செய்திகள் :

சிவகங்கை: துபாயில் தகவல் தொடர்பு துண்டிப்பு; கொல்கத்தாவில் வழிப்பறி- மீண்டது எப்படி? 18 நாள் திகில்!

post image

வெளிநாட்டில் உழைத்துவிட்டுத் தாயகம் திரும்பும் ஆசையில் விமானம் ஏறக் காத்திருந்த கணவர் திடீரென மாயமானதால், 18 நாள்களாகக் கண்ணீரோடு தவித்த மனைவிக்கு, மாவட்ட ஆட்சியரின் துரித நடவடிக்கையால் கணவர் பத்திரமாக வீடு திரும்பியது பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அல்பேனியா டு தாயகம்:

சிவகங்கை மாவட்டம், நாட்டரசன்கோட்டை அருகேயுள்ள அய்யம்பட்டியைச் சேர்ந்தவர் முனீஸ்வரி (35). இவரது கணவர் பெரியசாமி (43), குடும்பச் சூழல் காரணமாகக் கடந்த 2023-ம் ஆண்டு அல்பேனியா நாட்டுக்குக் கட்டட வேலைக்காகச் சென்றிருந்தார். மூன்று ஆண்டுக்கால உழைப்புக்குப் பிறகு, கடந்த அக்டோபர் 19-ம் தேதி அல்பேனியாவிலிருந்து ஊருக்குத் திரும்புவதாகத் தனது மனைவி முனீஸ்வரிக்குக் கைப்பேசி மூலம் மகிழ்ச்சியுடன் தகவல் தெரிவித்தார்.

துபாய் விமான நிலையத்தில் துண்டிக்கப்பட்ட தொடர்பு:

அன்றைய தினம் இரவு துபாய் விமான நிலையம் வந்து சேர்ந்த பெரியசாமி, அங்கிருந்து அதிகாலை 2 மணிக்கு கொல்கத்தா செல்லும் இணைப்பு விமானத்தில்  ஏறுவதற்காகக் காத்திருப்பதாக மனைவியிடம் கூறியுள்ளார். ஆனால், அதன் பிறகு அவரிடமிருந்து எந்தத் தகவலும் இல்லை; தொலைபேசித் தொடர்பும் முற்றிலுமாகத் துண்டிக்கப்பட்டது. விமானம் ஏற வேண்டிய கணவர் என்ன ஆனார் எனத் தெரியாமல் முனீஸ்வரியும், அவரது குடும்பத்தினரும் நிலைகுலைந்து போயினர்.

ஆட்சியரின் அதிரடி நடவடிக்கை:

கணவரைத் தேடி அலைந்து தவித்த முனீஸ்வரி, தனது குடும்பத்தினருடன் சென்று சிவகங்கை மாவட்ட ஆட்சியர்  ஆகாஷிடம் கடந்த நவம்பர் 2-ம் தேதி கண்ணீர்மல்க மனு அளித்தார். மனுவைப் பெற்றுக்கொண்ட ஆட்சியர், உடனடியாக அல்பேனியா மற்றும் துபாய் இந்திய தூதரக அதிகாரிகளுக்கு கடிதம் எழுதி உள்ளார். மத்திய , மாநில அரசுகளின் கவனத்துக்கும் கொண்டு சென்றுள்ளார். இந்த நிலையில் மாயமானதாகக் கருதப்பட்ட பெரியசாமி கடந்த நவம்பர் 6-ம் தேதி பத்திரமாகத் தனது சொந்த ஊரான அய்யம்பட்டிக்கு வந்து சேர்ந்தார்.

பின்னணியில் நடந்த திகில் சம்பவம்:

துபாயில் மாயமானதாக நினைத்த பெரியசாமிக்கு உண்மையில் என்ன நடந்தது என்பது குறித்து அவரது தம்பி முருகன் விவரிக்கையில், "அண்ணன் துபாயிலிருந்து கொல்கத்தா விமான நிலையத்திற்குப் பத்திரமாகத்தான் வந்து இறங்கியுள்ளார். அங்கிருந்து சென்னைக்கு ரயில் மூலம் வருவதற்காக வாடகைக் காரில்  ரயில் நிலையத்திற்குச் சென்று கொண்டிருந்தார். அப்போது, வழியில் மர்ம நபர்கள் சிலர் காரை வழிமறித்து, அண்ணனிடமிருந்த  பாஸ்போர்ட், கைப்பேசி, பணம் உள்ளிட்ட அனைத்தையும் பறித்துக்கொண்டு நடுவழியில் இறக்கிவிட்டுத் தப்பிச் சென்றுவிட்டனர்.

