ஈரான் மீது அமெரிக்கா மீண்டும் தாக்குதல்; போர் நிறுத்தத்தின்போது இந்தத் தாக்குதல்...
ஜெயலலிதா வழங்கிய யானை அகிலாவின் 24வது பிறந்தநாள் விழா; விமர்சையாகக் கொண்டாடிய பக்தர்கள்!
திருச்சி, திருவானைக்காவலில் அமைந்துள்ள பஞ்சபூத ஸ்தலங்களில் நீர் ஸ்தலமான ஜம்புகேஸ்வரர் - அகிலாண்டேஸ்வரி கோயிலில் அகிலா என்கிற யானை கோயில் நிகழ்விற்காக ஈடுபட்டு வருகிறது.
கடந்த 2002 ஆம் வருடம் பிறந்த அகிலா யானையானது கடந்த 2011-ம் ஆண்டு முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் ஆட்சியின்போது கோயில் பூஜைகள் மற்றும் கோயில் ஆன்மிக பணிக்காக திருவானைக்காவல் கோயிலுக்குக் கொண்டு வரப்பட்டது.

அந்த யானை அகிலாவிற்கு 24 வயதை அடைந்ததையடுத்து, கோயில் சார்பில் யானைக்கு பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. அதனை முன்னிட்டு, கோயில் யானை அகிலா அலங்கரிக்கப்பட்டு அழைத்துவரப்பட்டது.
பின்னர், கோயில் வளாகத்தில் உள்ள நந்தவனத்தில் யானைக்கு பூஜைகள் நடத்தப்பட்டு கோயில் அதிகாரிகள், யானை பாகன்கள், அர்ச்சகர்கள், திருக்கோயில் பணியாளர்கள் மற்றும் பக்தர்கள் பலரும் பங்கேற்று யானை அகிலாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துப்பாடி பின்னர் பழங்கள், காய்கறிகள், கடலை மிட்டாய், கொழுக்கட்டை உள்ளிட்ட பல்வேறு பொருட்களை வழங்கி யானையை மகிழ்வித்தனர்.

இந்த நிகழ்வில், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் கலந்து கொண்டு யானைக்கு பழங்கள் வழங்கி பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார். அப்போது, அங்கு நின்றிருந்த குழந்தைகள் உள்ளிட்ட பலர் யானைக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தனர்.
யானை அகிலா அதற்கு தன் தும்பிக்கை தூக்கி தலையை அசைத்தது. அங்கிருந்தவர்கள் அதைக் கண்டு மகிழ்ந்தனர்.














