செய்திகள் :

சென்னை: காதல் மனைவியைக் கொலைசெய்த கணவன்; போதையில் வெறிச்செயல்!

post image

சென்னை கொளத்தூர், அன்னை சத்யா நகரைச் சேர்ந்தவர் சரண்ராஜ். கூலித் தொழிலாளி. இவர் சில ஆண்டுகளுக்கு முன்பு கொளத்தூரில் உள்ள மாவு மில்லில் வேலைப் பார்த்தபோது அங்கு வேலை செய்த முத்துமாரியம்மாளை (38) காதலித்து திருமணம் செய்து கொண்டார். முத்துமாரியம்மாளுக்கு ஏற்கெனவே திருமணமாகி மூன்று குழந்தைகள் உள்ளனர். அவர்கள், முத்துமாரியம்மாளின் முதல் கணவரின் வீட்டில் இருக்கிறார்கள். சரண்ராஜும், முத்துமாரியம்மாளும் கொளத்தூரில் வசித்து வந்த நிலையில் சரண்ராஜ், மதுவுக்கு அடிமையாகி சரிவர வேலைக்குச் செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்திருக்கிறார். அதன் காரணமாக கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்திருக்கிறது.

முத்துமாரியம்மாள்

இந்த நிலையில் நேற்று இரவும் (ஆகஸ்ட் 31-ம் தேதி) மது அருந்திவிட்டு சரண்ராஜ் வீட்டுக்கு வந்திருக்கிறார். அப்போது கணவன் மனைவிக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. இதில் ஆத்திரமடைந்த சரண்ராஜ், சமையலறையில் காய்கறிகளை வெட்டும் கத்தியை எடுத்து மனைவி முத்துமாரியம்மாளை குத்தியிருக்கிறார். இதில் ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்த முத்துமாரியம்மாள், மயங்கி விழுந்தார். அதனால் பதறிப் போன சரண்ராஜ், 108 ஆம்புலன்ஸுக்குத் தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்துக்கு வந்த ஆம்புலன்ஸ் ஊழியர்கள், முத்துமாரியம்மாளை பரிசோதித்தபோது அவர் உயிரிழந்தது தெரியவந்தது.

saranraj

இதையடுத்து முத்துமாரியம்மாளின் உடலில் கத்திக் குத்து காயங்கள் இருந்ததால், கொளத்தூர் காவல் நிலையத்துக்குத் தகவல் தெரிவித்த ஆம்புலன்ஸ் ஊழியர்கள் அங்கிருந்து சென்றுவிட்டனர். சம்பவ இடத்துக்கு வந்த கொளத்தூர் போலீஸார், முத்துமாரியம்மாளின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் முத்துமாரியம்மாள் எப்படி இறந்தார் என்று சரண்ராஜிடம் போலீஸார் விசாரித்தபோது கீழே விழுந்ததில் காயம் ஏற்பட்டு இறந்து விட்டதாக போதையில் உளறியிருக்கிறார். போதை தெளிந்த பிறகு அவரிடம் மீண்டும் விசாரித்தபோதுதான் கொலை செய்ததை ஒப்புக் கொண்டிருக்கிறார். அதைத் தொடர்ந்து சரண்ராஜை போலீஸார் கைதுசெய்து விசாரித்து வருகிறார்கள்.

இரவு பார்ட்டிக்கு எதிர்ப்பு, கேமரா மூலம் கண்காணிப்பு: ஆத்திரத்தில் மாமனாரை ஆள்வைத்து கொன்ற மருமகள்!

உத்தரப்பிரதேச மாநிலம், கான்பூரைச் சேர்ந்தவர் வினீத் மினோச்சா (63). தொழிலதிபரான இவரின் மருமகள் பெயர், ஷாலு. சம்பவத்தன்று வினீத் அவரது வீட்டில் 26 முறை கத்தியால் குத்திக் கொலைசெய்யப்பட்டார். இது தொடர்பா... மேலும் பார்க்க

நெல்லை: மது பாட்டிலுக்கு ஆசைப்பட்டு கார் கடத்திய இளைஞர்கள் - போதை தெளிந்ததும் சிறை சென்ற சோகம்!

நெல்லை டவுன், கல்லத்தி முடுக்கு தெருவைச் சேர்ந்தவர், சூர்ய சரவணன். பட்டப் படிப்பை முடித்த இவர், வேலை தேடிவருகிறார். தன் தந்தை குமரகுரு ராமலிங்கத்தின் காரை, சூர்ய சரவணன் பயன்படுத்தி வந்தார்.வீட்டுக்குள... மேலும் பார்க்க

`Will Kill Sugar Daddy Soon' - மனைவியைக் கொன்று தலையை ஃபிரிட்ஜில் வைத்த இளைஞர் `பகீர்' தகவல்!

அஸ்ஸாம் மாநிலம், கவுகாத்தியில் உள்ள அடுக்கு மாடிக் குடியிருப்பில் ஒரு வீட்டிலிருந்து வந்த துர்நாற்றத்தைத் தொடர்ந்து, பக்கத்து வீட்டுக்காரர்கள் இது குறித்து போலீஸாருக்குத் தகவல் கொடுத்தனர். போலீஸார் வி... மேலும் பார்க்க

குழந்தை திருமணங்களால் மூன்று சிறுமிகள் கர்ப்பம்! – போக்சோ வழக்கில் இளைஞர்களை தேடும் கடலூர் போலீஸ்

கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடி அருகே இருக்கும் ஒரு கிராமத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமி, செவிலியர் கல்லூரியில் படித்து வருகிறார். சில தினங்களுக்கு முன்பு உடல்நிலை சரியில்லை என்று மருத்துவமனைக்குச் சென்... மேலும் பார்க்க

மும்பை விமான நிலையத்தில் பயணிகள் பேக்கில் தொடரும் பணம், நகை திருட்டு! குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை

மும்பை விமான நிலையத்தில் பயணிகளின் பேக்கில் இருந்து அடிக்கடி திருட்டு நடக்கிறது. சமீபத்தில் மும்பையில் இருந்து நியூயார்க் சென்ற மாணவர் ஒருவரின் பேக்கில் இருந்து 5 ஆயிரம் அமெரிக்க டாலர் திருட்டு போனது.... மேலும் பார்க்க

வீட்டிக்கு வெளியில் மது அருந்தியதை தட்டிக்கேட்ட மணிப்பூர் பாடகர் - அடித்து கொன்ற ஹோட்டல் ஊழியர்கள்

மணிப்பூரை சேர்ந்த பாடகர் விக்ரம் சிங் என்பவர் டெல்லி அருகில் உள்ள கிலோகரி என்ற கிராமத்தில் பல ஆண்டுகளாக வசித்து வந்தார். அவரது வீட்டிற்கு அருகில் ஒரு ஹோட்டல் இருக்கிறது. அங்குள்ள விக்ரம் சிங் வீட்டிற்... மேலும் பார்க்க