செய்திகள் :

"தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரே மாதத்தில்..." - மக்கள் நம்பிக்கையை தகர்த்தார்களாக ராஜினாமா எம்எல்‌ஏ-க்கள்?

post image

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான நாளில் இருந்து இன்றுவரை இந்திய அளவில் உற்றுநோக்கும் அளவிற்கு தமிழ்நாடு அரசியல் களம் பரபரப்பாக காணப்படுகிறது.

நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக அரசியல் கட்சிகளின் செயல்பாடுகள் மாறி வரும் சூழலில், எஸ்.பி‌‌. வேலுமணி அணியில் இடம்பெற்றிருந்த ஈரோடு மாவட்டம் பெருந்துறை (அதிமுக) எம்.எல்.ஏ ஜெயக்குமார், திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தொகுதி ( அதிமுக) எம்.எல்.ஏ சத்யபாமா உட்பட 3 எம்.எல்.ஏ- க்கள் தங்களின் சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துள்ளனர்.

த.வெ.க- வில் இணைந்துள்ள இவர்கள் மீண்டும் அதே தொகுதிகளில் த.வெ.க வேட்பாளர்களாக களம் காண இருக்கிறார்கள் என்கிற தகவல்கள் வெளியாகின்றன.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு முழுமையாக ஒரு மாதம் கூட நிறைவடையாத நிலையில், எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்திருப்பது பல்வேறு கேள்விகளை எழுப்பியிருக்கிறது.

சத்யபாமா

தாராபுரம் மற்றும் பெருந்துறை தொகுதியைச் சேர்ந்த வாக்காளர்கள் சிலரிடம் பேசினோம், "வேட்பாளர் மீதான நம்பிக்கை மற்றும் இரட்டை இலை சின்னத்திற்கு மதிப்பளித்து வாக்களித்து வெற்றிபெறச் செய்தோம். ஆனால், எங்களின் நம்பிக்கைகளைத் தகர்க்கும் விதமாக ராஜினாமா செய்திருக்கிறார்கள்.

முதல்வர் விஜய்யின் கட்சியில் சேர்ந்திருக்கிறார்கள். இந்த முடிவை எடுத்திருப்பதாகக் குறைந்தபட்சம் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொகுதி மக்களிடம் முறையான அறிக்கை கூட வெளியிடவில்லை.

எங்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரே மாதத்தில் இப்படி செய்திருக்கிறார்கள். இடைத்தேர்தல் என்கிற பெயரில் என்னனென்ன செய்யப்போகிறார்கள் என்பதை பார்க்கத்தான் போகிறோம். இதில் ஜனநாயகம் எங்கே இருக்கிறது" எனக் கொந்தளித்தனர்.

ஈரானிடம் இருந்து பெறப்படும் யுரேனியத்தை அமெரிக்கா என்ன செய்யும்? - ட்ரம்ப் 'நேரடி' பதில்!

ஈரான் மீதான அமெரிக்காவின் போர் விரைவில் முடிவுக்கு வரும் என்று பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது. நேற்று ஈரான் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதல் கூட, 'தற்காப்பு தாக்குதல்' என்றே கூறப்பட்டுள்ளது. அதனால், ... மேலும் பார்க்க

சென்னையில் இன்றும் பெட்ரோல், டீசல் விலை உயர்வு; எவ்வளவு ரூபாய்க்கு விற்பனை? | Live updates

பெட்ரோல், டீசல் விலை உயர்வுசென்னையில் பெட்ரோல், டீசல் விலை இன்று உயர்ந்துள்ளது. ஒரு லிட்டர் பெட்ரோல் 34 பைசா உயர்ந்து, ரூ.108.01-க்கு விற்பனை ஆகி வருகிறது. ஒரு லிட்டர் டீசல் விலை 23 பைசா உயர்ந்து ரூ.9... மேலும் பார்க்க

ஈரான் மீது அமெரிக்கா மீண்டும் தாக்குதல்; போர் நிறுத்தத்தின்போது இந்தத் தாக்குதல் ஏன்?

'ஈரானுடன் இறுதிக்கட்ட பேச்சுவார்த்தையை நெருங்கிவிட்டோம்' என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூற, இதற்கு ஈரானும் பாசிட்டிவ் சிக்னல் தந்தது. இந்த நிலையில்தான், அமெரிக்கா நேற்று தெற்கு ஈரானில் தாக்குதலை நடத்த... மேலும் பார்க்க

`இனி வேடிக்கை பார்த்துக்கொண்டு சும்மா இருக்காது திமுக; ஆயுள் தண்டனை வரை..'- ஆர்.எஸ்.பாரதி எச்சரிக்கை

தமிழ்நாட்டில் புதிய ஆட்சி அமைந்து ஏறத்தாழ மூன்று வாரங்கள் ஆகும் நிலையில், மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாக திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி குற்றம் சாட்டியுள்ளார். இன்று சென்னையில்... மேலும் பார்க்க

எம்‌.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்த தாராபுரம் சத்யபாமா, பெருந்துறை ஜெயக்குமார்! - பின்னணி என்ன?

ஈரோடு மாவட்டம், பெருந்துறை சட்டமன்றத் தொகுதியில் அ.தி.மு.க தரப்பில் போட்டியிட்டு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் ஜெயக்குமார். அதேபோல் திருப்பூர் மாவட்டம், தாராபுரம் சட்டமன்றத் தொகுதியில் அ.தி.மு.க வேட... மேலும் பார்க்க

`அதற்கு நான் பதில் சொல்ல முடியாது; பேரவைத் தலைவர் என்ற முறையில்...' - சபாநாயகர் சொல்வது என்ன?

அ.தி.மு.க-வுக்குள் த.வெ.க-வுக்கு ஆதரவளிப்பது தொடர்பான கருத்து வேறுபாட்டால் கட்சி, எடப்பாடி பழனிசாமி அணி மற்றும் சி.வி.சண்முகம் அணி என இரண்டாகப் பிரிந்தது. இந்த அரசியல் மோதல்களுக்கு இடையே, சி.வி.சண்முக... மேலும் பார்க்க