செய்திகள் :

செந்தில் பாலாஜி: டாஸ்மாக் டெண்டர், பார் ஒப்பந்தங்களில் பல கோடி ரூபாய் முறைகேடு! - FIR விவரங்கள்!

post image

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, முன்னாள் டாஸ்மாக் மேலாண்மை இயக்குநர் விசாகன் IAS உள்ளிட்ட 7 பேர் மீது டாஸ்மாக் நிறுவனத்தில் நடைபெற்றதாகக் கூறப்படும் பல்வேறு முறைகேடுகள் தொடர்பாக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை (DVAC) வழக்குப்பதிவு செய்துள்ளது.

இந்த வழக்கின் அடிப்படையில், சென்னை, கரூர் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மொத்தம் 41 இடங்களில் டிவிஏசி அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை காலை முதல் ஒரே நேரத்தில் சோதனை நடத்தி வருகின்றனர்.

FIR-ல் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் என்ன?

லஞ்ச ஒழிப்புத்துறை பதிவு செய்துள்ள முதல் தகவல் அறிக்கையில் (FIR), டாஸ்மாக் நிறுவனத்தின் செயல்பாடுகளில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

செந்தில் பாலாஜி

அதன்படி, `தமிழகம் முழுவதும் 3,240 டாஸ்மாக் பார்கள் செயல்பட்டு வரும் நிலையில், 2021-ஆம் ஆண்டு முதல் சில மாவட்டங்களில் பார்களின் வருவாய் திடீரென குறைந்ததாகவும், அதன் பின்னணியில் முறைகேடுகள் நடந்திருக்கலாம்' என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், மூடப்பட்டதாகக் கூறப்பட்ட 284 பார்கள் சட்டவிரோதமாக தொடர்ந்து செயல்பட்டதாகவும், பார் உரிமையாளர்கள் மற்றும் அதிகாரிகள் இணைந்து விதிமுறைகளை மீறி செயல்பட்டு ரூ.17.27 கோடி அளவுக்கு அரசுக்கு இழப்பு ஏற்படுத்தியுள்ளதாகவும் FIR-ல் கூறப்பட்டுள்ளது.

டெண்டர் ஒதுக்கீட்டில் முறைகேடு

கோவை, ஈரோடு, நீலகிரி, திருப்பூர், நாமக்கல் மற்றும் கரூர் மாவட்டங்களில் பார் டெண்டர்கள் ஒதுக்கப்பட்டதில் முறைகேடுகள் நடைபெற்றதாகவும், உரிமம் புதுப்பிக்கப்படாத பார்களும் தொடர்ந்து இயங்கி அரசுக்கு பல கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டதாகவும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

அதோடு, தனியார் நிறுவனங்களுக்கு விதிமுறைகளை மீறி ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டதாகவும், பழைய மதுபான பாட்டில்கள் கொள்முதல், அதிகாரிகள் இடமாற்றம் உள்ளிட்ட பல்வேறு நிர்வாக நடவடிக்கைகளிலும் முறைகேடுகள் நடைபெற்றதாக FIR-ல் குறிப்பிடப்பட்டுள்ளது.

fir

அமலாக்கத்துறை ஆவணங்கள் அடிப்படையில் நடவடிக்கை

அமலாக்கத்துறை (ED) பதிவு செய்த வழக்குகள், நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்கள் மற்றும் விசாரணை தகவல்களின் அடிப்படையில் இந்த வழக்கை டிவிஏசி பதிவு செய்து, தற்போது சோதனை நடத்தி வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும், டாஸ்மாக் பார் டெண்டர்கள், போக்குவரத்து ஒப்பந்தங்கள், பாட்டில் விநியோகம் மற்றும் மதுபான பிராண்ட் ஒப்புதல்கள் உள்ளிட்ட செயல்பாடுகளில் அரசு ஊழியர்கள், டாஸ்மாக் உயர் அதிகாரிகள் மற்றும் ஆளுங்கட்சி பின்னணி கொண்ட நபர்கள் இணைந்து கோடிக்கணக்கில் முறைகேடுகளில் ஈடுபட்டதாக FIR-ல் கூறப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் சேகரிக்கப்படும் ஆவணங்கள் மற்றும் நிதி பரிவர்த்தனை தொடர்பான ஆதாரங்களின் அடிப்படையில் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.!

