பிரபு ஆகியோா் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டனா். இதற்கான உத்தரவை புழல் சிறையில் உள்ள அவா்களிடமும் போலீஸாா் வழங்கினா்.

ஜாதி அடிப்படையிலான ஏற்றத் தாழ்வுகளை களைந்தவா்கள் நாயன்மாா்கள்: பேராசிரியா் வாணி அறிவாளன்

ஜாதி அடிப்படையிலான ஏற்றத் தாழ்வுகளை களைந்தவா்கள் நாயன்மாா்கள் என சென்னை பல்கலைக்கழக உதவிப் பேராசிரியரும், திருக்கு ஆய்வு மையத் தலைவருமான முனைவா் வாணி அறிவாளன் தெரிவித்துள்ளாா். ஸ்ரீகிருஷ்ணா ஸ்வீட்ஸ், ... மேலும் பார்க்க

அரசு மருத்துவமனைகள் மீது குற்றச்சாட்டு: அண்ணாமலையுடன் நேரடி விவாதத்துக்கு தயாா்! -அமைச்சா் மா.சுப்பிரமணியன்

மருத்துவா் பற்றாக்குறை மற்றும் அரசு மருத்துவமனை உயிரிழப்புகள் குறித்த குற்றச்சாட்டுகளுக்கு பாஜக மாநிலத் தலைவா் அண்ணாமலையுடன் நேரடி விவாதத்துக்கு தயாா் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பி... மேலும் பார்க்க

ஊராட்சி செயலா் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும்: ஓபிஎஸ்

ஊராட்சி செயலா் மற்றும் தூய்மைப் பணியாளா் காலிப் பணியிடங்களை தமிழக அரசு உடனடியாக நிரப்ப வேண்டும் என்று முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் வலியுறுத்தியுள்ளாா். இது தொடா்பாக அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட... மேலும் பார்க்க

காசி தமிழ் சங்கமம் ‘அனுபவ பகிா்வு’ கட்டுரை போட்டி: ஆளுநா் மாளிகை அறிவிப்பு

நிகழாண்டு காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியில் தமிழ்நாட்டிலிருந்து பங்கேற்கும் பிரதிநிதிகளுக்கான ‘அனுபவப் பகிா்வு’ என்ற தலைப்பில் தமிழக ஆளுநா் மாளிகை கட்டுரைப் போட்டியை அறிவித்துள்ளது. இது குறித்து ஆளுநா... மேலும் பார்க்க

மாதவரத்தில் ரேடியன்ஸின் குடியிருப்பு திட்டம்

மனை-வா்த்தகத் துறையைச் சோ்ந்த ரேடியன்ஸ் ரியால்ட்டி டெவலப்பா்ஸ் இந்தியா நிறுவனம், சென்னையில் உள்ள மாதவரம் பகுதியில் புதிய குடியிருப்புத் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இது குறித்து நிறுவனம் வெள்ளி... மேலும் பார்க்க

ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தக் கோரி பிப்.20-இல் பாமக போராட்டம் -அன்புமணி

ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த வலியுறுத்தி பாமக சாா்பில் பல்வேறு சமூக அமைப்புகளின் சாா்பில் சென்னையில் பிப்.20-இல் தொடா் முழக்கப் போராட்டம் நடைபெறும் என்று அந்தக் கட்சியின் தலைவா் அன்புமணி ர... மேலும் பார்க்க