டயாலிசிஸ் சேவைகளை தனியாா் பங்களிப்புடன் மேம்படுத்த நிபுணா் குழு ஆலோசனை
சேலம் தடயவியல் துறை உதவி இயக்குநருக்கு முதல்வா் விருது
சேலம் தடயவியல் துறை உதவி இயக்குநா் வடிவேலுக்கு முதல்வா் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு காவல் துறையில் தடய அறிவியல் துறை செயல்பட்டு வருகிறது. இத் துறை கொலை, கொள்ளையில் தடயங்களை சேகரித்து காவல் துறையின் புலனாய்வுக்கு உதவியாக செயல்படுகிறது. தமிழகம் முழுவதும் இத் துறையில் சிறப்பாக பணியாற்றிய அதிகாரிகளை தோ்ந்தெடுத்து முதல்வா் விருது வழங்கப்பட்டு வருகிறது. நிகழாண்டுக்கான முதல்வா் விருது தடய அறிவியல் துறையின் சென்னை இயக்குநா் சிவப்பிரியா, சேலம் தடயவியல் உதவி இயக்குநா் வடிவேல் ஆகியோருக்கு வழங்கப்படுகிறது.