செய்திகள் :

சென்னை: பார்சலுக்குள் மண்டை ஓடு, எலும்புகள், விபூதி; அதிர்ச்சியடைந்த ஊழியர்கள்; களமிறங்கிய போலீஸ்

post image

சென்னை பாரிமுனை அரண்மனைக்காரன் தெருவில் உள்ள கடைக்கு 20-ம் தேதி ஹெல்மெட் அணிந்து வந்த இளைஞர் ஒருவர், பார்சல் ஒன்றை வாட்ச்மேன் கிருஷ்ணா லால் என்பவரிடம் கொடுத்து, "இது உங்கள் கடையில் வேலை செய்யும் ஸ்ருதி என்பவருக்கு வந்த பார்சல். அவரிடம் கொடுத்துவிடுங்கள்" என்று கூறிவிட்டு சென்றிருக்கிறார்.

பார்சலை வாங்கிய வாட்ச்மேன், கடையில் அக்கவுண்ட்டாக வேலை செய்யும் ஸ்ருதிக்குத் தகவல் தெரிவித்திருக்கிறார். உடனே ஸ்ருதி, "இது எனக்கு வந்த பார்சல் இல்லை" எனக் கூறியிருக்கிறார்.

இதையடுத்து கடையின் உரிமையாளர் ஜித்தேந்தருக்கு வாட்ச்மேன் கிருஷ்ணலால் விவரத்தைக் கூறியிருக்கிறார். அதன்பிறகு கடையில் உள்ள ஊழியர்கள் அந்தப் பார்சலைத் திறந்து பார்த்திருக்கிறார்கள்.

அதில், மனித மண்டை ஓடு, 3 மனித எலும்புகள், விபூதி ஆகியவை இருந்தன. அதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த ஊழியர்கள் யானைகவுனி காவல் நிலையத்துக்குத் தகவல் தெரிவித்தனர்.

 மனித மண்டை ஓடு
மனித மண்டை ஓடு

உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார் பார்சலைக் கைப்பற்றி காவல் நிலையத்துக்கு எடுத்துச் சென்று ஸ்ருதியிடம் விசாரித்தனர். அப்போது அவர், தன்னுடைய கணவர் தினேஷ்குமார், மெடிக்கல் சர்ஜிக்கல் ரெப்ரன்சிட்டிவ்வாக வேலை செய்து வருகிறார். ஆனால் இந்தப் பார்சலுக்கும் தனக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை எனக் கூறியிருக்கிறார்.

அதைத் தொடர்ந்து பார்சலைக் கொண்டு வந்த இளைஞர் குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர். அந்தப் பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை போலீஸார் ஆய்வு செய்தபோது பைக்கில் வந்த இளைஞர், கடையிலிருந்து 50 மீட்டர் தூரத்திலேயே பைக்கை நிறுத்திவிட்டு முகம் தெரியாத வகையில் ஹெல்மெட் அணிந்து வந்திருக்கிறார். பைக்கின் பதிவு நம்பரைக் கொண்டு போலீஸார் விசாரித்து வருகிறார்.

பார்சல் கொண்டு வந்த இளைஞர் பிடிபட்டால் மட்டுமே முழு விவரம் தெரியவரும் என போலீஸார் தெரிவித்தனர்.

சென்னை: தனியாக வசித்த முதியவர் கொலை; துணிக்கடை ஊழியரிடம் விசாரணை; என்ன நடந்தது?

சென்னை புரசைவாக்கம், அரசப்பா தெருவில் வசித்து வந்தவர் பாலகிருஷ்ணன் (61). இவர், அண்ணாநகரில் உள்ள துணிக்கடையில் வேலை செய்து வந்தார். இவரின் மனைவி உஷா. 2024-ம் ஆண்டு உடல்நலம் சரியில்லாமல் உஷா இறந்துவிட்ட... மேலும் பார்க்க

பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பா? திருப்பூரில் சிக்கிய 6 வங்கதேசத்தினர்; பின்னணி என்ன?

நாடு முழுவதும் பாதுகாப்பு நடவடிக்கை காரணமாக பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்புடையவர்கள் குறித்த மத்திய உளவுப் பிரிவு போலீஸார் மற்றும் அந்தந்த மாநில உளவுப் பிரிவு போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்... மேலும் பார்க்க

மும்பை: குடும்பத்தோடு ஒரு மாதம் டிஜிட்டல் கைது; முதியவர் ரூ.1.83 கோடியைப் பறிகொடுத்தது எப்படி?

மும்பையில் டிஜிட்டல் முறையில் கைது செய்யப்பட்டு பணம் மோசடி செய்யப்படுவது அதிகரித்து வருகிறது. மும்பை மட்டுமல்லாது நாடு முழுவதும் இந்த மோசடிகள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன.இந்த மோசடியை மத்திய விசாரணை... மேலும் பார்க்க

வேடசந்தூர் திமுக ஒன்றியச் செயலாளர் வீராசாமிநாதனுக்கு கத்திக்குத்து; என்ன நடந்தது?

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் திமுக ஒன்றியச் செயலாளராக இருப்பவர் வீராசாமிநாதன். இவர் வேடசந்தூர் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடுவதற்கான வேலைகளில் ஈடுபட்டு வருகிறார்.இதற்காக தொகுதியில் உள்ள ஒவ்வொ... மேலும் பார்க்க

பகலில் சலூன் கடை ஓனர்; இரவில் போதைப்பொருள் கேங்க் லீடர்! - பிஷ்னோய் கேங்கின் லேடி டான் நேகா

குஜராத் சிறையில் இருக்கும் லாரன்ஸ் பிஷ்னோய், சிறையில் இருந்து கொண்டே டெல்லியில் இருக்கும் தனது கூட்டத்தை இயக்கி வருகிறான். பஞ்சாப், டெல்லி, ஹரியானாவில் அவனது கூட்டத்தினர் ஏராளமானோர் இருக்கின்றனர். அவர... மேலும் பார்க்க

Kerala: குறைந்த விலையில் லேப்டாப் வழங்குவதாக மோசடி? நடிகர் ஜெயசூர்யா சொத்து முடக்கம்; நடந்தது என்ன?

கேரள மாநிலம் திருச்சூரில் 2019-ம் ஆண்டு சேவ் பாக்ஸ் கான்ஸ்செப்ட் லிமிடெட் என்ற நிறுவனம் தொடங்கப்பட்டது. ஸ்வாதிக் ரஹீம் என்பவர் அந்த நிறுவனத்தை நடத்திவந்தார்.சேவ் பாக்ஸ் நிறுவனத்துக்கு பணம் செலுத்தினால... மேலும் பார்க்க