செய்திகள் :

சென்னையில் போராடிய மாணவர்கள் கைது: "ஆளுங்கட்சியின் இரட்டை வேடத்தைக் காட்டுகிறது" - உதயநிதி கண்டனம்

post image

நீட் தேர்வு முறைகேடுகள் மற்றும் வினாத்தாள் கசிவு விவகாரங்களுக்குப் பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் தொடர்ந்து போராட்டம் நடத்தி வந்தனர்.

இதனிடையே நேற்று நாடாளுமன்றத்தை நோக்கி பேரணியாகச் செல்ல முயற்சி செய்த கரப்பான்பூச்சி கட்சியினரை போலீசார் தடியடி நடத்தி விரட்டி அடித்தனர். அவர்கள் மீது காவல்துறையினர் கண்ணீர்ப் புகைக் குண்டுகளை வீசி கடுமையாகத் தாக்கினர்.

டெல்லி போராட்டம்
டெல்லி போராட்டம்

இதனால், இளைஞர்களின் போராட்டம் நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தி இருக்கிறது. டெல்லி ஜந்தர் மந்தரில் நடந்து வரும் கரப்பான்பூச்சி கட்சியின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து, தமிழகத்திலும் இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதற்கு அனுமதி மறுத்த போலீசார் போராட்டம் நடத்தியவர்களை குண்டு கட்டாகக் கைது செய்தனர். இந்நிலையில் இந்தக் கைதுக்கு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கண்டனம் தெரிவித்திருக்கிறார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், "சென்னை எழும்பூர் மற்றும் மதுரை தமுக்கம் பகுதிகளில் NEET தேர்வுக்கு எதிராகப் போராடிய SFI மற்றும் DYFI அமைப்பினரை காவல்துறை மூலம் வலுக்கட்டாயமாகக் கைது செய்யும் Sofa Model அரசை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

முதல்வர் விஜய் - பிரதமர் மோடி
முதல்வர் விஜய் - பிரதமர் மோடி

CJP முன்னெடுப்பில் டெல்லியில் போராடும் இளைஞர்களுக்கு ஆதரவாக, தமிழ்நாட்டில் போராடுவோரைக் கைது செய்வது என்பது, NEET விஷயத்தில் ஆளுங்கட்சியின் இரட்டை வேடத்தையே காட்டுகிறது.

ஒன்றிய பாஜக அரசுக்கு எதிரான போராட்டத்தைத் தனக்கெதிரான போராட்டமாக கருதி முடக்கும் இந்த அடக்குமுறையை, Sofa Model அரசு உடனே நிறுத்திக் கொள்ள வேண்டும். கைது செய்யப்பட்டவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும்" என்று பதிவிட்டிருக்கிறார்.

Indian Post: 25,000 முதல் 75,000 வரை பரிசு; இந்திய அஞ்சல் துறைக்குப் புதிய அடையாளம் தேடும் போட்டி!

இந்தியாவின் மூலை முடுக்குகள் வரை மக்களை இணைக்கும் அஞ்சல் துறைக்கு, இப்போது ஒரு புதிய அடையாளம் தேடும் முயற்சி தொடங்கியுள்ளது. மத்திய தகவல்தொடர்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் இந்திய அஞ்சல் துறை, தனது ... மேலும் பார்க்க

’ராகுல் காந்தி கைது ஜனநாயகத்தின் மீதான கொடூர தாக்குதல்!’ – காங்கிரஸ் கண்டனம்

நீட் தேர்வு குளறுபடிகள் விவகாரத்தில் மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக கோரி, டெல்லியில் பிரதமர் வீடு அருகே போராட்டம் நடத்திய எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கைது செய்யப்பட்... மேலும் பார்க்க

டெல்லி மாணவர்கள் போராட்டம்: "நீட் தேர்வை ரத்து செய்வதன் மூலமே நிரந்தரத் தீர்வு கிடைக்கும்"- ஸ்டாலின்

நீட் தேர்வு முறைகேடுகள் மற்றும் வினாத்தாள் கசிவு விவகாரங்களுக்குப் பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி போராடும் கரப்பான் பூச்சி கட்சியின் இள... மேலும் பார்க்க

டெல்லி போராட்டம்: "தலைநகரில் ஜனநாயகம் நசுக்கப்படுவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது" - ஆதவ் அர்ஜுனா

நீட் தேர்வு முறைகேடுகள் மற்றும் வினாத்தாள் கசிவு விவகாரங்களுக்குப் பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் தொடர்... மேலும் பார்க்க

டெல்லி மாணவர்கள் போராட்டம்: "பாதுகாக்க வேண்டியர்களைப் பார்த்தே அஞ்ச வேண்டிய நிலை" - பும்ரா மனைவி கண்டனம்|live Updates

நீட் தேர்வு முறைகேடுகள் மற்றும் வினாத்தாள் கசிவு விவகாரங்களுக்குப் பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் தொடர்... மேலும் பார்க்க

கோரிப்பாளையம்: ஆறாக ஓடும் கழிவுநீர்; சுகாதார சீர்கேட்டில் சிக்கித் தவிக்கும் பொதுமக்கள்| Photo Album

கோரிப்பாளையத்தில் ஆறாக ஓடும் கழிவுநீர்கோரிப்பாளையத்தில் ஆறாக ஓடும் கழிவுநீர்கோரிப்பாளையத்தில் ஆறாக ஓடும் கழிவுநீர்கோரிப்பாளையத்தில் ஆறாக ஓடும் கழிவுநீர்கோரிப்பாளையத்தில் ஆறாக ஓடும் கழிவுநீர்கோரிப்பாளை... மேலும் பார்க்க