செய்திகள் :

சீனா நோக்கிச் சென்ற 7 ரஷ்ய கப்பல்கள்; திடீரென இந்தியாவுக்கு வருவது ஏன்?!

post image

சீனாவுக்குச் செல்லவிருந்த ஏழு ரஷ்ய கச்சா எண்ணெய் கப்பல்கள், திடீரென திசைமாற்றப்பட்டு இந்தியா நோக்கி வந்து கொண்டிருக்கின்றன.

மத்​திய கிழக்கு பிராந்​தி​யத்​தில் நில​வும் போர்ப் பதற்​றம் காரணமாக, ஹார்​முஸ் ஜலசந்​தி​யில் கச்சா எண்​ணெய் விநியோகம் கடுமை​யாக பாதிக்கப்பட்டிருக்கிறது.​

இந்திய நோக்கி வரும் கப்பல்கள்
இந்திய நோக்கி வரும் கப்பல்கள்

இந்த இக்கட்டான சூழலை சமாளிக்​கும் வகை​யில் ரஷ்​யா​விடம் இருந்து முன்னெப்​போதும் இல்​லாத வகை​யில் இந்​தியா அதி​கள​வில் கச்சா எண்ணெய்யை கொள்​முதல் செய்​யத் தொடங்​கி​ இருக்கிறது.

சமீபத்தில் மட்டும் நம் நாடு, 3 கோடி பேரல்கள் கச்சா எண்ணெய் வாங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

இந்நிலையில் சீனாவுக்கு செல்ல இருந்த ஏழு ரஷ்ய கச்சா எண்ணெய் கப்பல்கள் திடீரென திசைமாற்றப்பட்டிருக்கிறது. தற்போதைய சந்தை தேவைக்கு ஏற்ப அவை நம் நாட்டு துறைமுகங்களை நோக்கி திருப்பி விடப்பட்டுள்ளன.

இந்திய நோக்கி வரும் கப்பல்கள்
இந்திய நோக்கி வரும் கப்பல்கள்

சமீபத்தில் ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்குவதை இந்தியா குறைத்திருந்த நிலையில், தற்போது அமெரிக்காவின் அனுமதியை தொடர்ந்து, மீண்டும் ரஷ்ய எண்ணெயை அதிகமாக கொள்முதல் செய்யத் தொடங்கி இருக்கிறது.

இந்தியா தவிர ஜப்பான், தென்கொரியா போன்ற நாடுகள் ரஷ்ய எண்ணெய்யை அதிகமாக வாங்கத் தொடங்கியிருப்பதால் அதன் விலை விரைவில் உயரக் கூடும் எனும் கூறப்படுகிறது.

'சட்டமன்ற தேர்தலில் போட்டியிடச் சொன்னால் என்ன செய்வேன் தெரியுமா?'- சுரேஷ் கோபி சொல்வது என்ன?

கேரள மாநிலத்தில் சட்டசபை தேர்தல் ஏப்ரல் 9-ம் தேதி நடக்கிறது. அதற்கான வேட்பு மனு தாக்கல் நடந்துகொண்டிருக்கிறது. அதே சமயம் காங்கிரஸ், பா.ஜ.க கட்சிகளில் வேட்பாளர் பட்டியல் இன்னும் முழுமையாக வெளியாகவில்லை... மேலும் பார்க்க

கத்தார் எரிவாயு முனையம் மீது தாக்குதல்: உலகளவில் எகிறும் எரிசக்தி விலை - இந்தியாவிற்கு நெருக்கடி!

அமெரிக்க - இஸ்ரேல் படைகள் ஈரான் மீது நடத்திய தாக்குதலுக்குப் பதிலடியாக, வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க சொத்துக்கள் மற்றும் எரிசக்தி நிலையங்களை ஈரான் இலக்கு வைத்து தாக்குதல் நடத்தி வருகிறது. அதன் ஒருப... மேலும் பார்க்க

'6 சீட்டுனா பேசுறதுக்கு கூப்பிடுங்க, இல்லன்னா..!'- கறார் சி.பி.எம்; இறங்கி வராத திமுக? பின்னணி என்ன?

திமுக - சி.பி.எம் இடையேயான தொகுதி பங்கீட்டில் இழுபறி ஓய்ந்தபாடில்லை. மூன்று கட்டப் பேச்சுவார்த்தைகளை முடித்த பிறகு, '6 க்கு கீழ குறைச்சுக்கவே மாட்டோம்!' என சி.பி.எம் கறாராக நிற்கிறது. திமுகவுக்கும் இற... மேலும் பார்க்க

தேமுதிக-வுக்கு எவ்வளவு ஓட்டு? விஜய்யின் தாக்கம் என்ன? - நேர்காணலில் ஸ்டாலின் கேட்ட முக்கிய கேள்வி!

சட்டமன்றத் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களிடம் முதல்வர் ஸ்டாலின் கடந்த மூன்று நாட்களாக நேர்காணல் நடத்தி வருகிறார். இந்நிலையில், கொங்கு மண்டலத்துக்கு நடந்த இன்றைய நேர்காணலில்... மேலும் பார்க்க

`வெய்ட்டா கவனிக்கணும்' - அள்ளி இறைக்கத் திட்டமிடும் அதிமுக? - அதிரும் ஆற்காடு தொகுதி!

ராணிப்பேட்டை மாவட்டத்தில், மொத்தம் 4 சட்டமன்றத் தொகுதிகள் இருக்கின்றன. இதில், மாவட்டத் தலைநகரை உள்ளடக்கிய ராணிப்பேட்டை சட்டமன்றத் தொகுதி சிட்டிங் எம்.எல்.ஏ-வாக தி.மு.க மாவட்டச் செயலாளரும், கைத்தறித்து... மேலும் பார்க்க

`பா.ஜ.க-வை டென்சனாக்கிய இருவர் அணி' - கடைசி நேரத்தில் `நோ' சொன்ன விஜய்!

“நாங்கள் எப்போதும் மதசார்பற்ற கொள்கை என்பதிலோ, மதசார்பற்ற சமூக நீதி என்ற நிலைப்பாட்டிலோ சமரசம் வைத்துக் கொள்ள மாட்டோம். நமது தலைமையில்தான் ஆட்சி என்பதில் உறுதியாக இருக்கிறோம்.” என்று இஃப்தார் நிகழ்ச்... மேலும் பார்க்க