'தள்ளிப்போகும் தேதி' - SIR படிவத்தை சமர்ப்பிக்கும் தேதி நீட்டிப்பு; அவசரம் வேண்ட...
சென்னைக்கு அருகில் 'டிட்வா'; தொடரும் மழை - புயல் இப்போது எங்கே இருக்கிறது?
சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் இன்று காலை முதல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
காரணம் என்ன?
டிட்வா புயல் வங்கக் கடற்கரையின் தென்மேற்கு திசையில் உள்ளது. அது தற்போது தமிழ்நாடு, புதுச்சேரி கடற்கரையின் வடக்குத் திசையில் மணிக்கு 7 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து வருகிறது.

அடுத்த 24 மணி நேரத்தில், இந்தப் புயல் வடக்கு நோக்கி நகர்ந்து, தமிழ்நாடு-புதுச்சேரி கடற்கரைக்கு அருகிலும் இணையாகவும் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இன்று மதியம் மற்றும் மாலை நேரத்தில் டிட்வா தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி கடற்கரைக்கு முறையே 70 கிலோ மீட்டர் தொலைவிலும், 30 கிலோ மீட்டர் தொலைவிலும் இருக்கலாம்.
இது வானிலை ஆய்வு மையம் கொடுத்துள்ள அப்டேட்.
சென்னையில் மழை...
தற்போது சென்னை வானிலை மையம் திருவள்ளூர், சென்னை ஆகிய மாவட்டங்களுக்கு 'ஆரஞ்சு அலர்ட்' வழங்கியுள்ளது. இங்கே 115.6 - 204.4 மி.மீ அளவில் மழை பெய்யலாம்.
ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களுக்கு 'மஞ்சள் அலர்ட்' கொடுத்துள்ளது. இங்கே 64.5 - 115.5 மி.மீ அளவில் மழை பெய்யலாம்.
— IMD-Tamilnadu Weather (@ChennaiRmc) December 1, 2025









.jpg)