Ai created image

முன்பின் தெரியாத ஊரில், கையில் ஒரு ரூபாய்கூட இல்லாமல், யாரையும் தொடர்பு கொள்ள முடியாமல் கையறு நிலையில் அண்ணன் தவித்துள்ளார். பின்னர் பல சிரமங்களுக்கு இடையே நல்ல உள்ளங்களின் உதவியை நாடி சென்னை வந்து சேர்ந்தவர், அங்கிருந்து மூன்று நாட்களுக்கு முன்பு சிவகங்கைக்குப் பத்திரமாக வந்து சேர்ந்தார்'' என்றார் அதிர்ச்சி விலகாமல்.

கணவரை இழந்துவிட்டோமோ என்ற அச்சத்தில் 18 நாட்கள் தவித்த முனீஸ்வரிக்கு, மாவட்ட ஆட்சியரின் உதவியால் கணவர் உயிரோடு கண்முன்னே வந்து நின்ற சம்பவம் அய்யம்பட்டி கிராம மக்களிடையே பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆரணி: தவெக மா.செ மீது பாலியல் புகார்; கட்சி அலுவலகத்தை இழுத்து மூடிய பெண் நிர்வாகிகள்! நடந்தது என்ன?

த.வெ.க-வில் திருவண்ணாமலை வடக்கு மாவட்டச் செயலாளராக இருப்பவர் எம்.சத்யா என்கிற சத்தியராஜ். செய்யாறு தொகுதியைச் சேர்ந்த சத்யா, ஆரணி தொகுதியை உள்ளடக்கிய மாவட்டச் செயலாளர் பொறுப்புக்கு வந்ததில் இருந்தே நி... மேலும் பார்க்க

அயலக உதவித்தொகை திட்டம்: விமர்சித்த திமுக; விளக்கம் அளித்த சமூக நீதித்துறை!

தமிழ்நாடு அரசின் சமூகநீதி மற்றும் ஆதிதிராவிடர் நலத்துறையால் செயல்படுத்தப்படும் அண்ணல் அம்பேத்கர் அயலக உயர்கல்வித் திட்டம் வெளிநாடுகளில் முதுகலை மற்றும் முனைவர் (Ph.D) பட்டம் பயில விரும்பும் மாணவர்களுக... மேலும் பார்க்க

"கடந்த ஆட்சியைக் காட்டிலும் குறைந்த விலைக்கே சைக்கிள் கொள்முதல்" - அமைச்சர் சம்பத்குமார் விளக்கம்

கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமார் மாணவ, மாணவிகளுக்கு கேக் வழங்கி குழந்தைகள் தின வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார். இதனைத் தொடர்... மேலும் பார்க்க

"காணாமல்போன செஞ்சி சிறுமியைக் கண்டுபிடிக்கவில்லை; ஆனால் குழந்தைகளுக்கு 'கேக்'" - இபிஎஸ் விமர்சனம்

குழந்தைகள் தினத்தை முன்னிட்டு அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு கேக் வழங்கும் திட்டத்தை முதல்வர் ஜோசப் விஜய் இன்று ( நவ.13) துவங்கி வைத்து மாணவர்களுக்கு கேக் மற்றும் வாழ்த... மேலும் பார்க்க

தவெக 6 மாத ஆட்சி: `` முதலமைச்சர் தன் கடமையை உணர்ந்து செயல்படவில்லை..!" - சிபிஐ வீரபாண்டியன்

தவெக அரசின் இந்த 6 மாதகால ஆட்சி எப்படி இருந்தது என்பது குறித்து தமிழ்நாட்டின் பிரதான கட்சிப் பிரதிநிதிகளிடம் பேசினோம். அந்த வகையில் முதல் பகுதியில் நாராயணன் திருப்பதியிடமும், அடுத்து அதிமுக-வின் முன்ன... மேலும் பார்க்க

’பெண்களுக்கு தவெக கட்சிக்குள்ளேயே பாதுகாப்பு இல்லை’ – வானதி சீனிவாசன் குற்றச்சாட்டு!

பா.ஜ.க முன்னாள் தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கோவை காரமடை தமிழக வெற்றிக் கழக ஒன்றியச் செயலாளர் கருப்பசாமி என்பவர் த.வெ.க பெண் ஊராட்சி செயலருக்கு பாலியல் தொந்தரவு அளி... மேலும் பார்க்க