Bigg Boss Tamil 9: கடைசி வாரத்தில் வெளியேறிய வைல்டு கார்டு போட்டியாளர்!
சேலம்: பட்டா பெயர் மாற்றத்திக்கு லஞ்சம்; ஓய்வுபெற இருந்த வருவாய் ஆய்வாளர் கைது; நடந்தது என்ன?
சேலம் மாவட்டம், ஆத்தூர் மந்தவெளி பகுதியைச் சேர்ந்தவர் ஈஸ்வரன். இவரது தாய் பச்சியம்மாள் பெயரில் உள்ள பட்டாவை தனது பெயருக்கு மாற்றம் செய்ய ஆத்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் மனு அளித்திருந்தார்.
அந்த மனுவை விசாரித்த தனி வட்டாட்சியர் அலுவலகத்தில் முதுநிலை ஆய்வாளராகப் பணியாற்றி வரும் பெரியசாமி என்பவர், பட்டாவில் பெயர் மாற்றம் செய்வதற்கு, ஈஸ்வரனிடம் ரூ. 20 ஆயிரம் லஞ்சமாகக் கேட்டுள்ளார்.
லஞ்சம் கொடுக்க விரும்பாத ஈஸ்வரன், இதுகுறித்து சேலம் லஞ்ச ஒழிப்பு போலீஸில் புகார் அளித்துள்ளார்.

அவர்கள் ரசாயனம் தடவப்பட்ட ரூ.15,000-ஐ ஈஸ்வரனிடம் கொடுத்து அனுப்பியுள்ளனர். அவர்கள் அறிவுறுத்தலின் பேரில், ரசாயனம் தடவிய லஞ்சப் பணத்தை பெரியசாமியிடம் ஈஸ்வரன் வழங்கினார். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீஸார் பெரியசாமியைக் கைது செய்தனர்.
தொடர்ச்சியாக அவரிடம் விசாரணை மேற்கொண்டபோது, பெரியசாமி மயங்கி விழுந்த நிலையில் ஆத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். பெரியசாமி மூன்று மாதங்களில் ஓய்வுபெற இருந்த நிலையில், லஞ்சம் பெற்று கைதாகியுள்ளார்.