`ஆளுங்கட்சி ஆகிவிட்டோம்' தவெக கூட்டணியை உறுதி செய்த திருமா; பாமக-வுக்கு வைத்த செக்! - பின்னணி என்ன?

தவெக அமைச்சரவையில் அமைச்சர் வன்னி அரசு இடம்பெற்றிருந்தாலும் எந்தக் கூட்டணியில் விசிக இருக்கிறது என்பதை தெளிவாக கூறாமல் திருமாவளவன் குழப்பி வந்தார். 'திமுகவுடன் எங்களது நட்பு தொடர்கிறது' என்று திமுகவிற... மேலும் பார்க்க

மேகமலை: `துணை ராணுவப் படையை அனுப்ப நேரிடும்; முழுமையாக இடித்து அகற்றுங்கள்'- உச்ச நீதிமன்றம் அதிரடி

மேகமலை புலிகள் சரணாலயம் மற்றும் மாஞ்சோலையைச் சுற்றியுள்ள பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளையும், இலவம் பஞ்சு தோட்டங்களையும் முழுமையாக அப்புறப்படுத்த உச்ச நீதிமன்றம் மிகக் கடுமையான உத்... மேலும் பார்க்க

`முதலமைச்சரை மிஞ்சிய சூப்பர் பவரின் கையில் ஆட்சி இருக்கிறதா?'- திமுக கேள்வி

`முதலமைச்சரை மிஞ்சிய சூப்பர் பவரின் கையில் ஆட்சி இருக்கிறதா?' என திமுக கேள்வி எழுப்பியிருக்கிறது.இது தொடர்பாக வெளியாகியிருக்கும் அறிக்கையில், `நேற்றைய தினம் அதிகார ஆணவத்திமிரோடு, “திண்டுக்கல் மாவட்டம்... மேலும் பார்க்க

`மூன்று தமிழர்களைச் சுட்டுக் கொன்றுவிட்டு, ஆணவத்தோடு டி.கே.சிவக்குமார் பேசுவதா?' - சீமான் கண்டனம்

`கர்நாடக வனப்பகுதியில் மூன்று அப்பாவித்தமிழர்களை ஈவிரக்கமற்றுச் சுட்டுக்கொன்றுவிட்டு, எங்கள் மாநிலத்தின் விவகாரத்தில் தலையிடாது, உங்கள் வேலையைப் பாருங்கள் எனத் துளியும் குற்றவுணர்ச்சியோ, பொறுப்புணர்ச்... மேலும் பார்க்க

"அந்தத் தண்ணீரைக் குடிக்கிறாங்க, கோயிலுக்கு அபிஷேகம் பண்றாங்க" - கூவம் நதி குறித்து சௌமியா அன்புமணி

தமிழக சட்டப்பேரவையில் இன்று நிதிநிலை அறிக்கை, நீர்வளம், ஊரக வளர்ச்சி, சுற்றுலாத்துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சட்டமன்ற விவாதத்தின்போதுபேசிய பாமக எம்எல்ஏ சௌமியா அன்ப... மேலும் பார்க்க

"தவெக 10 சீட்டுக்கு மேல் ஜெயித்தால்..." - சவாலில் தோற்றதால் மீசையை மழித்த அதிமுக மாசெ

அ.தி‌.மு.க-வின் நீலகிரி மாவட்ட செயலாளராகத் தற்போது பதவி வகித்து வருகிறார் வழக்கறிஞர் பால‌. நந்தகுமார். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் 2012-ம் ஆண்டு நீலகிரி மாவட்ட செயலாளர் பதவி வழங்கப்பட்டது. அ... மேலும் பார்க்க