கேரளா: பாங்கோடு ராணுவ முகாமில் டிஜே பார்ட்டி; 2 யானை தந்தங்கள் கொள்ளை... விசாரணை...
சேலத்தில் சமையல் சூப்பர் ஸ்டார்: விதவிதமான ரெசிபிக்கள்; சுண்டி இழுத்த சுவை! இறுதிப் போட்டியில் மூவர்
சக்தி மசாலா, சத்யா ஏஜென்சீஸ், அவள் விகடன், நாகா, கோல்டு வின்னர், எக்ஸோ, அஸ்வின் ஸ்வீட்ஸ், ஆர்.கே.ஜி நெய், லலிதா ஜுவல்லரி, சௌபாக்யா, சுப்ரீம் ஃபர்னீச்சர், இன்டேன், மெரீபா பன்னீ்ர், ஹே கிளாதிங், விகடன் பிளே, ஹலோ எஃப்எம், செளடேஸ்வரி மகளிர் கல்லூரி ஆகியவை இணைந்து வழங்கும் “உங்கள் சமையல் திறமைக்கான சவால் மேடை” என்ற தலைப்பிலான அவள் விகடன் சமையல் சூப்பர் ஸ்டார் சீசன்-3 போட்டி, புதுச்சேரி மற்றும் வேலூரைத் தொடர்ந்து, சேலம் செளடேஸ்வரி மகளிர் கல்லூரியில் ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி 16) நடைபெற்றது.
இப்போட்டிக்கு பிரபல சமையல் கலைஞர் தீனா நடுவராக கலந்துகொண்டார். இந்த நிகழ்ச்சியில், சேலம் நகரம், நாமக்கல், சங்ககிரி, தர்மபுரி, கோவை, ஈரோடு மற்றும் கேரள மாநிலத்தின் திருவனந்தபுரம் மற்றும் சேலம் நகரைச் சுற்றியுள்ள அன்னதானப்பட்டி, லைன்மேடு, அழகாபுரம், தாதகாப்பட்டி, தாசநாயக்கன்பட்டி, மல்லூர் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து 96 பேர் கலந்து கொண்டனர்.

அசத்திய போட்டியாளர்கள்:
இரண்டு சுற்றுகளாக நடைபெற்ற போட்டியின், முதல் சுற்றில் போட்டியாளர்கள் 96 பேரும் தங்கள் வீட்டில் இருந்து சமைத்து கொண்டு வந்திருந்த உணவுகளை காட்சிப்படுத்தினர். அதில், திணை, ராகி கேக், செவ்வாழைப்பழம் கேக், இளநீர் சாதம், கருவேப்பிலை, முருங்கை கலந்த மல்லி ஃப்ரைட் ரைஸ், பெப்பர் தயிர் சட்னி, உளுந்து புட்டு, ராகி தோசை, விளாம்பழம் அல்வா, ஹோம்மேட் சவான், பிராஸ் இந்தூரி பீத்தா, நரி பயிறு சாலட், அகத்திக்கீரை மருந்துக் குழம்பு, அரவணை பாயாசம், அஸ்திரம், சிகப்பு அரிசி கஞ்சி, சங்குப்பூ கொழுக்கட்டை, சுக்கு லேகியம், இன்சுலின் இலை சூப், முள்முருங்கை பொடி, லெமன் புட்டிங், ஏபிசி மால்ட் புட்டிங், தேங்காய் புட்டிங், காலிஃப்ளவர் பபுல்ஸ், சிக்கன் இலை பரோட்டா, சிக்கன் கப்சா, தானியா புலாவ், ஆரிய பால் சிக்கன் கிரேவி, அரேபியன் புட்டிங், புளிச்சக்கீரை சாதம், உக்காணி புலாவ், திக்குடி ஆட்டுக்கால் கிரேவி, சுரைக்காய் சப்பாத்தி, முந்திரி கிரேவி, நல்லம்பட்டி சிக்கன், பனங்கிழங்கு புட்டு, பிடி கொழுக்கட்டை, இந்தூர் போகா, நாக்பூர் சாபுதானா, அகத்தி பூ பூரி போன்ற பல்வேறு வெளிமாநில மற்றும் அண்டை நாடுகளின் உணவுகளும் காட்சிப்படுத்தப்பட்டன. இதில் சிறுவர்களும் தாங்கள் சமைத்த உணவினை காட்சிப்படுத்தினர்.

