செய்திகள் :

ஈரான் மீது அமெரிக்கா மீண்டும் தாக்குதல்; போர் நிறுத்தத்தின்போது இந்தத் தாக்குதல் ஏன்?

post image

'ஈரானுடன் இறுதிக்கட்ட பேச்சுவார்த்தையை நெருங்கிவிட்டோம்' என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூற, இதற்கு ஈரானும் பாசிட்டிவ் சிக்னல் தந்தது.

இந்த நிலையில்தான், அமெரிக்கா நேற்று தெற்கு ஈரானில் தாக்குதலை நடத்தியுள்ளது. இந்தத் தாக்குதல் கண்ணிவெடிகளைப் பதிக்க முயன்ற படகுகள் மற்றும் ஏவுகணை ஏவுதளங்கள் மீது நடத்தப்பட்டுள்ளது.

இந்தத் தாக்குதல் குறித்து அமெரிக்காவின் மத்திய கட்டளைப் பிரிவின் செய்தித் தொடர்பாளர், கடற்படை கேப்டன் டிம் ஹாக்கின்ஸ் கூறுவதாவது...

டிம் ஹாக்கின்ஸ்
டிம் ஹாக்கின்ஸ்

''ஈரானியப் படைகளால் அமெரிக்க வீரர்களுக்கு ஏற்படும் அச்சுறுத்தல்களிலிருந்து அவர்களைப் பாதுகாக்கும் பொருட்டு, அமெரிக்கப் படைகள் இன்று தெற்கு ஈரானில் தற்காப்புத் தாக்குதல்களை நடத்தின.

ஏவுகணை ஏவுதளங்கள் மற்றும் கண்ணிவெடிகளைப் பதிக்க முயன்ற ஈரானியப் படகுகள் ஆகியவை இந்தத் தாக்குதலின் இலக்குகளாக இருந்தன.

தற்போது அமலில் இருக்கும் போர்நிறுத்தத்தின் போது, அமெரிக்க மத்திய கட்டளையகம் (US Central Command) மிகுந்த நிதானத்தைக் கடைப்பிடிக்கும் அதே வேளையில், நமது படைகளைப் பாதுகாக்கும் பணிகளையும் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது"

சென்னையில் இன்றும் பெட்ரோல், டீசல் விலை உயர்வு; எவ்வளவு ரூபாய்க்கு விற்பனை? | Live updates

பெட்ரோல், டீசல் விலை உயர்வுசென்னையில் பெட்ரோல், டீசல் விலை இன்று உயர்ந்துள்ளது. ஒரு லிட்டர் பெட்ரோல் 34 பைசா உயர்ந்து, ரூ.108.01-க்கு விற்பனை ஆகி வருகிறது. ஒரு லிட்டர் டீசல் விலை 23 பைசா உயர்ந்து ரூ.9... மேலும் பார்க்க

"தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரே மாதத்தில்..." - மக்கள் நம்பிக்கையை தகர்த்தார்களாக ராஜினாமா எம்எல்‌ஏ-க்கள்?

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான நாளில் இருந்து இன்றுவரை இந்திய அளவில் உற்றுநோக்கும் அளவிற்கு தமிழ்நாடு அரசியல் களம் பரபரப்பாக காணப்படுகிறது. நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக அரசி... மேலும் பார்க்க

`இனி வேடிக்கை பார்த்துக்கொண்டு சும்மா இருக்காது திமுக; ஆயுள் தண்டனை வரை..'- ஆர்.எஸ்.பாரதி எச்சரிக்கை

தமிழ்நாட்டில் புதிய ஆட்சி அமைந்து ஏறத்தாழ மூன்று வாரங்கள் ஆகும் நிலையில், மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாக திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி குற்றம் சாட்டியுள்ளார். இன்று சென்னையில்... மேலும் பார்க்க

எம்‌.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்த தாராபுரம் சத்யபாமா, பெருந்துறை ஜெயக்குமார்! - பின்னணி என்ன?

ஈரோடு மாவட்டம், பெருந்துறை சட்டமன்றத் தொகுதியில் அ.தி.மு.க தரப்பில் போட்டியிட்டு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் ஜெயக்குமார். அதேபோல் திருப்பூர் மாவட்டம், தாராபுரம் சட்டமன்றத் தொகுதியில் அ.தி.மு.க வேட... மேலும் பார்க்க

`அதற்கு நான் பதில் சொல்ல முடியாது; பேரவைத் தலைவர் என்ற முறையில்...' - சபாநாயகர் சொல்வது என்ன?

அ.தி.மு.க-வுக்குள் த.வெ.க-வுக்கு ஆதரவளிப்பது தொடர்பான கருத்து வேறுபாட்டால் கட்சி, எடப்பாடி பழனிசாமி அணி மற்றும் சி.வி.சண்முகம் அணி என இரண்டாகப் பிரிந்தது. இந்த அரசியல் மோதல்களுக்கு இடையே, சி.வி.சண்முக... மேலும் பார்க்க

`புதிய கரகாட்ட கோஷ்டி; ஆட்சியை காப்பாற்ற தகிடுதத்தம் அரசியல், வெட்கக்கேடு'- விஜய்க்கு இபிஎஸ் கண்டனம்

அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களான மரகதம் குமரவேல், பெருந்துறை ஜெயக்குமார், சத்யபாமா ஆகியோர் தங்களது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெக-வில் இணைந்துள்ளனர். இந்நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்ப... மேலும் பார்க்க