செய்திகள் :

சிவகங்கை: ஜாம்பவான் வேட்பாளர்களை 'சைலண்ட்'ஆக வீழ்த்திய தவெகவின் குழந்தைராணி நாச்சியார் - யார் இவர்?

post image

காங்கிரஸின் பாரம்பரியம், திமுக - அதிமுகவின் அதிகார பலம் எனப் பலமான அடித்தளம் கொண்ட சிவகங்கை மண்ணில், இம்முறை மொத்தமாக 'ஆப்பு' வைத்திருக்கிறது தவெக.

ஜாம்பவான்களைச் சாய்த்து நான்கு தொகுதிகளையும் ஒட்டுமொத்தமாக அள்ளிய தவெக-வின் இந்த வேகம், தென்மாவட்ட அரசியலில் பெரும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது.

திராவிட, தேசிய கட்சிக்ளுக்கு முற்றுப்புள்ளி வைத்து, சிவகங்கை மாவட்டத்தின் 4 தொகுதிகளிலும் தனது 'வெற்றிக் கோட்டையாக' மாற்றியிருக்கிறார் விஜய்.

சிவகங்கை கோட்டையில் இந்த முறை யாரும் எதிர்பார்க்காத 'சைலண்ட்' புரட்சியைச் செய்து காட்டியிருக்கிறார் தவெக வேட்பாளர் அ. குழந்தைராணி நாச்சியார்.

55 வயதான பி.காம் பட்டதாரியான இவர், ஏற்கனவே 1996-2001 வரை தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் சிவகங்கை நகர்மன்ற உறுப்பினராகப் பொறுப்பில் இருந்தவர்.

பின்னர் தவெகவில் இணைந்திருக்கிறார். இவரது கணவர் அருள்பிரகாசம், மகன் பசும்பொன் அகிலேஷ் ஆகியோரின் உறுதுணையோடு களமிறங்கிய இவருக்கு எதிராக நின்றவர்களோ தேர்தல் களத்தின் ஜாம்பவான்களான அதிமுகவின் மாவட்டச் செயலாளரும், சிட்டிங் எம்.எல்.ஏ-வுமான பி.ஆர். செந்தில்நாதன் மற்றும் திமுக கூட்டணியில் களமிறங்கிய முக்குலத்தோர் புலிப்படைத் தலைவர் கருணாஸ் என நட்சத்திரப் போட்டி நிலவியது.

கருணாஸை ஆதரித்து மு.க.ஸ்டாலின், உதயநிதி என ஒரு பெரும்படையும், செந்தில்நாதனுக்குன் வககு கேட்டு எடப்பாடி போன்றோரும் வரிசை கட்டி பிரசாரம் செய்தனர்.

ஆனால் தினசரி பிரசார செலவுக்கு கூட குழந்தை ராணி நாச்சியார் மிகுந்த பொருளாதார சிரமங்களை எதிர்நோக்கியதாக தவெகவினர் கூறுகின்றனர்.

கருணாஸ்

இரட்டை இலைக்கும் , உதய சூரியனுக்கும் இடையேதான் இங்கு கடும்போட்டி என்று கருதப்பட்டு வந்த நிலையில் இரண்டு பெரும் துருவங்களையும் பின்னுக்குத் தள்ளி, சிவகங்கை மண்ணில் தவெக-வின் கொடியை நட்டு 'வாகை' சூடியிருக்கிறார் இந்த நாச்சியார்.

தளபதி விஜய்யின் அரசியல் வருகைக்குச் சிவகங்கை மக்கள் தந்துள்ள இந்த வெற்றிப் பரிசு, தமிழக அரசியலில் புதிய சகாப்தத்தின் தொடக்கமாகவே பார்க்கப்படுகிறது!

"அந்த கட்டட தொழிலதிபராலத்தான் இத்தனை குழப்பம்.!" - பொங்கும் அ.தி.மு.க கிளர்ச்சியாளர்கள்

அ.தி.மு.க-வுக்குள் உச்சக்கட்ட குழப்பம் வெடித்திருக்கிறது. அக்கட்சியின் பொதுச் செயலாளரான எடப்பாடி பழனிசாமியின் பிறந்தநாளான இன்று, தொண்டர்கள் குழுமி அவருக்கு வாழ்த்து தெரிவித்தாலும், அவரது வலது இடது கரங... மேலும் பார்க்க

`குதிரை பேர அரசியல்: 'மாற்றமல்ல துர்நாற்றம்' - தவெக-வை கடுமையாகச் சாடும் டிடிவி தினகரன்!

அ.ம.மு.க சார்பில் மன்னார்குடியில் போட்டியிட்ட எஸ்.காமராஜ், தி.மு.க-வின் டி.ஆர்.பி.ராஜாவை தோற்கடித்து எம்.எல்.ஏ ஆனார். த.வெ.க-வுக்கு ஆதரவு கடிதம் கொடுத்ததாக தகவல் பரவிய நிலையில், "தன் கட்சி எம்.எல்.ஏ-வ... மேலும் பார்க்க

”ஆளுங்கட்சியில் இருப்பதுதான் சேஃப்”- அமமுக-வில் இருந்து நீக்கம்; பொங்கிய எஸ்.காமராஜ்!

அதிமுக கூட்டணியில் அமமுக சார்பில் மன்னார்குடியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் எஸ்.காமராஜ். டி.ஆர்.பி.ராஜாவை தோற்கடித்ததால் அரசியல் வட்டத்தில் இவர் மீது தனி கவனம் விழுந்தது. இந்நிலையில் எஸ்.காமராஜ் தவ... மேலும் பார்க்க

'மோடியின் பேச்சில் மர்மம் ஒளிந்திருக்கிறது; இந்திய பொருளாதாரம் மோசமான.!'- கெஜ்ரிவால் காட்டம்

மத்தியக் கிழக்கு போர் பதற்றத்தால் உலகளாவிய எரிசக்தி நெருக்கடி மற்றும் கச்சா எண்ணெய் விலை உயர்வால் ஏற்பட்டுள்ள பொருளாதாரப் பாதிப்புகளைச் சமாளிக்க, பெட்ரோல் மற்றும் டீசல் பயன்பாட்டைக் குறைக்குமாறு நாட்ட... மேலும் பார்க்க

சி.வி சண்முகம் தரப்புக்கு முக்கியத்துவம் கொடுத்த `முதல்வர்' விஜய் - எடப்பாடி பழனிசாமியை சந்திப்பாரா?

தமிழ்நாடு அரசியலில் தேர்தல் முடிவு வெளியான மே-4 க்குப் பிறகு பிரேக்கிங் நியூஸுக்கு பஞ்சமில்லாமல் இருக்கிறது. த.வெ.க தலைவர் விஜய் ஆட்சி அமைப்பாரா என்பதில் தொடங்கி தற்போது அ.தி.மு.க-வின் எம்.ஜி.ஆர் மாளி... மேலும் பார்க்க

தேனி: துடைத்தெறியபட்ட அதிமுக… கட்சிக்கு கஷ்ட காலத்தில் கைகொடுத்த மாவட்டத்தில் வீழ்ச்சி! என்ன காரணம்?

அ.தி.மு.க -வின் முன்னாள் முதலமைச்சர்கள் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, ஓ.பன்னீர்செல்வம் ஆகிய மூவரும் களம் கண்டு வெற்றி பெற்ற மாவட்டம் தேனி. இங்கு உள்ள நான்கு தொகுதிகளிலும் கோலோச்சி வந்த அ.தி.மு.க, தற்போது நடந்... மேலும் பார்க்க