செய்திகள் :

சென்னை: வங்கியில் அடமானம் வைத்த தங்க நகைகளை நூதன முறையில் திருடிய உதவி மேலாளர் - சிக்கியது எப்படி?

post image

இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் அயனாவரம் கிளையில் மேலாளராக இருப்பவர் தினேஷ்குமார். இவர், 13.8.2026-ம் தேதி சென்னை போலீஸ் கமிஷனர் அமல்ராஜிடம் புகார் மனு ஒன்றைக் கொடுத்தார். அதில், அயனாவரம் கிளையின் உதவி மேலாளராக பணியாற்றிய பொட்னூரு முரளி கிருஷ்ணா என்பவர் வாடிக்கையாளர்கள் அடமானம் வைத்த தங்க நகைகளை திருடிச் சென்று அதற்கு பதிலாக போலி நகைகளை வங்கியில் வைத்து மோசடி செய்திருக்கிறார். வங்கியில் திருடப்பட்ட தங்க நகைகளின் மதிப்பு 3 கோடி ரூபாய்க்கு மேல் இருக்கும். இந்த நூதன மோசடியில் ஈடுபட்ட உதவி மேலாளர் பொட்னூரு முரளி கிருஷ்ணா மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார். அதன்பேரில் சென்னை மத்தியக் குற்றப்பிரிவு, வங்கி மோசடி புலனாய்வுப் பிரிவு போலீஸார் வழக்குபதிவு செய்து விசாரனையைத் தொடங்கினர்.

தங்க நகைகள்
தங்க நகைகள்

விசாரணையில் அயனாவரம் கிளையில் 21 வாடிக்கையாளர்கள் அடகு வைத்த 2,179 கிராம் தங்க நகைகளுக்குப் பதில் போலியான நகைகள் வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. அது தொடர்பாக உதவி மேலாளர் பொட்னூரு முரளிகிருஷ்ணா என்பவரிடம் போலீஸார் விசாரித்தனர். அப்போது அவர், வங்கியில் அடகு வைத்த நகைகளை வைத்திருக்கும் லாக்கரின் சாவி தன்னிடம் இருந்ததால் யாருக்கும் தெரியாமல் தங்க நகைகளைத் திருடி, அதை வேறு இடங்களில் அடகு வைத்திருப்பதாகத் தெரிவித்தார். பின்னர் அதன்மூலம் கிடைத்த பணத்தை ஆன்லைன் விளையாட்டிலும் (Online Game) சொந்த செலவுக்கும் பயன்படுத்தி விட்டதாகவும் போலீஸாரிடம் உதவி மேலாளர் கூறியிருக்கிறார். இதையடுத்து உதவி மேலாளர் பொட்னூரு முரளி கிருஷ்ணாவை (34) போலீஸார் கைதுசெய்தனர். இவர், சென்னை புரசைவாக்கத்தில் குடியிருந்து வருகிறார். இவரின் சொந்த ஊர், ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினம். விசாரணைக்குப் பிறகு உதவி மேலாளர் பொட்னூரு முரளி கிருஷ்ணாவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீஸார், சிறையில் அடைத்தனர். அதைத் தொடர்ந்து வங்கியிலிருந்து திருடப்பட்ட தங்க நகைகளை மீட்க போலீஸார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

இரவு பார்ட்டிக்கு எதிர்ப்பு, கேமரா மூலம் கண்காணிப்பு: ஆத்திரத்தில் மாமனாரை ஆள்வைத்து கொன்ற மருமகள்!

உத்தரப்பிரதேச மாநிலம், கான்பூரைச் சேர்ந்தவர் வினீத் மினோச்சா (63). தொழிலதிபரான இவரின் மருமகள் பெயர், ஷாலு. சம்பவத்தன்று வினீத் அவரது வீட்டில் 26 முறை கத்தியால் குத்திக் கொலைசெய்யப்பட்டார். இது தொடர்பா... மேலும் பார்க்க

நெல்லை: மது பாட்டிலுக்கு ஆசைப்பட்டு கார் கடத்திய இளைஞர்கள் - போதை தெளிந்ததும் சிறை சென்ற சோகம்!

நெல்லை டவுன், கல்லத்தி முடுக்கு தெருவைச் சேர்ந்தவர், சூர்ய சரவணன். பட்டப் படிப்பை முடித்த இவர், வேலை தேடிவருகிறார். தன் தந்தை குமரகுரு ராமலிங்கத்தின் காரை, சூர்ய சரவணன் பயன்படுத்தி வந்தார்.வீட்டுக்குள... மேலும் பார்க்க

`Will Kill Sugar Daddy Soon' - மனைவியைக் கொன்று தலையை ஃபிரிட்ஜில் வைத்த இளைஞர் `பகீர்' தகவல்!

அஸ்ஸாம் மாநிலம், கவுகாத்தியில் உள்ள அடுக்கு மாடிக் குடியிருப்பில் ஒரு வீட்டிலிருந்து வந்த துர்நாற்றத்தைத் தொடர்ந்து, பக்கத்து வீட்டுக்காரர்கள் இது குறித்து போலீஸாருக்குத் தகவல் கொடுத்தனர். போலீஸார் வி... மேலும் பார்க்க

குழந்தை திருமணங்களால் மூன்று சிறுமிகள் கர்ப்பம்! – போக்சோ வழக்கில் இளைஞர்களை தேடும் கடலூர் போலீஸ்

கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடி அருகே இருக்கும் ஒரு கிராமத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமி, செவிலியர் கல்லூரியில் படித்து வருகிறார். சில தினங்களுக்கு முன்பு உடல்நிலை சரியில்லை என்று மருத்துவமனைக்குச் சென்... மேலும் பார்க்க

மும்பை விமான நிலையத்தில் பயணிகள் பேக்கில் தொடரும் பணம், நகை திருட்டு! குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை

மும்பை விமான நிலையத்தில் பயணிகளின் பேக்கில் இருந்து அடிக்கடி திருட்டு நடக்கிறது. சமீபத்தில் மும்பையில் இருந்து நியூயார்க் சென்ற மாணவர் ஒருவரின் பேக்கில் இருந்து 5 ஆயிரம் அமெரிக்க டாலர் திருட்டு போனது.... மேலும் பார்க்க

வீட்டிக்கு வெளியில் மது அருந்தியதை தட்டிக்கேட்ட மணிப்பூர் பாடகர் - அடித்து கொன்ற ஹோட்டல் ஊழியர்கள்

மணிப்பூரை சேர்ந்த பாடகர் விக்ரம் சிங் என்பவர் டெல்லி அருகில் உள்ள கிலோகரி என்ற கிராமத்தில் பல ஆண்டுகளாக வசித்து வந்தார். அவரது வீட்டிற்கு அருகில் ஒரு ஹோட்டல் இருக்கிறது. அங்குள்ள விக்ரம் சிங் வீட்டிற்... மேலும் பார்க்க