சோத்துப்பாறை:அரசாணை வராமல் திறக்கப்பட்ட பாசன நீர்; ரீல்ஸ் போட்டு அத்துமீறிய தவெக...
சென்னையில் இருந்து எவ்வளவு தூரத்தில் இருக்கிறது அக்வான் புயல்? IMD அப்டேட்!
தற்போது அக்வான் புயல் எங்கு மையம் கொண்டுள்ளது என்ற அப்டேட்டைத் தற்போது வழங்கியுள்ளது இந்திய வானிலை மையம்.
"தெற்கு வங்கக்கடலின் மத்தியப் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலைகொண்டுள்ள ‘அக்வான்’ தீவிரப் புயல், கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 7 கிலோமீட்டர் வேகத்தில் வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்துள்ளது.
இது இன்று (நவம்பர் 18, 2026) காலை 8.30 மணியளவில் அதே பகுதியில் மையம் கொண்டுள்ளது. தற்போதைய நிலவரப்படி, இந்தப் புயல்
The Severe Cyclonic Storm “Akvan” [Pronunciation: Akvan] over central parts of South and adjoining Westcentral Bay of Bengal moved north-northwestwards with the speed of 07 kmph during past 06 hours and lay centered at 0830 hours IST of today, the 18th November, 2026 over the same region, near Latitude 12.9°N and Longitude 85.4°E, about 570 km east of Chennai (Tamil Nadu), 580 km south-southeast of Visakhapatnam (Andhra Pradesh), 590 km southeast of Machilipatnam (Andhra Pradesh), 660 km northeast of Trincomalee (Sri Lanka), 710 km south of Gopalpur (Odisha) and 770 km south of Puri (Odisha). Continuing to move north-northwestward, it is likely to cross North Andhra Pradesh & Yanam and South Odisha coasts between Narsapur and Puri, by noon of 20th November, 2026 as a severe cyclonic storm with the maximum sustained wind speed of 90-100 kmph gusting to 110 kmph.
— India Meteorological Department (@Indiametdept) November 18, 2026
சென்னைக்குக் கிழக்கே சுமார் 570 கி.மீ தொலைவிலும், விசாகப்பட்டினத்திற்குத் தெற்கு-தென்கிழக்கே 580 கி.மீ தொலைவிலும், மசூலிப்பட்டினத்திற்குத் தென்கிழக்கே 590 கி.மீ தொலைவிலும் நிலைகொண்டுள்ளது.
மேலும், இலங்கையின் திருகோணமலைக்கு வடகிழக்கே 660 கி.மீ தொலைவிலும், ஒடிசாவின் கோபால்பூருக்குத் தெற்கே 710 கி.மீ தொலைவிலும், பூரிக்குத் தெற்கே 770 கி.மீ தொலைவிலும் இது அமைந்துள்ளது.
இது தொடர்ந்து வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, நவம்பர் 20-ம் தேதி நண்பகல் வாக்கில் தீவிரப் புயலாகவே கரையைக் கடக்க வாய்ப்புள்ளது.
வடக்கு ஆந்திரா, ஏனாம் மற்றும் தெற்கு ஒடிசா கடற்கரைப் பகுதிகளில், நர்சாபூர் மற்றும் பூரி இடையே இந்தப் புயல் கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அப்போது மணிக்கு 90 முதல் 100 கிலோமீட்டர் வேகத்திலும், இடையிடையே 110 கிலோமீட்டர் வேகத்திலும் பலத்த சூறாவளிக் காற்று வீசக்கூடும்.

















