செய்திகள் :

பிரதமர் மோடி - ராகுல் உருவ பொம்மைகள் எரிப்பு; கல்வீச்சு, செருப்பு வீச்சால் போர்க்களமான புதுச்சேரி

post image

டெல்லியில் சர்வதேச ஏ.ஐ. மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் ஐ.டி நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள் ஸ்டால்களை அமைத்து அதில் தங்களது தயாரிப்புகளை கண்காட்சிக்கு வைத்துள்ளன. அதில் கிரேட்டர் நொய்டாவைச் சேர்ந்த கால்கோட்டியாஸ் பல்கலைக்கழகமும் ஒரு ஸ்டால் அமைத்து, தங்கள் தயாரிப்பு எனக் கூறி சிலவற்றை காட்சிக்கு வைத்திருந்தது.

இதில் ரோபோ நாய் ஒன்றும் இருந்தது. இது குறித்து பல்கலைக்கழகத்தின் தகவல் தொடர்புத் துறை பேராசிரியர் நேஹா சிங் தூர்தர்சனுக்கு அளித்த பேட்டியில், `ஓரியன் என்று பெயரிடப்பட்ட அந்த ரோபோ நாய் பல்கலைக்கழகத்தின் சிறப்பு மையத்தால் (Centre of Excellence) உருவாக்கப்பட்டது.

இந்த ரோபோ மிகவும் குறும்புத்தனம் மிக்கது' என்றார். அந்தப் பேட்டி வைரலான நிலையில், அது தங்கள் நாட்டின் தயாரிப்பு என்றும் சீனாவின் யூனிட்ரீ ரோபோடிக்ஸ் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட Unitree Go2 என்ற வணிகரீதியிலான தயாரிக்கப்பட்ட ரோபோ நாய் என்றும் சீன ஊடகங்கள் கடுமையாக விமர்சித்தன.

அதையடுத்து நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் உலக அரங்கில் நாட்டை அவமானப்படுத்திவிட்டதாக தெரிவித்திருந்தார் நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி. அதன் தொடர்ச்சியாக ஏ.ஐ மாநாடு நடைபெற்று வரும் மாநாட்டு அரங்கில் சட்டையைக் கழற்றிவிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர் காங்கிரஸ் தொண்டர்கள்.

அந்த செயலை கண்டிக்கும் விதமாக புதுச்சேரி பா.ஜ.க சார்பில், நேற்று புதுச்சேரி காங்கிரஸ் கட்சி அலுவலகத்தின் எதிரில் போராட்டம் நடைபெற்றது. அப்போது காங்கிரஸ் கட்சி அலுவலகத்தின் எதிரில் ராகுல் காந்தியின் உருவபொம்மையை எரித்தனர்.

அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக இன்று பா.ஜ.க அலுவலகம் முன்பு ஒன்று திரண்ட காங்கிரஸ் கட்சியினர், ராகுல் காந்தியின் உருவ பொம்மையை எரித்தவர்களை கைது செய்யுமாறு கோஷமிட்டனர். அதேபோல பா.ஜ.க-வுக்கு எதிராகவும் கோஷங்களை எழுப்பினர். தொடர்ந்து பா.ஜ.க.வின் அலுவலகத்தையும் முற்றுகையிட முயற்சி செய்தனர். ஆனால் போலீஸார் பேரிகார்டுகள் மூலம் அவர்களை தடுத்து நிறுத்தினர்.

அப்போது பா.ஜ.க அலுவலக வாசலில் உருட்டுக்கட்டை, தடியுடன் நின்றிருந்த அக்கட்சியின் நிர்வாகிகள், காங்கிரஸ்காரர்களை ஆபாச வார்த்தைகளால் திட்டித் தீர்த்தனர். ஒருகட்டத்தில் போலீஸாரின் தடுப்பை மீறிச் சென்ற காங்கிரஸ்காரர்கள், பிரதமர் மோடியின் உருவ பொம்மையை எரித்தனர். அப்போது இருதரப்பினரும் கல் மற்றும் செருப்புகளை வீசித் தாக்கிக் கொண்டனர்.

