செய்திகள் :

சென்னையில் இன்றும் பெட்ரோல், டீசல் விலை உயர்வு; எவ்வளவு ரூபாய்க்கு விற்பனை? | Live updates

post image

பெட்ரோல், டீசல் விலை உயர்வு

சென்னையில் பெட்ரோல், டீசல் விலை இன்று உயர்ந்துள்ளது.

ஒரு லிட்டர் பெட்ரோல் 34 பைசா உயர்ந்து, ரூ.108.01-க்கு விற்பனை ஆகி வருகிறது. ஒரு லிட்டர் டீசல் விலை 23 பைசா உயர்ந்து ரூ.99.78-க்கு விற்பனை ஆகி வருகிறது.

CNG விலையும் ஏற்றம்!

இந்திய அரசு CNG (Compressed Natural Gas) விலையைஇவ ஏற்றியுள்ளது. இது மே 15-ம் தேதியில் இருந்து நான்காவது முறை ஏற்றம் ஆகும்.

இன்று CNG ஒரு கிலோவிற்கு ரூ.2 ஏற்றப்பட்டுள்ளது. இதனால், டெல்லியில் தற்போது CNG-யின் விலை கிலோவிற்கு ரூ.83.09 ஆகும்.

CNG
CNG

பெட்ரோல், டீசல் விலை உயர்வு, அரசியல் மாற்றங்கள் என இந்தியாவிலும், தமிழ்நாட்டிலும் களம் பரபரப்பாக உள்ளது. அந்த அத்தனை செய்திகளையும் இந்த Live Blog-ல் தொடர்ந்து நீங்கள் தெரிந்துகொள்ளலாம். Stay updated!

தவெக: "குதிரைபேர அரசியலை காங்கிரஸார் யார் நியாயப்படுத்தினாலும் அது தவறானது" - ஜோதிமணி கண்டனம்

அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களான மரகதம் குமரவேல், பெருந்துறை ஜெயக்குமார், சத்யபாமா ஆகியோர் தங்களது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெக-வில் நேற்று (மே.25) இணைந்தனர். இதனை அரசியல் தலைவர்கள், "தவெ... மேலும் பார்க்க

அதிமுக: `அம்பாசமுத்திரத்தின் செல்லப்பிள்ளை இசக்கி சுப்பையா' - ராஜினாமா செய்துவிட்டு தவெக தாவுகிறார்?

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் சட்டமன்ற தொகுதியில் அ.தி.மு.க சார்பாக எம்.எல்.ஏ-வாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர், இசக்கி சுப்பையா. அம்பாசமுத்திரம் தொகுதியின் செல்லப்பிள்ளை என வர்ணிக்கப்பட்ட இசக்கி சுப்பைய... மேலும் பார்க்க

பயிர்க்கடன் தள்ளுபடி: ``ஏர் பிடித்து உழுத விவசாயி என்ற முறையில் சொல்கிறேன்.!" - பழனிசாமி கண்டனம்

நேற்று தமிழ்நாடு முதல்வர் ஜோசப் விஜய் விவசாயிகளின் பயிர்க்கடன் தள்ளுபடி அறிவித்தார். அந்த அறிவிப்பு 'விஞ்ஞான ஏமாற்று வேலை' என்று சாடி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டுள்ளார். ... மேலும் பார்க்க

ஈரானிடம் இருந்து பெறப்படும் யுரேனியத்தை அமெரிக்கா என்ன செய்யும்? - ட்ரம்ப் 'நேரடி' பதில்!

ஈரான் மீதான அமெரிக்காவின் போர் விரைவில் முடிவுக்கு வரும் என்று பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது. நேற்று ஈரான் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதல் கூட, 'தற்காப்பு தாக்குதல்' என்றே கூறப்பட்டுள்ளது. அதனால், ... மேலும் பார்க்க