சமையல் கலைஞர் தீனா ஒவ்வொருவரும் காட்சிப்படுத்திருந்த உணவை ருசிபார்த்து மதிப்பெண் வழங்கினார். சுவை, ஆரோக்கியம், செய்முறை மற்றும் காட்சிப்படுத்திய விதம் உள்ளிட்ட அவற்றின் அடிப்படையில் 10 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். முன்னதாக, முதல் சுற்று முடிந்து காத்திருந்த போட்டியாளர்களை உற்சாகப்படுத்துவதற்காக கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு பரிசுகளும் வழங்கப்பட்டன.
சத்யா மொபைல்ஸ், சௌபாக்யா, நாகா சுப்ரீம் ரவை நிறுவனங்கள் சார்பில் முதல் சுற்றில் சிறப்பாக வீட்டில் இருந்து உணவு சமைத்து எடுத்து வந்து காட்சிப்படுத்தியவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. நாகா ரவை நிறுவனம் சார்பாக "நாகா சுவை சாம்பியன் பட்டம்" சுமதி என்பவருக்கு வழங்கப்பட்டது.
விகடன் சார்பில் மூன்று பேருக்கு சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டன. இதைத் தொடர்ந்து, முதல் சுற்றில் தேர்ந்தெடுக்கப்பட்ட 10 பேருக்கான லைவ் குக்கிங் போட்டி நடைபெற்றது. இதில், நாகா பிராண்ட் ரவை, கோல்டு வின்னர் மற்றும் சக்தி மசாலாவைப் பயன்படுத்தி மூன்று ரெசிபிகள் சமைக்க வழங்கப்பட்டது.

சப்பாத்தி, சீரக சம்பா சிக்கன் பிரியாணி, சர்க்கரைவள்ளி கிழங்கு பப்பட், ரவா பால் பணியாரம், ரவா ஊத்தாப்பம், செட்டிநாடு சிக்கன் சுக்கா, சீனிக்கிழங்கு ஹல்வா, கருப்பு எள்ளு, சிக்கன் வருவல், கொத்தவரங்காய் பருப்பு பாயாசம், அரிசி ரொட்டி, கோதுமை ரவை கேசரி, கோதுமை ரவை உருண்டை, சக்கரவள்ளி கிழங்கு சாதம், பன்னீர் போர்த்தா, கேரமல் கோதுமை ரவா பாயாசம், சக்கரவள்ளி கிழங்கு ரவை ஆம்லெட் என பத்து போட்டியாளர்களும் வகை வகையான ரெசிப்பிகளை செய்து அசத்தியிருந்தனர்.
கடும் போட்டி நிலவிய சூழலில் சுவையான ரெசிப்பிகளை செய்திருந்த வெண்ணிலா வாசு, பானுரேகா, சத்யா ஆகியோர் சென்னையில் நடைபெறும் லைவ் குக்கிங் இறுதிப் போட்டிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதையடுத்து, சக்தி மசாலா, சத்யா ஏஜென்சீஸ், அவள் விகடன், நாகா, கோல்டு வின்னர், எக்ஸோ, அஸ்வின் ஸ்வீட்ஸ், ஆர்.கே.ஜி நெய், லலிதா ஜுவல்லரி, சௌபாக்யா, சுப்ரீம் ஃபர்னீச்சர், இன்டேன், மெரீபா பன்னீ்ர், ஹே கிளாதிங் ஆகிய நிறுவனங்கள் லைக் குக்கிங்கள் கலந்து கொண்ட மற்ற ஏழு போட்டியாளர்களுக்கு சிறப்பு பரிசுகளை வழங்கினர்.



