அதில் இரு தரப்பினருக்கும் காயம் ஏற்பட்டதுடன், பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த எஸ்.பி உள்ளிட்ட போலீஸாருக்கும் காயம் ஏற்பட்டது. தொடர்ந்து அங்கு வந்த முன்னாள் முதல்வர் நாராயணசாமி, எம்.பி வைத்திலிங்கம், எம்.எல்.ஏ வைத்தியநாதன் உள்ளிட்டவர்கள், தாக்குதலில் ஈடுபட்ட பா.ஜ.க-வினரை கைது செய்ய வேண்டும் என்று போராட்டத்தில் அமர்ந்தனர். இதனால் அப்பகுதி பதற்றமாக காணப்பட்டது.

"அப்பாவுக்கு ஹார்ட் அட்டாக் வந்தப்போ கூட எடப்பாடி கண்டுக்கல" - தவெகவில் இணைந்த தனபாலின் மகன் வேதனை

அதிமுகவின் முன்னாள் சபாநாயகர் தனபாலின் மகன் லோகேஷ் உட்பட மாற்றுக்கட்சியினர் சிலர் விஜய் முன்னிலையில் தவெகவில் இணைந்திருக்கின்றனர்.தவெகவில் இணைந்தவர்கள்தவெகவில் இணைந்தவர்களின் பட்டியல் இங்கே:லோகேஷ் (மு... மேலும் பார்க்க

கருணாநிதி குடும்ப நிச்சயதார்த்தம்! - முதல்வர் ஸ்டாலினின் அமிர்தம் மாமா இல்ல விழா!

முதல்வர் மு.க. ஸ்டாலினின் மாமாவும், மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் மூத்த சகோதரியின் மகனுமான அமிர்தத்தின் பேத்தி இலக்கியா - டாக்டர். கிரிதரா திருமண நிச்சயதார்த்தம் நாளை சென்னையில் நடைபெற உள்ளது. முத... மேலும் பார்க்க

'டார்கெட் சவுத்' - ஆதவ்க்கு சென்னை; கொங்குக்கு செங்கோட்டையன்! - தேர்தல் பொறுப்பை ஒப்படைத்த விஜய்!

சட்டப்பேரவை தேர்தலுக்கான வேலைகள் பரபரக்க தொடங்கியிருக்கும் நிலையில், தவெக சார்பில் தேர்தல் கண்காணிப்பாளர்களை நியமித்து உத்தரவிட்டிருக்கிறார் விஜய். TVK Vijay - தவெக விஜய்தமிழகத்தில் உள்ள 38 மாவட்டங்கள... மேலும் பார்க்க

`தனியாக கட்சி துவக்கலாமா?' ஆலோசனை நடத்திய எம்.பி - அதிர்ச்சியில் காங்கிரஸ் தொண்டர்கள்!

“காங்கிரஸ் டெல்லி தலைமை அறிவிக்கும் வரை யாரும் கூட்டணி குறித்து ஏதும் பேசக்கூடாது” என காங்கிரஸ் மேலிட எச்சரிக்கைக்கு பிறகு, கூட்டணி குறித்த சர்ச்சை ஒய்ந்து, இப்போது தனிகட்சி சர்ச்சை ஆரம்பித்துள்ளது என... மேலும் பார்க்க

ட்ரம்பின் கருத்து: `மீண்டும் ஒருமுறை சரணாகதிதான்" - பிரதமர் மோடியை சாடும் ராகுல் காந்தி

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் உலக நாடுகளுக்கு விதித்த வரிகளுக்கு எதிராக அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணைக்குப் பிறகு, அமெரிக்க நீதிமன்றம், ``வரி விதிக்க நிர்வாகிகளுக்கு எந்த ... மேலும் பார்க்க