செய்திகள் :

சென்னை: இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை - விலை உயர்ந்த பைக்கால் சிக்கிய இளைஞர்கள்

post image

சென்னை, வேளச்சேரி பகுதியில் வசித்து வரும் 32 வயதுடைய இளம்பெண் ஒருவர் தனியார் வணிக வளாகத்தில் வேலை செய்து வருகிறார். இவர் கடந்த 25.04.2026-ம் தேதி இரவு, வேலை முடந்து வீட்டிற்கு செல்ல வேளச்சேரி, நேரு நகர், திரு.வி.க. தெருவில் தனியாக நடந்துச் சென்றார். அப்போது இளம்பெண்ணை பின்தொடர்ந்து பைக்கில் வந்த இரண்டு நபர்கள், திடீரென அவருக்கு பாலியல் தொல்லைக் கொடுத்தனர். அதனால் அதிர்ச்சியடைந்த இளம்பெண், கூச்சலிட்டார். உடனே பைக்கில் வந்த இருவரும் அங்கிருந்து தப்பிச் சென்றனர். இந்தச் சம்பவம் குறித்து இளம்பெண், வேளச்சேரி காவல் நிலையத்தில் புகாரளித்தார். அதன்பேரில், போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

சிவதாஸ்

தொடர்ந்து சம்பவ இடத்திலிருந்த சி.சி.டி.வி கேமரா பதிவுகளை போலீஸார் ஆய்வு செய்தனர். அப்போது பாலியல் தொல்லைக் கொடுத்த இளைஞர்களின் பதிவு நம்பர் கிடைத்தது. அதன்அடிப்படையில் விசாரித்தபோது பாலியல் தொல்லைக் கொடுத்தது வேளச்சேரியைச் சேர்ந்த உதயகுமார் (30), அவரின் நண்பர் சிவதாஸ் எனத் தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் போலீஸார் கைது செய்தனர். குற்றச் செயலுக்குப் பயன்படுத்திய விலை உயர்ந்த பைக்கையும் போலீஸார் பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீஸார் அவர்களை சிறையில் அடைத்தனர்.

புதுச்சேரி: சாக்லேட் ஆசை காட்டி 9 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை; தீர்ப்பும் வழக்கின் பின்னணியும்

வழக்கின் பின்னணிபுதுச்சேரி, முத்தியால்பேட்டையைச் சேர்ந்த ஒன்பது வயது சிறுமி, கடந்த 2024 மார்ச் மாதம் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தபோது மாயமானார். அது தொடர்பாக போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை ... மேலும் பார்க்க

தெருநாய்களைப் பிடித்துச்சென்று ரத்தத்தை உறிஞ்சி விற்பனை; கால்நடை மருத்துவர் மீது பகீர் புகார்

பொதுமக்கள் நாய்கள் உட்பட வளர்ப்புப் பிராணிகள் மீது அதிக அன்பு மற்றும் பாசம் வைத்திருப்பார்கள். வளர்ப்புப் பிராணிகள் உடல் நலம் பாதிக்கப்பட்டாலோ அல்லது இறந்துவிட்டாலோ அதன் உரிமையாளர்கள் பெரிய அளவில் மனவ... மேலும் பார்க்க

பிஞ்சு உயிரைக் கொன்ற வன்கொடுமை: `மறைக்க முயன்ற அதிகாரிகள்; தூங்கும் காவல்துறை' - பியூஷ் மனுஷ்

கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி காவல் நிலையத்துக்குட்பட்ட பகுதியில் கடந்த டிசம்பர் 11, 2026 அன்று இரண்டரை வயது பட்டியலினக் குழந்தை பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு கொடூரமாகக் கொலை செய்யப்பட்டார். இந்தச்... மேலும் பார்க்க

Meghalaya Honeymoon Murder: கணவனைக் கொன்ற மனைவிக்கு ஜாமீன்; 11 மாதங்களுக்குப் பிறகு வெளியே வருகிறார்

கடந்த ஆண்டு மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரைச் சேர்ந்த சோனம் ரகுவன்சி என்ற பெண் திருமணமானவுடன் தனது கணவர் ராஜா ரகுவன்சியுடன் மேகாலயாவிற்கு தேனிலவு சென்றார். அவர்கள் மே 11ம்தேதி திருமணம் செய்த பிறகு 20ம... மேலும் பார்க்க

நங்கநல்லூர்: கதவில் ரத்தக்கறை; கொடூரமாக கொல்லப்பட்ட பெண் தொழிலதிபர் - தூக்கில் தொங்கிய கணவர்!

சென்னை நங்கநல்லூர், தில்லை கங்கா நகர் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தவர் நாகலட்சுமி (42). இவரின் கணவர் சுப்பிரமணியன். இந்தத் தம்பதியினருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். நாகலட்சுமி, ... மேலும் பார்க்க

சிறையில் இருந்தபடி, குடும்பத்தினரைக் கஞ்சா விற்பனையில் ஈடுபடுத்திய `குண்டாஸ்’ கைதி - மனைவியும் கைது

வேலூர் மாவட்டம், குடியாத்தம் கள்ளூர் நேரு நகரைச் சேர்ந்தவர் சம்சுதீன். இவரின் மகன்கள் முபாரக் (வயது 30), அமீர் உசேன் (23). இவர்கள் இருவரும் ஆந்திராவில் இருந்து கஞ்சா கடத்தி வந்து விற்பனைச் செய்த வழக்க... மேலும் பார்க்க